வெளிச்சந்தையில் மீண்டும் மின்சாரம் கொள்முதல்.. 3வது டெண்டரை வெளியிட்டது தமிழ்நாடு மின்சார வாரியம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசு மின் பற்றாக்குறையை சமாளிக்க மீண்டும் வெளிச்சந்தையில் மின்சாரம் கொள்முதல் செய்ய 3 வது முறையாக டெண்டர் வெளியிட்டுள்ளது. வரும் நவம்பர் மாதம் முதல் மே மாதம் வரையில், மாலை நேர மின்சார தேவையை சமாளிக்க மாதத்திற்கு 1,000 மெகாவாட் என மொத்தம் 7 ஆயிரம் மெகாவாட் கொள்முதல் செய்ய மின்சார வாரியம் குறுகிய கால டெண்டர் கோரியுள்ளது.

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து பகல் மற்றும் இரவு நேரங்களில் மின்வெட்டு இருந்து வருகிறது. கோடைக்காலத்தை கடந்தும், 'எல் நினோ' காரணமாக வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது. தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கிய பிறகு வெப்பம் தணிந்துள்ளது. எனினும் கடந்த வாரம் வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.

Tamil Nadu Electricity Board issues 3rd tender over Procurement of electricity from open market

இதனால், மின் தேவை அதிகரித்து காணப்பட்டது. இதனால் மின்பற்றாக்குறை ஏற்பட்டு, மின் வெட்டு என்பது அதிக அளவில் உள்ளது. மின்சாரம், எப்போது வரும், எப்போது போகும் என்ற நிலைதான் தமிழகத்தின் பல பகுதிகளில் நீடித்து வருவதை காண முடிகிறது. கிராமப்புறங்களில் முன்னறிவிப்பு இன்றி பல மணி நேரம் மின்வெட்டு ஏற்படுவதாக மக்கள் வேதனை தெரிவித்தனர்.

தலைநகர் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இரவு நேரங்களில் அதிகமாக மின்தடை ஏற்பட்டது. இதனால், ஆங்காங்கே பொது மக்கள் வீதிக்கு வந்து போராட்டத்தில் ஈடுபடுவதையும் பார்க்க முடிந்தது. காற்றும் இல்லாததால் காற்றாலை மின்சாரமும் அரசுக்கு கைக்கொடுக்கவில்லை. மின் தேவையை கருத்தில் கொண்டு, மின் தேவை உச்சத்தில் இருக்கும் நேரங்களில் அரசு வெளிச்சந்தையில் இருந்தே மின்சாரத்தைக் கொள்முதல் செய்து சமாளித்து வருகிறது.

மின் தேவையை சமாளிக்க கடந்த வாரம் 4,500 மெகாவாட் மின்சாரத்தை அவசரகால அடிப்படையில் கொள்முதல் செய்ய தமிழ்நாடு மின்சார வாரியம் டெண்டர் கோரியது. இந்த டெண்டரின் அடிப்படையில், தனியார் நிறுவனங்கள் ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.37 ரூபாய் வரை விற்பனை செய்ய தயாராக இருப்பதாக தெரிவித்து விண்ணப்பித்திருந்தன.

இதற்கிடையே, இறுதியாக ஒரு யூனிட் மின்சாரத்தை வெளிச்சந்தையில் இருந்து 35 ரூபாய்க்கு கொள்முதல் செய்ய செய்யும் வகையில் டெண்டரை மின்வாரியம் இறுதி செய்து ஒப்பந்தம் செய்துள்ளது. இதற்கு முன்பு ஒரு யூனிட் மின்சாரம் ரூ.20 முதல் ரூ.30 வரை விலை கொடுத்து வாங்கப்பட்டு வந்த நிலையில், 35 ரூபாய்க்கு வாங்கப்பட்டது பெரும் அதிர்சியை கொடுப்பதாக இருந்தது.

கேஸ் மூலம் தயாரிக்கும் மின்சாரம் மட்டுமே 35 ரூபாய்க்கு வாங்கப்படுவதாக நிர்மல் குமார் விளக்கமளித்து இருந்தார். மின் கொள்முதலில் மிகப்பெரிய முறைகேடு நடப்பதாக திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் கடும் விமர்சனத்தை முன்வைத்து இருந்தன. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் தற்போது மின்கொள்முதல் தொடர்பாக மேலும் ஒரு டெண்டரை தமிழக மின்வாரியம் விடுத்துள்ளது.

நவம்பர் மாதம் முதல் மே மாதம் வரை மாலை நேர மின்சார தேவையை சமாளிக்க மாதம் தோறும் 1,000 மெகாவாட் கொள்முதல் செய்யப்பட உள்ளது. மொத்தம் 7 ஆயிரம் மெகாவாட் கொள்முதல் செய்ய குறுகிய கால டெண்டரை மின்சார வாரியம் கோரியுள்ளது. தினமும் மாலை 6 மணி முதல் இரவு 12 மணி வரை ஏற்படும் உச்சபட்ச மின் தேவையை பூர்த்தி செய்ய மின்சாரம் கொள்முதல் செய்யப்பட உள்ளது.

ஏற்கனவே 4 ஆயிரம் மெகாவாட் மற்றும் 15 ஆயிரம் மெகாவாட் என இரண்டு டெண்டர்கள் மின்வாரியம் தரப்பில் கோரப்பட்டு இருந்த நிலையில், தற்போது மூன்றாவதாக ஒரு டெண்டர் கோரப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+