Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

TNEA 2025.. எந்த ஆண்டிலும் இல்லாமல் 3 லட்சம் பேர் போட்டி.. கலந்தாய்வு எப்போது.. கட் ஆஃப் எப்படி?

Subscribe to Oneindia Tamil

சென்னை: (tnea 2025 engineering counselling date) தமிழ்நாட்டில் அண்மைக்காலத்தில் எந்த ஆண்டிலும் இல்லாத ஒன்றாக இந்த ஆண்டு இன்ஜினியரிங் படிக்க மாணவர்களிடையே ஆர்வம் மிக அதிகமாகி உள்ளது, ஆன்லைன் விண்ணப்பதிவு ஜூன் 6ம் தேதியான நேற்றுடன் நிறைவு பெற்றது. சுமார் 3 லட்சம் பேர் இன்ஜினியரிங் படிக்க விண்ணப்பித்துள்ளனர். கலந்தாய்வு எப்போது நடைபெறும். இந்த முறை கட் ஆஃப் எப்படி இருக்கும் என்பது பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

இன்ஜினியரிங் படிப்புகளில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்பப்பதிவு கடந்த மே மாதம் 7-ந்தேதி தொடங்கியது. விண்ணப்பப்பதிவு தொடங்கியதில் இருந்து மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் விண்ணப்பித்து வருகிறார்கள். விண்ணப்பப்பதிவு செய்வதற்கான அவகாசம் நேற்றுடன் நிறைவு பெற்றது. நேற்று மாலை நிலவரப்படி, 2 லட்சத்து 98 ஆயிரத்து 425 பேர் விண்ணப்பங்களை பதிவு செய்திருந்தனர். ஒட்டுமொத்தமாக சுமார் 3 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பக் கட்டணங்களை செலுத்தி, சான்றிதழ்களை பதிவேற்றம் செய்பவர்கள்தான் அடுத்தகட்டமாக கலந்தாய்வுக்கு அழைக்கப்பட உள்ளார்கள்.

Tamil Nadu Engineering Counselling 2025 3 lakh students interested and What is the expected Cut-off

TNEA 2025க்கு எத்தனை பேர் விண்ணப்பம்

இதில் 1 லட்சத்து 33 ஆயிரத்து 805 மாணவர்களும், 1 லட்சத்து 10 ஆயிரத்து 363 மாணவிகளும் என மொத்தம் 2 லட்சத்து 44 ஆயிரத்து 168 மாணவ-மாணவிகள் விண்ணப்பக் கட்டணங்களை செலுத்தி உள்ளதால், அவர்கள் என்ஜினிரிங் படிப்பில் சேர கவுன்சிலிங்கிற்கு அழைக்கப்படுவார்கள். . இதுவரை 2 லட்சத்து 24 ஆயிரத்து 102 பேர் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்திருக்கின்றனர். சான்றிதழ்களை 9-ந்தேதி வரை (நாளை மறுதினம்) பதிவேற்றம் செய்ய முடியும்.

TNEA 2025 விண்ணப்ப கட்டணம்

இந்த விண்ணப்பதிவினை பார்க்கும், அண்மைக்காலத்தில் எந்த ஆண்டிலும் இல்லாத ஒன்றாக இந்த ஆண்டு இன்ஜினியரிங் படிக்க மாணவர்கள் ஆர்வம் காட்டுவதை பார்க்க முடிகிறது. ஏனெனில் கடந்த 2021-ம் ஆண்டில் இருந்து 2024-ம் ஆண்டு வரையில் கணக்கிட்டால், 2021ம் ஆண்டில் 1,45,043 பேரும், 2022ல் 1,69,083 பேரும், 2023ல் 1,87,847 பேரும், 20234ல் 2,09,653 பேரும் விண்ணப்பக் கட்டணங்களை செலுத்தி படிப்புகளில் சேருவதற்காக காத்திருந்தனர். ஆனால் இந்த முறை 2.44 லட்சம் பேர் விண்ணப்ப கட்டணம் செலுத்தி உள்ளனர்.

TNEA 2025 எத்தனை இடங்கள்

தமிழ்நாட்டில் அரசு, நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் என மொத்தம் சுமார் 2 லட்சத்து 42 ஆயிரம் இடங்கள் உள்ளன. கடந்த ஆண்டுகளை ஒப்பிட்டால் மொத்த இடங்களை விட குறைவாகவே விண்ணப்பித்திருந்தார்கள். ஒரு லட்சம் முதல் 50 ஆயிரம் வரை இடங்கள் காலியாகவே இருந்தது, ஆனால் இந்த ஆண்டு அப்படி இல்லை.. மொத்த எண்ணிகையைவிட 2 ஆயிரம் பேர் அதிகமாக, அதாவது 2 லட்சத்து 44 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருக்கின்றனர். இன்ஜினியரிங் படிப்புக்கு மவுசு அதிகமாக இருக்கும் என்ற நம்பிக்கை மாணவர்களிடையே அதிகரித்துள்ளது காரணமாகும்

TNEA 2025ல் எந்த படிப்புக்கு ஆர்வம் அதிகம்

குறிப்பாக செயற்கை நுண்ணறிவு, தரவு அறிவியல், கம்ப்யூட்டர் சயின்ஸ் சார்ந்த படிப்புகளை முடிப்பவர்களுக்கு வேலைவாய்ப்புகள் அதிகமாக உள்ளதால், அந்த படிப்புகளில் சேர மாணவ-மாணவிகள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். விண்ணப்பித்தவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு 10-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை மேற்கொள்ளப்பட உள்ளது. வரும் 27-ந்தேதி தரவரிசைப்பட்டியல் (கட் ஆஃப்) வெளியிடப்பட இருக்கிறது.

TNEA 2025 கட் ஆஃப் எப்படி இருக்கும்

TNEA 2025 கட் ஆஃப்பை கணக்கிடுவதற்கு ஒரு முறை உள்ளது. அதன்படி பார்க்கும் போது கடந்த ஆண்டைவிட அதிகமாக இருக்கும் என தெரிகிறது. கல்வி ஆலோசகர் தினேஷ் பிரபு என்பவர் வெளியிட்ட பதிவின் படி, இந்த ஆண்டில் கம்ப்யூட்டர் சயின்ஸ் தேர்ச்சி விகிதம் 99.73 ஆகவும், இயற்பியல் தேர்ச்சி விகிதம் 99.22 ஆகவும், கணிதம் தேர்ச்சி விகிதம் 99.16 ஆகவும், உயிரியியல் தேர்ச்சி விகிதம் 99.15 ஆகவும், வேதியியல் தேர்ச்சி விகிதம் 98.49 ஆகவும் உள்ளது.

190க்கு மேல் எப்படி இருக்கும்

12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகம் பேர் 100க்கு 100 மதிப்பெண் எடுத்துள்ளனர்.. இயற்பியலில் 1125 பேர் சென்டம் எடுத்துள்ளனர். வேதியியலில் 3181 பேர் சென்டம் எடுத்துள்ளனர். கணிதத்தில் இந்த ஆண்டு 3022 பேர் 100க்கு 100 எடுத்துள்ளனர். எனவே இந்த ஆண்டு பொறியியல் கட் ஆஃப் நிச்சயம் உயர்வது உறுதியாகி உள்ளது. 200 கட் ஆஃப் ரேஞ்சில் 0.25 - 0.5 கட் ஆஃப் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்றும், 199 கட் ஆஃப் ரேஞ்சில் 0.5 - 1 கட் ஆஃப் அதிகரிக்க கூடும் என்றும், 198 கட் ஆஃப் ரேஞ்சில் 1 - 1.5 கட் ஆஃப் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. .

கட் ஆஃப் எதில் குறையும்

197 கட் ஆஃப்பை பொறுத்தவரை 1.5 - 2 கட் ஆஃப் அதிகரிக்கும் என்றும் 195-196 கட் ஆஃப் ரேஞ்சில் 2 - 2.5 கட் ஆஃப் அதிகரிக்கும் என்றும், 190-194 கட் ஆஃப் ரேஞ்சில் 2 - 3 கட் ஆஃப் அதிகரிக்கும் என்றும் 180-189 கட் ஆஃப் விகிதத்தில் 1.5 - 2 கட் ஆஃப் அதிகரிக்கும் என்றும் 160-179 கட் ஆஃப் ரேஞ்சில் 1 கட் ஆஃப் அதிகரிக்கும் . அதேநேரம் 140-159 கட் ஆஃப் ரேஞ்சில் 0.5 கட் ஆஃப் குறைய வாய்ப்பு உள்ளது என்றும், 120-139 கட் ஆஃப் ரேஞ்சில் 1 கட் ஆஃப் குறையும் என்றும் கூறியுள்ளார்.

TNEA 2025 கலந்தாய்வு எப்போது?

கலந்தாய்வு குறித்த தற்காலிக அட்டவணை எப்போதும் முன்கூட்டியே வெளியிடப்படுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு அப்படி வெளியிடப்படவில்லை. தரவரிசைப் பட்டியலை வெளியிடும்போது, கலந்தாய்வு குறித்த தேதி அறிவிக்கப்படலாம் என்கிறார்கள். ஜூலை முதல் மற்றும் 2-வது வாரத்தில் கலந்தாய்வு தொடங்குவதற்கான வாய்ப்பு உள்ளது என உயர்கல்வி வட்டாரங்கள் சொல்கின்றன. பொதுவாக ஆகஸ்ட் முதல் வாரத்தில் என்ஜினியரிங் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கும் என்பதால், ஜூலை 2ம் வாரத்திற்குள் நடைபெறவே வாய்ப்பு அதிகம்.

அரசு கல்லூரியில் படித்தால் பெரிய லாபம்

கடந்த ஆண்டு நிலவரப்படி அரசு பொறியியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு சேர்க்கைக்கு மொத்த கட்டணம் ரூ.14,030 இருந்தது. இதில் சேர்க்கை கட்டணம், கல்வி கட்டணம், நூலக கட்டணம், காப்பீடு உள்ளிட்ட அனைத்து கட்டணமும் அடக்கம் ஆகும். அதேநேரம் விடுதி கட்டணம் தனியாக வசூலிக்கப்படும். விடுதிக்கு வைப்பு தொகை, மாத வாடகை, மெஸ் கட்டணம் செலுத்த வேண்டிய திருக்கும். அதேநேரம் ஏழை மாணவர்கள் அரசின் விடுதிகளில் தங்கி படிக்க முடியும்.

கட்டண சலுகைகள்

ஓசி, பிசி, எம்பிசி, பிசிஎம் பிரிவினர்களில் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு கல்வி கட்டணத்தில் ரூ.2,000 கட்டண சலுகை உண்டு. அதே போன்று, எஸ்சி, எஸ்டி பிரிவினர்களில் முதல் தலைமுறை பட்டதாரிகள் மற்றும் அல்லாதவர்களுக்கும் ரூ.2,000 கல்வி கட்டண சலுகை தரப்படுகிறது.. மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ரூ.3,500 வரை கட்டண சலுகை உள்ளது. அதேபோல் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% இடஒதுக்கீட்டில் கீழ் சேர்க்கை பெறும் மாணவர்களுக்கு கட்டணம் கிடையாது என்பது முக்கியமான அம்சம் ஆகும். இன்ஜினியரிங் படிப்பில் முதலாம் ஆண்டில் தான் கட்டணம் அதிகமாக இருக்கும். இரண்டாம், மூன்றாம் மற்றும் நான்காம் ஆண்டில் ரூ.6,780 செலுத்த வேண்டும். இதில் எஸ்,எஸ்டி பிரிவினர் மற்றும் முதல் தலைமுறை பட்டதாரிகள் ரூ.4,780 செலுத்த வேண்டும். மாற்றுத்திறனாளிகள் ரூ.3,280 செலுத்த வேண்டும்.

தனியார் கல்லூரிகள் கட்டணம்

தனியார் கல்லூரிகளை பொறுத்தவரை, சென்னையில் உள்ள புகழ்பெற்ற பிரபல கல்லூரியில் விசாரித்த போது, ஆண்டுக்கு 4 லட்சம் கட்டணம் இருக்கிறது. ஒட்டுமொத்தமாக 16 லட்சம் வரை கட்டணம் இருக்கும் என்றும், மாணவர் விடுதி எல்லாம் சேர்த்தால் 20 லட்சம் என்கிற அளவில் இருக்கும் என்றும் கூறுகிறார்கள். நடுத்தர கல்லூரிகளில் ஆண்டுக்கு 2 லட்சம் என்கிற அளவில் உள்ளது. ஒட்டுமொத்தமாக 10 லட்சம் என்கிற அளவிலும் கட்டணம் இருக்கிறது. பிளேஸ்மெண்ட்டை விரும்பும் மாணவ மாணவிகள் சில குறிப்பிட்ட கல்லூரிகளையே அதிகம் விரும்புவது அதிகமாக உள்ளது. அந்த கல்லூரிகளில் சேர கட் ஆஃப் மிகஅதிகமாகவே இருக்கும் என்பதால் போட்டியும் அதிகமாக இருக்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+