Vijay: நெக் டூ நெக்.. திகைக்க வைத்த விஜய்.. யாரோட வாக்கு அதிகம் போகுதாம் தெரியுமா? மை ஆக்ஸிஸ் கணிப்பு
சென்னை: தமிழகத்தில் விஜய்யின் தவெக ஆட்சி அமைக்கும் என ஆக்சிஸ் மை இந்தியா தனது கணிப்பில் தெரிவித்துள்ளது. தவெக 98 முதல் 120 தொகுதிகளும், திமுகவுக்கு 92 -110 தொகுதிகளுள் கிடைக்கும் என தெரிவித்து இருந்தது. விஜய்க்கு தொழில்/பிரிவு (occupational wise) வாரியாக வாக்கு சதவீதம் எவ்வளவு கிடைக்கும் என்றும் ஆக்சிஸ் மை இந்தியா கருத்து கணிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் 234 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு கடந்த 23 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. தமிழக தேர்தல் வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு இந்த முறை 85.10 சதவீத வாக்குகள் பதிவாகின. மேற்கு வங்கத்தில் இன்று இறுதி கட்ட வாக்குப்பதிவு முடிந்ததும் மாலை 6.30 மணி முதல் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாக தொடங்கின.

தவெகவிற்கு 98 -120 தொகுதிகள்
வாக்காளர்கள் வாக்களித்துவிட்டு வந்த பிறகு அவர்கள் யாருக்கு வாக்களித்தார்கள் என்பதை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்படுவதுதான் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு ஆகும். இதனால், எக்சிட் போல் முடிவுகள் பொதுமக்கள் இடையே கொஞ்சம் எதிர்பார்ப்பை ஏற்படுத்துவது வழக்கம். அந்த வகையில், இன்று பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகின.
இதில், ஆக்சிஸ் மை இந்தியா தனது கணிப்பில் தமிழகத்தில் தவெக ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளதாக கணித்துள்ளது. தவெக 98 முதல் 120 தொகுதிகளும், திமுகவுக்கு 92 -110 தொகுதிகளும், அதிமுகவுக்கு 22 - 32 தொகுதிகளும் கிடைக்கும் என கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன்.
யாருடைய வாக்குகள் அதிகம்
அதேபோல துறை ரீதியாக, வயது வாரியாக வாக்கு சதவீதம் எவ்வளவு கிடைக்கும் என்பதையும் மை ஆக்ஸிஸ் போல் வெளியிட்டுள்ளது. இதன்படி, தொழில்/பிரிவு (occupational wise) வாரியான வாக்கு சதவீதம் எவ்வளவு கிடைக்கும் என்று கருத்து கணிப்பு வெளியாகியுள்ளது. திமுகவுக்கு 35 சதவீதம், தவெகவுக்கு 35 சதவீதம், அதிமுகவுக்கு 23 சதவீதம், நாம் தமிழர் கட்சிக்கு 3 சதவீதம், பிற கட்சிகளுக்கு 4 சதவீதம் வாக்குகள் கிடைக்கும் என்று கணிப்பு வெளியாகியுள்ளது.

1. வேலை வாய்ப்பு இல்லாத (Sample 5%)
திமுக கூட்டணி - 29%
தவெக - 42%
அதிமுக கூட்டணி - 25%
நாம் தமிழர் கட்சி - 1%
மற்றவர்கள் - 3%
2. மாணவர்கள் (7%)
திமுக கூட்டணி - 14%
தவெக - 67%
அதிமுக கூட்டணி - 13%
நாம் தமிழர் கட்சி - 4%
மற்றவர்கள் - 2%
3. தொழிலாளர்கள் (19%)
திமுக கூட்டணி - 35%
தவெக - 33%
அதிமுக கூட்டணி - 26%
நாம் தமிழர் கட்சி - 2%
மற்றவர்கள் - 4%
4. விவசாயிகள் (16%)
திமுக கூட்டணி - 42%
தவெக - 21%
அதிமுக கூட்டணி - 30%
நாம் தமிழர் கட்சி - 3%
மற்றவர்கள் - 4%
5. திறமையான தொழிலாளர்கள் (3%)
திமுக கூட்டணி - 48%
தவெக - 33%
அதிமுக கூட்டணி - 14%
நாம் தமிழர் கட்சி - 3%
மற்றவர்கள் - 2%
6. சுயதொழில் / சிறு கடை (6%)
திமுக கூட்டணி - 36%
தவெக - 33%
அதிமுக கூட்டணி - 23%
நாம் தமிழர் கட்சி - 4%
மற்றவர்கள் - 4%
7. இல்லத்தரசிகள் (20%)
திமுக கூட்டணி - 34%
தவெக - 38%
அதிமுக கூட்டணி - 20%
நாம் தமிழர் கட்சி - 3%
மற்றவர்கள் - 5%
8. தனியார் ஊழியர்கள் (13%)
திமுக கூட்டணி - 26%
தவெக - 45%
அதிமுக கூட்டணி - 19%
நாம் தமிழர் கட்சி - 7%
மற்றவர்கள் - 3%
9. அரசு ஊழியர்கள் (3%)
திமுக கூட்டணி - 41%
தவெக - 28%
அதிமுக கூட்டணி - 25%
நாம் தமிழர் கட்சி - 3%
மற்றவர்கள் - 3%
10. மற்றவர்கள் (8%)
திமுக கூட்டணி - 47%
தவெக - 22%
அதிமுக கூட்டணி - 25%
நாம் தமிழர் கட்சி - 1%
மற்றவர்கள் - 5%
மை ஆக்ஸிஸ் கருத்துக்கணிப்பு தரவுகளின் படி மாணவர்கள் மத்தியில் விஜய்க்கு பெரும் ஆதரவு உள்ளது. அதாவது முதல் முறைவாக்காளர்களில் பெரும் பிரிவினர் விஜய்யையே ஆதரிக்கிறார்கள் என்பதாக மை ஆக்ஸிஸ் கருத்துக்கணிப்பு கூறுகிறது. இதன் விவரம்:-
மாணவர்கள் மத்தியில் - தவெக - 67%
வேலை வாய்ப்பு இல்லாதவர் - தவெக - 42%
விவசாயிகள் மத்தியில் திமுக கூட்டணி - 42%
திறன் தொழிலாளர்கள் இடையே திமுக கூட்டணி - 48%
தனியார் ஊழியர்களில் தவெக - 45%
அரசு ஊழியர்களில் திமுக - 41%















Click it and Unblock the Notifications