எக்ஸிட் போல் 2024: தமிழகத்தில் மீண்டும் கலக்க போகும் திமுக கூட்டணி! அதிமுகவுக்கு பலத்த அடி
சென்னை: தமிழகத்தில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணி 33 முதல் 37 தொகுதிகளில் வெல்லும் என இந்தியா டுடே ஆக்சிஸ் மை இந்தியா கணித்துள்ளது.
நாடு முழுவதும் 18ஆம் லோக்சபாவுக்கான தேர்தல் 7 கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது. மொத்தம் 543 லோக்சபா தொகுதிகளுக்கான தேர்தல் முடிந்துள்ள நிலையில் அதற்கான தேர்தல் முடிவுகள் வரும் ஜூன் 4ஆம் தேதி வெளியாகிறது.

2024 லோக்சபா தேர்தலில் 8,360 வேட்பாளர்களின் தலையெழுத்தை 97 கோடி வாக்காளர்கள் தீர்மானிக்க போகிறார்கள். பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று எதிர்பார்ப்புடன் பாஜக கூட்டணி உள்ளது. அது போல் 10 ஆண்டுகளாக இந்தியாவில் உள்ள மாநில தேர்தல்களில் ஆட்சியை இழந்து தேய்ந்து வரும் காங்கிரஸ் கட்சியோ இந்த முறை பாஜகவை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று முனைப்புடன் போட்டியிட்டுள்ளது.
543 தொகுதிகளில் 272 இடங்களில் யார் பெரும்பான்மை பெறுகிறார்களோ அவர்கள்தான் ஆட்சி அமைக்க முடியும். இந்த வகையில் தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நடந்து முடிந்த 39 தொகுதிகளுக்கான தேர்தலில் முதல் கட்டமாக நடந்து முடிந்தது.
கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் திமுக கூட்டணி 38 இடங்களில் வென்றது. அதிமுகவோ ஒரு இடத்தில் மட்டும் வெற்றி பெற்றது. இந்த நிலையில் தமிழகத்தில் நடந்த தேர்தலில் கடந்த தேர்தலை போல் திமுக கூட்டணி அதிக இடங்களில் வெல்லும் என அந்த கூட்டணியின் தலைவர்கள் குறிப்பிட்டு வந்தனர்.
திமுக 21 இடங்களிலும் காங்கிரஸ் கட்சி 9 இடங்களிலும் கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலா இரு இடங்களிலும் வென்றது. இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மதிமுக ஆகியவை தலா ஒரு இடத்திலும் போட்டியிட்டுள்ளது. அது போல் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உதயசூரியன் சின்னத்தில் ஒரு இடத்தில் போட்டியிடுகிறது.
அது போல் அதிமுக கூட்டணியில் அதிமுக 32 இடங்களிலும் புதிய தமிழகம், எஸ்டிபிஐ தலா ஒரு இடங்களிலும் தேசிய முற்போக்கு திராவிட கழகம் 5 இடங்களிலும் போட்டியிட்டது.
ஏற்கெனவே 6 கட்டங்களாக தேர்தல் நடந்த நிலையில் இன்று 7ஆவது மற்றும் இறுதி கட்ட தேர்தல் மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து மாலை 6.30 மணிக்கு எந்த கூட்டணி அதிக இடங்களில் வெல்லும் என்பது குறித்து தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ளன.
அதில் திமுக கூட்டணி 33 முதல் 37 இடங்களில் வெல்லும் என ஆக்சிஸ் மை இந்தியா எக்சிட் போல் கணித்துள்ளது. அது போல் பாஜக கூட்டணி 2-4 இடங்களில் வெல்லும் என்றும் அதிமுக கூட்டணி 0 முதல் 2 தொகுதிகளில் வெல்லும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு நடந்து முடிந்த தேர்தலை போல் அதிமுகவுக்கு இந்த முறை சரியான அடி விழுந்துள்ளது. அந்த கூட்டணி 2024 இல் ஒரு இடங்களில் கூட வெல்லாமலோ அல்லது அதிகபட்சம் 2 இடங்களிலும் வெல்ல முடியும் என தெரிகிறது.
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications