தமிழகத்தில் முதல் முறையாக ஒரு கிறிஸ்தவர் CM ஆகிறார்! TVK தலைவர் விஜய் வரலாற்று சம்பவம்

Subscribe to Oneindia Tamil

தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் இன்று ஒரு புதிய அத்தியாயம் எழுதப்படும் வாய்ப்பு உருவாகியுள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தமிழக வெற்றிக் கழகம் (TVK) அமோக வெற்றியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

TVK 106 தொகுதிகளில் முன்னிலையில் உள்ள நிலையில், நடிகரும், தவெக கட்சி தலைவருமான விஜய் தமிழ்நாட்டின் அடுத்த முதலமைச்சராக உருவாகும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

2026 106 Tamil Nadu Election 2026 Vijay First Christian CM TVK 106 Seats Lead Thalapathy Vijay CM DMK Setback 2026 tamil nadu election 2026 thalapathy vijay first christian chief minister tvk leads 106 seats vijay christian vellalar community first christian cm tamil nadu dmk trails 42 seats aiadmk 64 seats tamilaga vetri kazhagam strong performance vijay tvk election victory tamil nadu chief ministers history karunanidhi hindu by birth mg r jayalalithaa hindu cms vijay first election 2026 tamil nadu assembly election live trends historical first christian cm tamil nadu 2026 106 42 64 2026

இந்த வெற்றியின் மூலம், தமிழ்நாட்டில் முதல் முறையாக ஒரு கிறிஸ்தவர் முதல்வராகப் பதவியேற்கும் வரலாற்று நிகழ்வு நடக்கும் வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் இதுவரை உள்ள அனைத்து முதலமைச்சர்களும் பிறப்பால் இந்து சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தான். மறைந்த முதல்வர் கருணாநிதி நாத்திகவாதியாக இருந்தாலும் அவர் பிறப்பால் இந்துவாகத் தான் இருந்தார். அதிமுகவின் ஜெயலலிதா, எம்ஜிஆர் உள்ளிட்ட அனைத்து முதல்வர்களும் இந்து மத பின்னணியிலிருந்தே வந்தவர்கள்.

விஜய் கிறிஸ்தவ வெள்ளாளர் சமூகத்தில் பிறந்தவர். அவரது தாய் ஷோபா சந்திரசேகர் இந்து மதத்தை சேர்ந்தவர், அதேபோல் விஜய் அனைத்து இந்து கோயில்களும் செல்லும் வழக்கம் கொண்டவர். ஆனால், பல இடத்தில் தனது பெயர் ஜோசப் விஜய் என்பதை மக்களுக்கு உரக்க சொல்லியிருக்கிறார்.

எச்.ராஜா போன்றோர் விஜய் ஒரு கிறிஸ்தவர் என்று கூறினர். ஆனால் தமிழ்நாட்டின் பன்முகத்தன்மையை எதிரொலிக்கும் வகையில், மக்கள், மதம் பார்க்காமல் ஓட்டுப் போட்டுள்ளனர். குறிப்பிட்ட ஜாதி ஆதிக்கம் உள்ள பகுதிகளிலும் விஜய் கட்சி வேட்பாளர்கள் முன்னிலை வகிக்கிறார்கள். மதம் மற்றும் ஜாதி பாகுபாடுகள், நடிக மோகத்தால் தூள் தூளாகியுள்ளன.

தமிழக வெற்றிக் கழகத்தைத் தொடங்கி முதல் முறையாக சட்டமன்றத் தேர்தலில் களமிறங்கியுள்ள நிலையில், தற்போதைய வாக்கு எண்ணிக்கை நிலவரம் அவருக்கு முதல்வராகும் வாய்ப்பு பிரகாசமாக இருக்கும் காரணத்தால் தமிழ்நாட்டில் முதல் முறையாக ஒரு கிறிஸ்தவர் முதல்வராகும் வரலாற்று சம்பவம் நடக்க உள்ளது.

தமிழ்நாட்டின் முக்கிய முதலமைச்சர்கள் (1949-தற்போது வரை)

தமிழ்நாடு அரசியல் வரலாறு காங்கிரஸ், திமுக மற்றும் அதிமுக ஆகிய மூன்று கட்சிகளின் ஆதிக்கத்தில் இருந்து வந்துள்ளது. 1949 முதல் இன்று வரை பதவியேற்ற அனைத்து முதலமைச்சர்களும் பிறப்பால் இந்து சமயத்தைச் சேர்ந்தவர்களே.

காங்கிரஸ் காலம் (1949-1967):
முதல் முதலமைச்சராக பி.எஸ். குமாரசாமி ராஜா (1949-1952) பொறுப்பேற்றார். அதன் பிறகு சி. ராஜகோபாலாச்சாரி (1952-1954), கே. காமராஜ் (1954-1963), எம். பக்தவத்சலம் (1963-1967) ஆகியோர் முதலமைச்சராகப் பணியாற்றினர். இவர்கள் மூவரும் இந்து மதத்தை சார்ந்தவர்களே.

திராவிடக் கட்சி யுகத்தின் தொடக்கம்:
1967-ல் சி.என். அண்ணாதுரை (திமுக) தமிழ்நாட்டின் முதல் திராவிடக் கட்சி முதலமைச்சராகப் பதவியேற்றார். திமுகவின் மு.கருணாநிதி மற்றும் அதிமுகவின் ஜெ.ஜெயலலிதா இருவரும் பலமுறை முதலமைச்சராகப் பதவி வகித்தனர். அதிமுகவின் எம்.ஜி. ராமச்சந்திரன் (1977-1987) தமிழ்நாட்டின் அரசியலை மாற்றிய முக்கிய முதல்வராக இருந்தார். இதில் மு.கருணாநிதி நாத்திகவாதி என்றாலும் பிறப்பால் இந்து மதத்தை சார்ந்தவர்கள்,

இவர்களை தொடர்ந்து ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி கே. பழனிசாமி (அதிமுக) மற்றும் தற்போதைய முதலமைச்சர் முக.ஸ்டாலின் (திமுக) ஆகிய அனைவரும் இந்து மதத்தை சார்ந்தவர்கள் தான்.

வாக்கு எண்ணிக்கை நிலவரம்

தேர்தல் ஆணையம் வெளியிட்ட சமீபத்திய தகவலின்படி, 233 தொகுதிகளுக்கான ஆரம்ப வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியாகியுள்ளன.

தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 106 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது, அதிமுக 64 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது, திமுக 42 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.

பிற கட்சிகளான பாட்டாளி மக்கள் கட்சி 5, இந்திய தேசிய காங்கிரஸ் 5, பாஜக 3, தேசிய முற்போக்கு திராவிட கழகம் 2, சிபிஐ 2, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், விடுதலை சிறுத்தைகள் கட்சி, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், சிபிஐ(எம்) ஆகியவை தலா 1 தொகுதியில் முன்னிலை வகிக்கின்றன.

தவெக தொடக்கத்தில் இருந்தே வலுவான முன்னிலையில் உள்ளது. முழுமையான முடிவுகள் வெளியான பிறகே இறுதி நிலவரம் தெரியவரும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+