திமுக கூட்டணிக்கு 172 முதல் 178 இடங்கள்.. அதிமுக சறுக்கல்.. அப்போ தவெக.. வெளியான பரபர சர்வே!
சென்னை: 2026 சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி 172 முதல் 178 இடங்களைக் கைப்பற்றி மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்று போல் டிராக்கர் (Poll Tracker) கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இக்கூட்டணியின் வாக்கு சதவீதம் 42.7% ஆக இருக்கும் என்று கூறப்பட்டு உள்ளது.
அரசியல் சதுரங்கத்தில் காய்கள் நகரத் தொடங்கிவிட்டன. 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான 'முன்னோட்டம்' எனச் சொல்லப்படும் போல் டிராக்கர் கணிப்புகள், அறிவாலயத்தை உற்சாகத்தின் உச்சத்துக்கே கொண்டு சென்றிருக்கிறது.

போல் டிராக்கர் (Poll Tracker) கணிப்பின்படி, வரும் 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் கட்சிகள் பெறக்கூடிய இடங்கள் மற்றும் வாக்கு சதவீத விவரம் இதோ:
திமுக கூட்டணி: 172 முதல் 178 இடங்களைக் கைப்பற்றி மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இக்கூட்டணியின் வாக்கு சதவீதம் 42.7% ஆக இருக்கும்.
அதிமுக: 46 முதல் 52 இடங்கள் வரை பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களது வாக்கு சதவீதம் 30.3% ஆகும்.
தமிழக வெற்றிக் கழகம் (TVK): முதல் தேர்தலிலேயே 6 முதல் 12 இடங்களைப் பிடிக்கும் என்றும், 19.2% வாக்குகளைப் பெறும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
நாம் தமிழர் கட்சி (NTK): 0 முதல் 2 இடங்கள் வரை கிடைக்க வாய்ப்புள்ளது. இவர்களது வாக்கு சதவீதம் 5.1% ஆக இருக்கும்.
இதர கட்சிகள்: இடங்கள் எதுவும் கிடைக்க வாய்ப்பில்லை என்றும், 2.8% வாக்குகளைப் பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிவாலயத்தின் 'மெஜாரிட்டி' மேஜிக்!
கணிப்பின்படி 172 - 178 இடங்கள் என்பது ஆளுங்கட்சிக்கு மிகப்பெரிய 'பூஸ்ட்'. 42.7 சதவீத வாக்கு வங்கி என்பது சாதாரண விஷயமல்ல. "எதிர்ப்பலைகளை விட, எங்களின் மக்கள் நலத் திட்டங்களே எங்களைக் கரையேற்றும்" என உடன்பிறப்புகள் இப்போதே உற்சாகத்தில் இருக்கும் நேரத்தில் இந்த கணிப்பு வந்துள்ளது. மீண்டும் ஒருமுறை 'ஸ்டாலின் ஸ்டைல்' மேஜிக் வேலை செய்யுமா என்பதைப் பார்க்க கோட்டை காத்திருக்கிறது.
எடப்பாடியின் 'சறுக்கல்' கணக்கு!
மறுபுறம், பிரதான எதிர்க்கட்சியான அதிமுக 46 - 52 இடங்களில் மட்டுமே வந்து நிற்பது ரத்தத்தின் ரத்தங்களுக்குச் சற்று அதிர்ச்சிதான். 30.3 சதவீத வாக்குகள் உறுதியாக இருந்தாலும், மெஜாரிட்டிக்கு இன்னும் பல தூரம் கடக்க வேண்டியிருக்கிறது. "கணிப்புகள் ஒருபுறம் இருக்கட்டும், களத்தில் காத்துக்கிடக்கும் இரட்டை இலை மேஜிக்கைப் பாருங்கள்" என எடப்பாடியார் தரப்பு நம்பிக்கையுடன் காய் நகர்த்துகிறது.
விஜய்யின் 'என்ட்ரி' - அதிர்ஷ்டமா? அதிர்ச்சியா?
இந்தக் கணிப்பில் ஹைலைட்டே தவெக (TVK) தான். இன்னும் முழுமையாகத் தேர்தல் களத்தில் குதிக்காத நிலையிலேயே 19.2 சதவீத வாக்குகள் மற்றும் 6 - 12 இடங்கள் என்பது 'தளபதி' ரசிகர்களுக்குப் பெரிய கொண்டாட்டம். இது வெறும் ஆரம்பம் தான் என்பது தவெக-வினரின் வாதம். ஆனால், இந்த வாக்குகள் யாருடைய ஓட்டுகளைப் பிரிக்கிறது என்பதில் தான் ஆட்டமே இருக்கிறது.
சீமானின் 'தனிப்பாதை'
நாம் தமிழர் கட்சிக்கு 0 - 2 இடங்கள் மற்றும் 5.1 சதவீத வாக்குகள் எனக் கணிக்கப்பட்டுள்ளது. எப்போதும் போலவே "நாங்க தனித்துப் போட்டி" என்பதில் உறுதியாக இருக்கும் தம்பிகளுக்கு, இந்த முறை சட்டமன்றத்தில் 'மைக்' கிடைக்குமா என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி.+
இந்தக் கணிப்புகள் ஒரு திசையைக் காட்டினாலும், தமிழக வாக்காளர்களின் மனநிலை கடைசி நிமிடத்தில் 'யூ-டர்ன்' அடிப்பதில் வல்லது. இப்போதைக்கு கணிப்பின்படி பார்த்தால், உதயசூரியன் பிரகாசமாகவே தெரிகிறது. ஆனால், கோடை வெயிலை விடத் தேர்தல் களம் இன்னும் சூடாகப்போவது மட்டும் உறுதி!
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது!












Click it and Unblock the Notifications