சென்னையே காலியாகிடுச்சா.. கோயம்பேடு பஸ் நிலையத்தில் கூட்டமேயில்ல! தேர்தல் ஸ்பெஷல் பஸ் 2 நாள் ரத்து
சென்னை: கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து இன்று முதல் இயங்குவதாக அறிவிக்கப்பட்ட தேர்தல் சிறப்பு பேருந்துகள் போதிய பயணிகள் கூட்டம் இல்லாததால் 4 மற்றும் 5ம் தேதிகளுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
Recommended Video
தமிழக சட்டசபை பொதுதேர்தலை முன்னிட்டு பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்படுகிறது.
இதற்கு வசதியாக சென்னை கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்திலிருந்து தமிழகத்தின் அனைத்துப்பகுதிகளுக்கும் இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக போக்குவரத்து துறைசார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.
கோவை, திருப்பூர், சேலம், பெங்களூர் ஆகிய இடங்களில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு 2,644 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இணையதளம்
கூட்ட நெரிசலைக் குறைத்து, சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் வரும் 4, 5ம் தேதிகளில் மாதவரம், கே.கே.நகர், தாம்பரம் பேருந்து நிலையங்கள், தாம்பரம் ரயில்நிலையம் அருகே என பேருந்துகளை பிரித்து இயக்கப்பட உள்ளன. சொந்த ஊர்களுக்குச் சென்ற மக்கள் திரும்பி வர ஏதுவாக வரும் 7ம் தேதி முதல் போதிய அளவில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. மேலும் பொது மக்கள் www.tnstc.in. என்ற இணையதளம் வழியாக டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

கொரோனா அலை
ஆனால், கொரோனா இரண்டாம் அலை தொற்று பரவல் அச்சம் காரணமாகவும், கொளுத்தும் கோடை வெயில் தாக்கத்தின் காரணமாகவும் போதிய அளவு பயணிகள் இல்லாததால் கோயம்பேடு பேருந்து நிலையம் வெறிச்சோடிக் காணப்படுகின்றது.

வழக்கமான பஸ்களில் கூட கூட்டம் இல்லை
வழக்கமாக இயங்கும் பேருந்துகளில் செல்வதற்கே பயணிகள் அதிக அளவில் ஆர்வம் காட்டவில்லை. எனவே, இன்றுமுதல் இயக்கப்படவிருந்த தேர்தல் சிறப்பு பேருந்துகள் வரும் 4 ,5 ஆம் தேதிகளில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒர்க் பிரம் ஹோம்
ஏற்கனவே பலரும் ஒர்க் பிரம் ஹோம் காரணமாக வெளியூருக்கு போயிருப்பதும், இப்போது சென்னையிலிருந்து போதிய பயணிகள் கிளம்பாமல் இருக்க காரணம் என்று கூறப்படுகிறது.
-
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு!












Click it and Unblock the Notifications