என்டிஏ கூட்டணிக்கு யார் தலைமை? நயினாரின் "அந்த" ஒரு அறிவிப்பு.. எடப்பாடிக்கு அதிகரிக்கும் பிரஷர்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தலையொட்டி கூட்டணியை இறுதி செய்யும் நடவடிக்கையில் அனைத்துக் கட்சிகளும் இறங்கியுள்ளன. கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்த பாஜக இப்போது குழு ஒன்றை அமைத்துள்ளது. வழக்கமாக கூட்டணிக்குத் தலைமை தாங்கும் கட்சியே இதுபோல குழுவை அமைக்கும் நிலையில், பாஜகவின் இந்த நடவடிக்கை கூட்டணிக்கு உண்மையில் யார் தலைமை என்ற கேள்வியை எழுப்புவதாகவே உள்ளது.

தமிழ்நாட்டில் சீக்கிரமே சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. மே மாதம் சட்டமன்றத்தின் பதவிக்காலம் முடியும் நிலையில், அதற்குள் தேர்தல் நடந்து முடிவுகள் அறிவிக்கப்பட வேண்டும். தேர்தல் குறித்த அறிவிப்பு ஓரிரு வாரங்களில் வெளியாகும் எனத் தெரிகிறது. இதனால் கூட்டணியை இறுதி செய்யும் நடவடிக்கைகளில் அனைத்துக் கட்சிகளும் இறங்கியுள்ளன.

Tamil nadu election 2026 AIADMK or BJP Who is the boss of NDA Nainar Nagendran move sparks Questions

என்டிஏ கூட்டணி

அதில் அதிமுகவைப் பொறுத்தவரை, ஓராண்டுக்கு முன்பே அவர்கள் என்டிஏ கூட்டணியை உறுதி செய்தனர். அதன் பிறகு பல மாதங்களாக வேறு எந்தக் கட்சியும் கூட்டணிக்குள் வரவில்லை. நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு, பாமக மற்றும் அமமுக கட்சிகள் கூட்டணிக்குள் வந்தன. வேறு பல சிறிய கட்சிகளும் என்டிஏ கூட்டணியில் இணைந்தன. கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அனைவரும் பிரதமர் மோடி பங்கேற்ற மதுராந்தகத்தில் என்டிஏ கூட்டணி பொதுக்கூட்டத்தில் மேடை ஏற்றப்பட்டனர்.

குழு அமைத்த பாஜக

இதற்கிடையே பல்வேறு அமைப்புகளும் என்டிஏ கூட்டணியில் இணைய ஆர்வம் காட்டி வருவதாகவும் இதனால் பேச்சுவார்த்தை நடத்த குழுவை அமைப்பதாகவும் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அறிவிப்பை வெளியிட்டார். அதில், "வருகின்ற சட்டமன்ற தேர்தல்-2026 சிறப்பாக எதிர்கொண்டு, மகத்தான வெற்றியினை பெற்றிடும் வகையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் மேலும் பல அமைப்புகள் இணைய விருப்பம் தெரிவித்துள்ள நிலையில், அமைப்பு தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி, தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வலுசேர்த்திட பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாநில குழு அமைக்கப்படுகிறது" என கூறப்பட்டுள்ளது.

Tamil nadu election 2026 AIADMK or BJP Who is the boss of NDA Nainar Nagendran move sparks Questions

மாநில துணைத் தலைவர் துரைசாமி மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர் பாலச்சந்திரன் ஆகியோரைக் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு என்டிஏ பேச்சுவார்த்தையை நடத்தும் எனக் கூறப்பட்டுள்ளது. ஆனால், இந்த அறிவிப்பு பலருக்கும் ஆச்சரியத்தையே ஏற்படுத்தியுள்ளது.

முக்கியம்

ஏனென்றால் ஒரு பக்கம் அதிமுக தலைவர்கள், இந்தக் கூட்டணிக்கு அதிமுகவே தலைமை என்றும் இது அதிமுக கூட்டணி என்றும் சொல்லி வருகிறார்கள். எப்போதும் எந்தக் கட்சி கூட்டணிக்குத் தலைமை தாங்குகிறதோ.. அந்தக் கட்சியே கூட்டணி பேச்சுவார்த்தைகளை நடத்த குழுவை அமைக்கும். ஆனால், இங்கு அதிமுகவுக்கு பதிலாக பாஜக இந்தக் குழுவை அமைத்துள்ளதே பலருக்கும் ஆச்சரியத்தைக் கொடுத்துள்ளது.

யார் தான் தலைமை

மேலும், கடந்த காலங்களிலும் கூட அனைத்துக் கூட்டணிக் கட்சித் தலைவர்களுமே தமிழ்நாடு பாஜக தேர்தல் பொறுப்பாளரான பியூஷ் கோயலை சந்தித்த பிறகே கூட்டணியில் இணைவதாக அறிவித்தனர். பாமக தலைவர் அன்புமணியை தவிர, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தொடங்கி அனைவருமே பியூஷ் கோயலையே சந்தித்து கூட்டணியில் இணைந்தது குறிப்பிடத்தக்கது. அதைத் தொடர்ந்தே மோடி நிகழ்ச்சியிலும் மேடை ஏறினர்.

இந்தச் சூழலில் தான் பேச்சுவார்த்தை நடத்தவும் பாஜக குழுவை அமைத்துள்ளது. இதனால் கூட்டணிக்கு உண்மையில் யார் தான் தலைமை என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+