விறுவிறு திமுக.. இன்று கமல் கட்சியுடன் தொகுதி பங்கீடு.. அதிகபட்சமே "இவ்வளவு" சீட் தானாம்!
சென்னை: திமுக இப்போது தனது தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தைகளில் தீவிரமாக இறங்கி வருகிறது. வரிசையாக பல்வேறு கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டை முடித்து வருகிறது. இதற்கிடையே இன்றைய தினம் கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் திமுக தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையை நடத்துகிறது. மநீம தனது விருப்ப பட்டியலை திமுகவுக்கு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தல் நெருங்கும் சூழலில் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை தீவிரமடைந்துள்ளது. அதிமுக கூட்டணியை உறுதி செய்தாலும் இதுவரை தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையை ஆரம்பிக்கவில்லை. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகே அதிமுக தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையை நடத்தும் எனத் தெரிகிறது.

ஆனால், மறுபுறம் திமுக தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையைத் தீவிரப்படுத்தியுள்ளது. ஏற்கனவே சிறிய கட்சிகள் உடன் தொகுதிப் பங்கீட்டை திமுக நிறைவு செய்துள்ளது. காங்கிரஸைத் தவிர பெரும்பாலான கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு சீராகவே போய்க் கொண்டு இருக்கிறது.
இந்தச் சூழலில் இன்றைய தினம் திமுக கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் திமுக தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையை நடத்துகிறது. மநீம தனது விருப்ப பட்டியலை திமுகவுக்கு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மக்கள் நீதி மய்யம் மொத்தம் 15 தொகுதிகளைக் கொண்ட விருப்ப பட்டியலை திமுக தரப்பிடம் வழங்குகிறது.
அதிக அளவில் கூட்டணிக் கட்சிகள் திமுகவில் இருப்பதால் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஒற்றை இலக்கத்திலேயே சீட்கள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2021 தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் 140 தொகுதிகளில் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.
-
காங்கிரஸ் மீது கடும் அப்செட்டில் ஸ்டாலின்.. வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்துக்கு கிளம்ப திட்டம்! -
ஸ்டாலின் வீசிய பிரம்மாஸ்திரம்.. கூட்டணி கட்சிகளுக்கு குறைவாக சீட் தந்து சமாளித்தது எப்படி? பின்னணி -
திமுக vs காங்கிரஸ்.. 5 தொகுதிகளில் நேரடி போட்டி! பீகார் ஸ்டைலில் புதுவையிலும் நடக்கும் சம்பவம் -
கமல்ஹாசனின் மநீம தேர்தலில் போட்டியிட வேண்டும்.. ஸ்டாலினுக்கு வேண்டுகோள் வைத்த திருமாவளவன்! -
எஸ்டிபிஐ, கருணாஸ்க்கு தலா 1 தொகுதி ஒதுக்கீடு.. உதயசூரியன் சின்னத்திலேயே போட்டி.. எந்த தொகுதி? -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
கலைஞரின் மகள் கனிமொழி நெல்லையில் போட்டியா? அடம் பிடிக்கும் ஆதரவாளர்கள்! தலைமை போடும் வேறு கணக்கு! -
நம்பர் 1 முதல்வர் யார்? டாப் 5 லிஸ்ட்டில் யார் யார்? 1952 ராஜாஜி முதல் 2021 ஸ்டாலின் வரை! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
திமுக கூட்டணியில் அடுத்த விக்கெட்? தனியரசு விலக முடிவு.. அதிருப்தியின் பின்னணி -
மதுரை தெற்கில் பாஜக வெல்லுமா.. செளராஷ்டிரா வாக்குகளை நம்பும் ராம சீனிவாசன்.. பூமிநாதன் சமாளிப்பாரா? -
உடையும் கூட்டணி? திமுக முதுகில் குத்திய காங்கிரஸ்! நேருக்கு நேர் தோழமைகளுடன் மோதும் கதர் தலைகள்?











Click it and Unblock the Notifications