பேச்சுவார்த்தை, சொதப்பல், ரிப்பீட்டு.. காங்கிரஸால் வெல்லும் பாஜக! தேர்தல் வந்தா இதே வேலையா போச்சு
சென்னை: தமிழ்நாட்டில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் அதிக இடங்கள் கேட்டு பிரஷர் போடுகிறது. இதனால் கூட்டணி முறியும் ஒரு ஆபத்து ஏற்பட்டுள்ளது. அதேநேரம் காங்கிரஸ் இப்படிச் செய்வது இது முதல்முறை இல்லை. ஒவ்வொரு மாநிலத்திலும் காங்கிரஸ் கூட்டணி அமைப்பதில் சொதப்புவது தொடர்ந்தே வருகிறது. இது பாஜகவுக்கே சாதகமாக மாறுகிறது.
தமிழ்நாட்டில் திமுக காங்கிரஸ் கூட்டணியில் குளறுபடி ஏற்பட்டுள்ளது. கூடுதல் சீட் கேட்டு காங்கிரஸ் பிரஷர் போட்டு வருவதால் தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நிலவுகிறது. அதேநேரம் காங்கிரஸ் இதுபோல செய்வது இது முதல்முறை இல்லை. ஒவ்வொரு முறையும் தேர்தல் வரும்போது கடைசி நேரத்தில் குழப்பத்தை ஏற்படுத்துவது வாடிக்கையாகவே இருக்கிறது. இது தேர்தல் பிரச்சாரத்தை மிகக் கடுமையாகவே பாதிக்கிறது.

குஜராத்
கடந்த 2022ம் ஆண்டு இப்படி தான் குஜராத்தில் நடந்தது. குஜராத்தைப் பொறுத்தவரை அங்கு பாஜக மிக வலிமையாக இருக்கிறது. 1998க்கு பிறகு அங்கு பாஜகவே ஆட்சியைப் பிடித்துள்ளது. அந்தளவுக்கு வலிமையாக இருக்கும் பாஜகவை எதிர்கொள்ள வேண்டும் என்றால் எதிர்க்கட்சிகள் ஒரே அணியில் நிற்க வேண்டும். அங்குக் காங்கிரஸால் தனித்து பாஜகவை எதிர்கொள்ள முடியாது.
அப்படிப் பார்த்தோம் என்றால் அங்கு மற்றொரு எதிர்க்கட்சியாகக் களத்தில் இருக்கும் ஆம் ஆத்மியுடன் பாஜக சேர்ந்து நின்றிருக்க வேண்டும். இது தொடர்பாகப் பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடந்தபோதிலும், கூட்டணியை இறுதி செய்வதில் காங்கிரஸ் கோட்டைவிட்டது. எதிர்ப்பு வாக்குகள் பிரியவே பாஜக மிக ஈஸியாக வென்றது. மொத்தமுள்ள 182 தொகுதிகளில் 156 இடங்களில் பாஜக பிரம்மாண்ட வெற்றி பெற்றது. காங்கிரஸ் வெறும் 17 இடங்களை வென்றது. ஆம் ஆத்மியும் 5 இடங்களில் மட்டுமே வெல்ல முடிந்தது.
ஹரியானா
ஹரியானாவிலும் கிட்டத்தட்ட அதேதான் நடந்தது. அங்கும் 2024ல் தேர்தல் நடந்த நிலையில், ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை ஒரே அணியில் திரட்ட காங்கிரஸ் தவறியது. இதனால் பாஜக மிக எளிதாக வென்றது. அங்கு மொத்தம் 90 இடங்கள் உள்ள சூழலில் பாஜக 48ல் வென்றது. காங்கிரஸ் 37ல் மட்டுமே வென்று ஆட்சியை அமைக்க முடியாமல் போனது. அங்குக் காங்கிரஸ் இன்னும் கொஞ்சம் எதிர்க்கட்சிகளை முறையாக ஒருங்கிணைத்து இருந்தால் ஆட்சியைப் பிடித்திருக்கும் என்ற பேச்சு அப்போதே அடிப்பட்டது.
2025 தேர்தல்கள்
2025ல் இரு முக்கியமான மாநிலங்களில் காங்கிரஸ் இதே வேலையைத் தான் செய்தது. டெல்லியில் ஆம் ஆத்மி காங்கிரஸ் இடையே கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடந்தன. பல கட்ட பேச்சுவார்த்தை நடந்த போதிலும் இந்த கூட்டணி இறுதியாகவில்லை. இதனால் இரு தரப்பும் தனித்தே போட்டியிட்டது. அது பாஜகவுக்குச் சாதகமாகப் போனது. மொத்தமுள்ள 70 இடங்களில் 48ல் வென்று பாஜக ஆட்சியைப் பிடித்தது.
கடந்த நவம்பரில் இதேதான் பீகாரிலும் நடந்தது. அங்கு நிதிஷ்- பாஜக கூட்டணி பிரச்சாரத்தைத் தீவிரமாக நடத்தி வந்த நிலையில், காங்கிரஸ் கடைசி வரை தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்யவே இல்லை. வேட்புமனு தாக்கல் தேதி இறுதியாகும் வரையிலும் கூட தொகுதிப் பங்கீடு இறுதியாகவில்லை. அதன் பிறகே ஒரு மாதிரி தொகுதிப் பங்கீடு இறுதியானது.
மேலும், அப்போதும் கூட தேஜஸ்வியை முதல்வர் வேட்பாளராக அறிவிக்கக் காங்கிரஸ் ரெடியாக இல்லை. கடைசி நொடியில் தான் தேஜஸ்வி தான் முதல்வர் வேட்பாளர் என்பதைக் காங்கிரஸ் ஏற்றது. இந்த கடைசி நேர டிராமாவால் எதிர்க்கட்சியினரால் முறையாகப் பிரச்சாரம் செய்ய முடியவில்லை. அந்த நேரத்தில் வழக்கம் போல பாஜக இறங்கி அடிக்கவே பாஜகவுக்குப் பெரிய வெற்றி கிடைத்தது.
லிஸ்ட் ரொம்ப பெரிசு
2024 லோக்சபா தேர்தல் திரிணாமுல் உடன் கூட்டணி அமைக்கத் தவறியது, 2025 மும்பை உள்ளாட்சித் தேர்தல் தனித்துப் போட்டியிட்டது எனக் காங்கிரஸ் குளறுபடிகளைப் பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.. காங்கிரஸ் கடைசி நேரத்தில் இப்படிச் சொதப்புவதாலேயே வெற்றி பெறும் சூழலில் இருக்கும் போதிலும், அது பெரும் தோல்வியில் முடிகிறது.
-
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
திமுக ஜாக்பாட் அறிவிப்பு! ரூ.8000 கூப்பன்.. TV, Fridge, மிக்சி, மைக்ரோவேவ் அவன்! யாருக்கு கிடைக்கும் -
காங்கிரஸ் VS பாஜக.. தமிழகத்தில் எந்தெந்த தொகுதிகளில் ‘கை' - ‘தாமரை' நேரடி மோதல்.. வெல்வது யாரு? -
எழும்பூர்.. திமுகவின் இரும்புக்கோட்டை.. தவெக ராஜ்மோகனுக்கு ‘டெபாசிட்’ கிடைப்பதே சவால்.. ஏன்? -
திமுக ஏஜெண்ட் செல்வப் பெருந்தகை.. காங்கிரஸில் வெடித்த கலகம்! டெல்லிக்கு டிக்கெட் போடும் கதர் தலைகள்! -
Rahul Gandhi: தமிழக அரசியல் மீது ராகுல் காந்தியின் பாராமுகம்… திமுக தலைமை மீது அதிருப்தியா? -
அதிமுக மாஜிகளுக்கு கட் அவுட்..திமுக உ.பி.களுக்கு கெட் அவுட்டா? 19 சீட்டுகளை அள்ளிய ’அம்மா’ பிள்ளைகள் -
எம்.எல்.ஏ பதவியா? மேயர் நாற்காலியா? ஆட்சிக்கு வந்ததுமே ஸ்டாலினுக்கு ‘செக்’ வைத்த ஜெயலலிதா -
ஸ்டாலின் பிரச்சாரத்துக்கு ரெடி.. “குறுக்க யாரும் வந்துடாதீங்க”.. அறிவிப்பில் வந்த எச்சரிக்கை! -
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் பட்டியல் வெளியானது.. சின்னதுரைக்கு மீண்டும் வாய்ப்பு! -
நாங்க 10000..அவங்க 8000 தான்! அத்தைக்கு மீசை வச்சா சித்தப்பா மாதிரி இருக்கு! திண்டுக்கல்லார் ராக்ஸ்! -
அரசு அலுவலர், ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு! ஸ்டாலின் சொன்ன மேஜர் அறிவிப்பு! திமுக சிக்ஸர் வாக்குறுதி












Click it and Unblock the Notifications