விஜய் வீட்டுக்கு 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு.. பரபரப்பான வாக்கு எண்ணிக்கை மத்தியில் திடீர் நடவடிக்கை!

Subscribe to Oneindia Tamil

தமிழ்நாட்டில் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 23 அன்று ஒரே கட்டமாக நடைபெற்று முடிந்தது. இன்று மே 4 அன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ளது.

வழக்கம் போல் தேர்தல் பணியில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், 85 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் அளித்த தபால் வாக்குகள் முதலில் எண்ணப்பட்டன. தற்போது EVM இயந்திரங்களில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை தொடங்கியுள்ளது. இந்த ஆரம்பக் கட்ட எண்ணிக்கை முடிவுகள் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

2026 TN Election 2026 Vote Counting Vijay House Police Deployment TVK Vijay Neelankarai Tamil Nadu Election Leads DMK TVK Early Trends tamil nadu election 2026 vote counting live vijay neelankarai house police deployment over 100 police outside vijay residence tn assembly election may 4 updates dmk alliance leads 55 seats tvk leads 46 constituencies vijay first election tvk 2026 perambur trichy east vijay contest tamil nadu postal ballots counting evm vote counting tamil nadu today heavy security at vijay house chennai tamilaga vetri kazhagam early trends stalin strong lead postal ballots tamil nadu election security measures vijay tvk police protection neelankarai 2026 100 55 46 2026 EVM

ஆரம்பகட்ட முன்னிலை நிலவரம்

தபால் வாக்குகள் எண்ணிக்கையின் ஆரம்ப நிலவரப்படி, திமுக தலைமையிலான கூட்டணி 51 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. அதிமுக கூட்டணி 39 தொகுதிகளிலும், தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 60 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது.

இந்த ஆரம்பப் போக்கு தேர்தல் முடிவுகள் தமிழ்நாடு புதிய மாற்றத்தை நோக்கி நகர்கிறதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது, காலை முதல் முன்னிலையில் இருந்து திமுக 2வது இடத்திற்கு தள்ளப்பட்டு முதல் இடத்தை தவெக பெற்றுள்ளது. இருப்பினும், EVM வாக்குகள் முழுமையாக எண்ணப்படும் வரை இறுதி முடிவை உறுதியாகக் கூற முடியாது.

விஜய் வீட்டுக்கு போலீஸ் குவிப்பு

இந்த பரபரப்பான வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நேரத்தில் சென்னை நீலாங்கரையில் உள்ள தவெக தலைவர் விஜய்யின் வீட்டிற்கு 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகரான விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சியைத் தொடங்கி முதன்முறையாக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டுள்ளார். பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளிலும் வேட்பாளராக நிற்கும் விஜய்-க்கு இந்த தேர்தல் மிகலும் முக்கியமானது.

வாக்கு எண்ணிக்கையின் முக்கியமான இந்த நாளில் அவரது வீட்டிற்கு அருகே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளது அரசியல் மற்றும் சினிமா வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

இன்றைய வாக்கு எண்ணிக்கை முடிவுகள் தமிழ்நாட்டின் அடுத்த ஐந்து ஆண்டு அரசியல் மற்றும் நிர்வாகத்தை தீர்மானிக்கும். தவெக தலைவர் விஜய்யின் முதல் தேர்தல் அனுபவம், திமுக மற்றும் அதிமுக கூட்டணிகளின் செயல்பாட்டு பலம் இன்றைய முடிவுகளில் தெளிவாகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+