வெறும் 4,649 வாக்குகள்! விஜய்யின் தனி மெஜாரிட்டியை தடுத்த 10 தொகுதிகள்! அதிர வைக்கும் தேர்தல் டேட்டா
சென்னை: தமிழ்நாடு தேர்தலில் 108 இடங்களோடு தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தவெக அனைவருக்கும் அதிர்ச்சியைக் கொடுத்தது என்பதே உண்மை. அதேநேரம் வெறும் 4,649 வாக்குகள் தான் விஜய் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்ததைத் தடுத்தது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா.. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்!
தமிழகத் தேர்தல் களத்தில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களைக் கைப்பற்றி ஒரு யாருமே எதிர்பார்க்காத ஒரு வெற்றியைப் பெற்றிருந்தது. 234 இடங்களைக் கொண்ட தமிழகச் சட்டமன்றத்தில், மேஜிக் நம்பரான 118ஐ தொட வெறும் 10 இடங்களே குறைவாக இருந்தது. இதனால் காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக, ஐயுஎம்எல் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் ஒரு கூட்டணி ஆட்சியை அமைத்துள்ளது.

டேட்டா சொல்வது என்ன
ஆனால், இந்தத் தேர்தல் டேட்டாவை சற்று ஆழமாகப் பார்த்தால், ஒரு தலைச்சுற்ற வைக்கும் உண்மை வெளியாகியுள்ளது. அதாவது வெறும் 4,649 ஓட்டுகள் மட்டும் கூடுதலாகக் கிடைத்திருந்தால், விஜய் இன்று எந்தக் கட்சியின் தயவும் இன்றி 'தனிப்பெரும்' மெஜாரிட்டியுடன் ஆட்சியை அமைத்திருக்க முடியும்!
தேர்தல் முடிவுகளை தவெக தொண்டர்கள் கொண்டாடினாலும், பின்னால் இருக்கும் நம்பர் கணக்கு பலரையும் வியக்க வைத்துள்ளது. தமிழகம் முழுவதும் பதிவான லட்சக்கணக்கான வாக்குகளில், வெறும் 5,000க்கும் குறைவான வாக்குகளே விஜய்யின் தனி மெஜாரிட்டி ஆட்சி கனவைத் தடுத்து நிறுத்தியுள்ளது. வெறும் 10 தொகுதிகளில் அவர் சில நூறு வாக்குகளைக் கூடுதலாகப் பெற்றிருந்தால் இன்று யாருடைய ஆதரவும் அவருக்குத் தேவைப்பட்டிருக்காது.
அந்த 10 தொகுதிகள்
விஜய் நூலிழையில் வெற்றியைத் தவறவிட்ட அந்த 10 தொகுதிகள் எவை தெரியுமா? அந்தத் தொகுதிகளில் விழுந்த மிகக் குறைந்த ஓட்டு வித்தியாசங்களைப் பார்த்தால் தவெக தொண்டர்களுக்குத் தலைச் சுற்றும்:
திருக்கோவிலூர்: வெறும் 285 ஓட்டுகள்
குளித்தலை: 579 ஓட்டுகள்
பழனி: 693 ஓட்டுகள்
கோவில்பட்டி: 843 ஓட்டுகள்
விக்கிரவாண்டி: 910 ஓட்டுகள்
உதகமண்டலம்: 976 ஓட்டுகள்
பாபநாசம்: 1,065 ஓட்டுகள்
திண்டுக்கல்: 1,131 ஓட்டுகள்
கிள்ளியூர்: 1,311 ஓட்டுகள்
திருமயம்: 1,492 ஓட்டுகள்
இந்த 10 தொகுதிகளிலும் தவெக வேட்பாளருக்கும் வெற்றி பெற்றவருக்கும் இடையிலான வித்தியாசத்தில் இவ்வளவு குறைவு.. இந்த 4,649 ஓட்டுகளைக் கூடுதலாக வாங்கியிருந்தால்.. இந்த 10 தொகுதிகளும் தவெக வசமாகியிருக்கும். இதன் மூலம் விஜய்யின் பலம் 118-ஆக உயர்ந்திருக்கும்!
வென்றது யார்
தவெகவின் கைகளுக்கு வர வேண்டிய இந்த 10 தொகுதிகளையும் பிரதானக் கட்சிகள் தங்களுக்குள் பிரித்துக் கொண்டன. இதில் ஆச்சரியம் என்னவென்றால், இப்போது விஜய்க்கு ஆதரவு தரும் கூட்டணிக் கட்சிகள் கூட இதில் அடக்கம். அதாவது இந்த 10 தொகுதிகளில் அதிகபட்சமாக 4 தொகுதிகள் திமுக வசம் போனது.. மறுபுறம் அதிமுக வசம் இரு தொகுதிகள் போய் இருக்கிறது. பாஜக, காங்கிரஸ், ஐயுஎம்எல், பாமக ஆகிய கட்சிகள் வசம் தலா ஒரு இடம் போய் இருக்கிறது. இந்தக் கட்சிகள் கூடுதலாகப் பெற்ற அந்த வாக்குகளே, இன்று விஜய்யை கூட்டணி ஆட்சிக் கட்டிலில் அமர வைத்துள்ளது.
தடுத்துவிட்டது
தனிப்பெரும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை என்றாலும், தனது முதல் தேர்தலிலேயே 108 இடங்களைப் பிடித்ததன் மூலம், 60 ஆண்டுக்கால திமுக - அதிமுக ஆதிக்கத்தை உடைத்துள்ளார் விஜய். எந்தவொரு அரசியல் பின்புலமும் இல்லாமல்.. அறிமுகமான முதல் தேர்தலிலேயே இவ்வளவு தொகுதிகளைப் பெற்றுள்ளது என்பது தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு மிக பெரிய சாதனை. வெறும் 5,000 ஓட்டுகள் விஜய் தனி மெஜாரிட்டி பெறுவதைத் தடுத்துவிட்டது என்பதே நிதர்சனம்.
-
13 மாவட்டங்களில் பெண் கலெக்டர்கள்.. விஜய்யின் சிங்கப்பெண் ரூட்.. மாவட்டம்தோறும் அதிரடி -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
"போட்டோ, வீடியோக்காக ஆய்வு செய்யமாட்டேன்".. அட தவெகவில் இப்படியும் ஒரு அமைச்சரா! -
ஆதவ் அர்ஜுனா பதவிக்கு சிக்கல்? அதிமுக எம்.பி இன்பதுரை வைத்த லீகல் பாயிண்ட்! -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக












Click it and Unblock the Notifications