அரண்ட மின்வாரியம்.. ஏற்கனவே மத்திய அரசு தந்த வார்னிங்.. இப்ப இதுவேறயா.. அதென்ன தனிநபர் மின்நுகர்வு
சென்னை: தமிழக மக்களின் மின்தேவையை அரசு பூர்த்தி செய்து வருகிறது என்றாலும், மின்பயன்பாடுகள் குறித்த புள்ளிவிவரம் ஒன்று வெளியாகி உள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரை, மின்தேவை என்பது, தினமும் காலை மாலையில் சராசரியாக 15000 மெகா வாட்டாகவும், மற்ற நேரங்களில் 14000 மெகா வாட்டாகவும் உள்ளது. ஆனால், இவைகளை பூர்த்தி செய்யும் அளவுக்கு மின்சாரம் கிடைப்பதில்லை.. அதனாலேயே மத்திய மின் நிலையங்கள், தனியாரிடம் கொள்முதல் செய்யப்படுகிறது.

அதிகரிப்பு: எனினும் இந்த வருடம், குறிப்பாக கடந்த ஏப்ரல் மாதமான கோடையில், மின் தேவையானது, எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்தது.. அதாவது, 19387 மெகா வாட்டாக அதிகரித்தது.
அதாவது, தமிழகம் முழுவதும் உச்சபட்ச மின்நுகர்வு ஏறத்தாழ 3 ஆயிரம் மெகாவாட் அளவுக்கு அதிகரித்திருந்தது.. சென்னையில் மட்டுமே, ஒருநாள் மின்நுகர்வு 423 மில்லியன் யூனிட் அளவுக்கு அதிகரித்து காணப்பட்டது..
மின்தேவை அதிகரிப்பு: இது கடந்த 2019-20-ம் ஆண்டில் 369 மில்லியன் யூனிட் அளவு மட்டுமே இருந்தது. இப்படி மின்தேவை அதிகரித்துள்ள போதிலும், கூடுமான வரையில், பாதிப்பு இல்லாமல், தமிழகம் முழுவதும் சீரான மின்விநியோகம் செய்யப்பட தமிழக அரசு முயற்சிகளை முன்னெடுத்தது. இதற்கு காரணம், அதே அளவு மின் உற்பத்தியும் கொள்முதலும் இருந்ததால் பற்றாக்குறை பெரிதாக ஏற்படவில்லை. இப்போது கோடை வெயில் முடிந்த நிலையில் மின் தேவையானது, 16500 மெகா வாட்டாக இருக்கிறது.
இந்நிலையில், 4 நாட்களுக்கு முன்பு, மத்திய அரசு ஒரு எச்சரிக்கை கலந்த அறிவுறுத்தலை வெளியிட்டிருந்தது.. ஒவ்வொரு மாநிலத்திலும் வரும் மாதங்களில் அதிகரிக்க போகும், மின் தேவை மின் உற்பத்தி பற்றாக்குறை உள்ளிட்ட விபரங்களை மாநில மின் வாரியங்களுக்கு, மத்திய அரசு முன்கூட்டியே தெரிவித்து வருகிறது..
வார்னிங்: அந்தவகையில், தமிழகத்துக்கும் ஒரு வார்னிங் + அட்வைஸ் பறந்து வந்தது. அதன்படி 2024 ஜனவரியில் மின் தேவையை பூர்த்தி செய்வதில் 2350 மெகா வாட் அளவுக்கு மின் பற்றாக்குறை ஏற்படும் என்றும் எச்சரித்திருந்தது.
இந்நிலையில், தமிழகத்தில், கடந்த வருடம் "தனிநபர் மின் நுகர்வு", 1,640 யூனிட்களாக அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, மாநிலம் முழுதும் அனைத்து பிரிவுகளிலும் ஓராண்டில் பயன்படுத்தப்பட்ட மின்சாரத்தை, அந்த மாநில ஒட்டுமொத்த மக்கள் தொகையால் வகுத்தால் கிடைக்கும் அளவுதான், தனிநபர் மின் நுகர்வு என்று அழைக்கப்படுகிறது.
மின்விநியோகம்: வழக்கமாக, தமிழகத்தில் உள்ள வீடு, தொழிற்சாலை உட்பட அனைத்து பிரிவுகளுக்கும் மின் வினியோகம் செய்யும் பணியை மின் வாரியமே மேற்கொண்டு வருகிறது. இதனால், தமிழகம் முழுதும் தினமும் மின் நுகர்வு சராசரியாக, 30 கோடி யூனிட்களாக இருக்கிறது.. ஆனால், இது கோடை காலத்தில், 35 கோடி யூனிட்களை தாண்டிவிடுகிறது. அந்தவகையில், இந்த வருடம் ஏப்ரல் 20ம் தேதி, முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு, 42.37 கோடி யூனிட்களாக அதிகரித்துவிட்டதாம்.
அதேபோல, கடந்த 2016- 17-ம் ஆண்டில் 1,340 யூனிட்களாக இருந்த தனிநபர் மின்நுகர்வு, 2017-18 - 1,389 யூனிட்டாக உயர்ந்துள்ளது.. 2018-19ம் ஆண்டு, 1,467 யூனிட்களாக இருந்த தனிநபர் மின்நுகர்வு, 2019-20 -ம் ஆண்டு 1,515 ஆக உயர்ந்துள்ளது.. 2020-21ம் ஆண்டு, 1,464 யூனிட்டுகளாக இருந்த நிலையில், 2021/ 22 ம் ஆண்டு, 1,593 யூனிட்டாக உயர்ந்துள்ளது.
கடந்த 2021 - 22ல், 1,593 யூனிட்களாக இருந்த நிலையில், கடந்த 2022 - 23ல் தனிநபர் மின் நுகர், 1,640 யூனிட்களாக அதிகரித்துள்ளது.. இதற்கெல்லாம் காரணம், புதிய குடியிருப்புகள், செல்போன், லேப்டாப் சாதனங்களின் பயன்பாடு, பேட்டரியில் இயங்கும் எலக்ட்ரிக் வாகனங்கள் பயன்பாடு அதிகரித்து வருவதுதான், தனிநபர் மின் பயன்பாடு அதிகரிக்க முக்கிய காரணங்கள் என்கிறார்கள்.


Click it and Unblock the Notifications
