Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அலறிடும் மின்சார வாரியம்.. மின்மீட்டர்களில் அதிரடி.. ஆபீசர்களுக்கு புது உத்தரவு.. தமிழக அரசு சபாஷ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பொதுமக்களின் நன்மைக்காக பல்வேறு வசதிகளையும், நன்மைகளையும் தமிழக மின்வாரியம் ஏற்படுத்தி வருகிறது. அந்தவகையில், மக்களின் பயன்பாட்டுக்காக, இன்னொரு அதிரடி உத்தரவையும் அதிகாரிகளுக்கு பிறப்பித்திருக்கிறது.
தமிழகம் முழுவதும் வீடுகள், வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகளுக்கு மின்வாரியம் மின்விநியோகம் செய்து வருகின்றது.. இப்படி விநியோகிக்கப்படும் மின்சாரம், மீட்டர் மூலம் கணக்கெடுக்கப்பட்டு, அதற்கேற்ப கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

வருவாய் இழப்பு: ஆனால், பல மீட்டர்கள் பழுதடைந்து இருப்பதால், சரியான மின்பயன்பாட்டை கணக்கெடுக்க முடிவதில்லை.. இதனால், மின்வாரியத்துக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது.

Tamil nadu Electricity Board Big Announcement and Repair of 2.20 lakh electricity meters

மேலும், குறைந்த அளவு மின்சாரத்தைப் பயன்படுத்தினாலும், மீட்டர் பழுது காரணமாக அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக நுகர்வோர் தரப்பில் புகார் எழுந்தது.. அதனால்தர்ன, பழுதடைந்த மின் மீட்டர்களை மாற்றி தருமாறு மின்நுகர்வோரிடமிருந்து மின்வாரியத்துக்கு ஏராளமான கோரிக்கைகள் சென்றன.
மின்மீட்டர்கள்: இதையடுத்து, கடந்த ஜூலை மாதம், தமிழகம் முழுவதும் பழுதடைந்துள்ள சுமார் 2.06 லட்சம் மீட்டர்களை மாற்றி புதிய மீட்டர்களை மாற்றுமாறு மின்வாரிய தலைமைப் பொறியாளர்களுக்கு, மின்வாரிய தலைமை நிதிக் கட்டுப்பாட்டு அதிகாரி மலர்விழி சுற்றறிக்கை அனுப்பியிருந்தார். இப்போது இன்னொரு அதிரடி உத்தரவை பிறப்பித்திருக்கிறார்.

தமிழகம் முழுதும், 1.75 லட்சம் ஒரு முனை மீட்டர்களும், 45,000 மும்முனை மீட்டர்களும் பழுதாகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.. அதாவது, மின்சாரம் துண்டிக்கப்பட்டு 2 ஆண்டுகளுக்கு மேலான இணைப்புகளின் எண்ணிக்கையானது, 30,000 என்றளவில் உள்ளதால், அவற்றில் மறுபடியும் மின்சாரம் பயன்படுத்தப்படுவதாலும், குறைபாடுள்ள மீட்டரை மாற்றாததாலும் மின் வாரியத்திற்கு, கோடிக்கணக்கில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

ஆய்வு கூட்டம்: இப்படிப்பட்ட சூழலில், தமிழக மின் வினியோக பணிகள் தொடர்பான ஆய்வு கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது.. இந்த கூட்டத்தில், மின் உற்பத்தி பிரிவு இயக்குனர் ராஜேந்திரன், நிதி பிரிவு இயக்குனர் மலர்விழி மற்றும் 44 மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர்கள் பங்கேற்றனர்.

அப்போது, மின்சாரம் துண்டிக்கப்பட்ட இணைப்புகளில் மேற்கொள்ளப்படும் ஆய்வு குறித்து, ஒவ்வொரு மாவட்ட மேற்பார்வை பொறியாளரிடம், மலர்விழி கருத்து கேட்டார்.. விரைவில் அதுகுறித்த நடவடிக்கையை எடுப்பதாக மேற்பார்வை பொறியாளர்கள் உறுதி தந்தனர்.

மின்துண்டிப்பு: இதையடுத்து, அவர்களிடம் மலர்விழி பேசியதாவது: மின்சாரம் துண்டிக்கப்பட்டு, 2 ஆண்டுகளுக்கு மேலான மின் இணைப்புகளின் கணக்கை முடிக்க வேண்டும். ஆனால், அந்த இணைப்புகளில் கணக்கெடுத்தே, பல நாட்களாகிவிட்டது. அந்த இணைப்புகளில் மறுபடியும் மின்சாரம் துண்டிக்கப்பட்டு 2 ஆண்டுகளுக்கு மேலான, 10 இணைப்புகள் உள்ளன. இந்த இணைப்புகள், காஞ்சிபுரம், திருவண்ணாமலையில் அதிகம் உள்ளன.

அதனால், மின்சாரம் துண்டிக்கப்பட்டு, 2 ஆண்டுகளான இணைப்புகளில் தீவிர ஆய்வு செய்ய வேண்டும். குறைபாடு உடைய மீட்டர்களை பொறுத்தவரை சென்னை தெற்கு - 2ல் மட்டும், 7,400 மும்முனை மீட்டர்களும், சென்னை வடக்கு, தெற்கில் தலா, 1,700 மீட்டர்களும் குறைபாடு உடையதாக உள்ளன.

அதிரடி உத்தரவு: ஒரு முனை மீட்டரில் காஞ்சிபுரத்தில் 5000, செங்கல்பட்டில் 7,000 மீட்டர்கள் உள்ளன. எனவே, குறைபாடு உடைய மீட்டர்களை மாற்றும் பணிக்கு முன்னுரிமை தர வேண்டும். அனைத்து மாவட்டங்களிலுமே, குறைபாடு உடைய மீ்ட்டர்களை உடனே மாற்ற கவனம் செலுத்த வேண்டும். தேவையான அளவுக்கு இருப்பும் உள்ளதால், மும்முனை மீட்டர்களை உடனடியாக மாற்ற வேண்டும்" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+