Tamil Nadu Exit Poll 2024: 2019ல் லோக்சபா தேர்தல் முடிவை துல்லியமாக சொன்னது யார் தெரியுமா?
சென்னை; 2024 லோக்சபா தேர்தல் இன்றோடு நிறைவு பெற்றுள்ள நிலையில் தற்போது எக்சிட் போல் முடிவுகள் வெளியாக உள்ளன. இந்த நிலையில் 2019 லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டில் எக்சிட் போல் முடிவுகள் எப்படி இருந்தன, உண்மையான தேர்தல் முடிவுகள் என்ன வந்தன என்று பார்க்கலாம்.
நாடு முழுக்க 543 மக்களவை உறுப்பினர்களையும் தேர்ந்தெடுப்பதற்காக 2024 ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 வரை ஏழு கட்டங்களாக பொதுத் தேர்தல்கள் நடைபெறுகின்றன. வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் 4 ஜூன் 2024 அன்று அறிவிக்கப்படும். இதில் தமிழ்நாட்டில் முதல் கட்டமாக ஏப்ரல் 19ம் தேதியே தேர்தல் நடந்தது.

தமிழ்நாடு , புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. இதற்கான எக்சிட் போல் கணிப்புகள் சற்று நேரத்தில் வர உள்ளன. இந்த நிலையில் 2019 லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டில் எக்சிட் போல் முடிவுகள் எப்படி இருந்தன என்று பார்க்கலாம்.
2019 எக்சிட் போல் முடிவுகள்:
தந்தி டிவி எக்சிட் போல்: திமுக கூட்டணி - 23, அதிமுக - பாஜக கூட்டணி 14 , மற்றவர்கள் 0
இந்தியா டுடே எக்சிட் போல்: திமுக கூட்டணி - 34-38, அதிமுக - பாஜக கூட்டணி 0-4 , மற்றவர்கள் 0
டைம்ஸ் நவ் எக்சிட் போல்: திமுக கூட்டணி - 29, அதிமுக - பாஜக கூட்டணி 9 , மற்றவர்கள் 0
People Political என்ற அமைப்பின் கணிப்புகள் எக்சிட் போல்: திமுக கூட்டணி - 25, அதிமுக - பாஜக கூட்டணி 4, அமமுக 9 , மற்றவர்கள் 0
உண்மையான ரிசல்ட்; ஆனால் இந்த கணிப்புகள் பெரும்பாலும் கடந்த 2019 தேர்தலில் பொய்யானது. அந்த தேர்தலில் திமுக கூட்டணி 38 தொகுதிகளில் வென்றது. தேனியில் மட்டும் அதிமுக வென்றது. இந்தியா டுடே எக்சிட் போல் மட்டுமே நெருக்கமாக தேர்தல் முடிவுகளை கணித்தது. திமுக கூட்டணி 34- 38 இடங்களை வெல்லும் என்று கணித்தது உண்மையானது.
இந்த நிலையில் 2024 லோக்சபா தேர்தலில் எக்சிட் போல் கணிப்புகள் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
2019 லோக்சபா தேர்தல் இந்தியா அளவு: அதே போல் தேசிய அளவில் 2024 லோக்சபா தேர்தலில் எக்சிட் போல் கணிப்புகள் பின்வருமாறு இருந்தன.
இந்தியா டுடே - ஆக்சிஸ் - பாஜக கூட்டணி 352 ± 13, காங்கிரஸ் கூட்டணி 93 ± 15, மற்றவை 82 ± 13
நியூஸ்24-டுடேஸ் சாணக்யா - பாஜக கூட்டணி 350 ± 14 , காங்கிரஸ் கூட்டணி 95 ± 9, மற்றவை 97 ± 11
நியூஸ் 18 -IPSOS - பாஜக கூட்டணி 336 , காங்கிரஸ் கூட்டணி 82 , மற்றவை 124
விடிபி அசோசியேட்ஸ் - பாஜக கூட்டணி 333 , காங்கிரஸ் கூட்டணி 115 , மற்றவை 94
சுதர்சன் செய்திகள் - பாஜக கூட்டணி 313 , காங்கிரஸ் கூட்டணி 121 , மற்றவை 109
டைம்ஸ் நவ்- விஎம்ஆர் - பாஜக கூட்டணி 306 ± 3, காங்கிரஸ் கூட்டணி 132 ± 3 , மற்றவை 104 ± 3
சுவர்ணா செய்திகள் - பாஜக கூட்டணி 305, காங்கிரஸ் கூட்டணி 124 , மற்றவை 102
இந்தியா டிவி-சிஎன்எக்ஸ் - பாஜக கூட்டணி 300 ± 10 , காங்கிரஸ் கூட்டணி 120 ± 5 , மற்றவை 122 ± 6
இந்தியா நியூஸ்-போல்ஸ்ட்ராட் - பாஜக கூட்டணி 287, காங்கிரஸ் கூட்டணி 128 , மற்றவை 127
சி வோட்டர் - பாஜக கூட்டணி 287, காங்கிரஸ் கூட்டணி 128 , மற்றவை 127
நியூஸ் நேஷன் - பாஜக கூட்டணி 286, காங்கிரஸ் கூட்டணி 122 , மற்றவை 134
ஏபிபி - சிஎஸ்டிஎஸ் - பாஜக கூட்டணி 277, காங்கிரஸ் கூட்டணி 130 , மற்றவை 135
நியூஸ் எக்ஸ் - நீட்டா - பாஜக கூட்டணி 242, காங்கிரஸ் கூட்டணி 164 , மற்றவை 137
உண்மையான ரிசல்ட்: அந்த தேர்தலில் பாஜக 303 இடங்களிலும், பாஜகவின் என்டிஏ கூட்டணி 353 இடங்களிலும் வென்றது. இதை, இந்தியா டுடே - ஆக்சிஸ் , நியூஸ்24-டுடேஸ் சாணக்யா ஆகியவை துல்லியமாக கணித்து இருந்தன.
-
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்!












Click it and Unblock the Notifications