ரெடி?.. மின்சார வாரியம் திடீர் முடிவு.. தேர்தல் வேற வருது.. இந்த நேரத்தில் மின்வாரியம் அதிரடி.. பலே
சென்னை: விரைவில் எம்பி தேர்தல் நடக்கப்போகும் நிலையில், தேர்தலின்போது மின் தேவையை பூர்த்தி செய்வதற்காக மின்சாரம் கொள்முதல் செய்ய மின்வாரியம் டெண்டர் கோரியிருக்கிறது.
தமிழகத்தை பொறுத்தவரை, மின்தேவை என்பது, தினமும் காலை மாலையில் சராசரியாக 15000 மெகா வாட்டாகவும், மற்ற நேரங்களில் 14000 மெகா வாட்டாகவும் உள்ளது. ஆனால், இவைகளை பூர்த்தி செய்யும் அளவுக்கு மின்சாரம் கிடைப்பதில்லை.. அதனாலேயே மத்திய மின் நிலையங்கள், தனியாரிடம் கொள்முதல் செய்யப்படுகிறது.

அதுமட்டுமல்ல, வரும் ஜனவரியில், மின் தேவையை பூர்த்தி செய்வதில் 2350 மெகா வாட் அளவுக்கு மின் பற்றாக்குறை ஏற்படும் என்று மத்திய அரசு ஏற்கனவே எச்சரித்தும் உள்ளது.
மின்தேவை: அதனால்தான், தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (Tangedco) கூடுதல் நடவடிக்கைகளில் கவனம் செலுத்தியது.. கோடை காலத்தை திறன்பட சமாளித்த நிலையில், பருவமழை தொடங்கியுள்ள நிலையிலும், மின்தேவையை ஓரளவு சமாளித்து வருகிறது.. இதனால், மின்தேவையும் தமிழகத்தில் ஓரளவு குறைந்திருப்பதாக சொல்கிறார்கள்.
அதாவது, பருவமழையும், பண்டிகை கால விடுமுறையும் சேர்ந்து இந்த மின்தேவையை குறைத்திருக்கிறதாம். வழக்கமாக, சராசரி மின் பயன்பாடு 320 மில்லியன் யூனிட்டாக இருக்குமாம். ஆனால், இந்த முறை தீபாவளிக்கு 212.27 மில்லியன் யூனிட் மட்டுமே செலவாகியிருந்தது. இதனால், வரும் ஜனவரி மாதம் மின்பற்றாக்குறை ஏற்படாது என்றே நம்பப்படுகிறது.
மின்வாரியம்: இந்நிலையில், இன்னும் சில மாதங்களில் எம்பி தேர்தல் நடக்க போவதால், மின் தேவையை பூர்த்தி செய்வதற்காக மின்சாரம் கொள்முதல் செய்ய மின்வாரியம் டெண்டர் கோரியிருக்கிறது.. காரணம், கடந்த ஏப்ரலில் 19 ஆயிரம் மெகாவாட்டாக அதிகரித்த தினசரி மின்தேவை, வரும் வருடம் 20 ஆயிரம் மெகாவாட்டைத் தாண்டும் என்கிறார்கள்.
அதனால்தான், இந்த மின்தேவையைப் பூர்த்தி செய்ய, அடுத்த மார்ச் 1 முதல் 31-ம் தேதி வரை தினமும் ஆயிரம் மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய, கடந்த மாதம் மின்வாரியம் டெண்டர் கோரியிருக்கிறது.
மெகாவாட்: வரும் டிசம்பர் 1 முதல் 2024 பிப்ரவரி மாதம் வரை தினமும் காலை 6 மணி முதல் 8 மணி வரை 1000 மெகாவாட்டும், மாலை 6 மணி முதல் 9 மணி வரை 2,200 மெகாவாட்டும் மின்சாரம் கொள்முதல் செய்வதற்காக, இந்த டெண்டர் கோரப்பட்டது.
2024 மார்ச் முதல் மே மாதம் வரை தினமும் மாலை 6 மணி முதல் 9 மணி வரை 2000 மெகாவாட்டும், 2024 ஏப்ரல் மாதம் மட்டும் காலையில் தினமும் 500 மெகாவாட்டும் மின்சாரம் கொள்முதல் செய்வதற்கான அறிவிப்பை மின்வாரியம் வெளியிட்டது..
எம்பி தேர்தல் காரணமாக அனைத்து மாநில அரசுகளும் மின்சாரம் வாங்க பல்வேறு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து வந்தாலும், தமிழகத்துக்கு மின்சாரம் வழங்க, எந்த நிறுவனமும் முன்வரவில்லை.
டெண்டர்: இந்நிலையில்தான், இதையடுத்து, 2024 ஜனவரி 1-ம் தேதி முதல் மே 31-ம் தேதி வரை தினமும் காலை 6 மணி முதல் 8 மணி வரை 850 மெகாவாட்டும், மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை ஆயிரம் மெகாவாட்டும் மின்சாரம் வாங்க மின்வாரியம் டெண்டர் கோரப்பட்டுள்ளது.. இதுதவிர, ஜனவரி முதல் மே மாதம் வரை 5 மாதங்களுக்கு 24 மணி நேரமும் 200 மெகாவாட் மின்சாரம் வாங்கவும் மின்வாரியம் டெண்டர் கோரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications