தவெகவிற்கு 120 சீட்.. திமுக - அதிமுகவை விஜய் முந்துவது எப்படி? Axis My India Exit Poll வயது டேட்டா
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் திமுகவை விட முந்தி விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 98 முதல் 120 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக ஆக்சிஸ் மை இந்தியா நிறுவனத்தின் எக்ஸிட் போல் முடிவுகள் வெளியாகி உள்ளது. இது பலருக்கும் ஆச்சரியமாக உள்ள நிலையில் இந்த ரிசல்ட் எப்படி வந்தது? திமுக, அதிமுக, நாம் தமிழர், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துக்கு வயது வாரியாக இளம் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களித்து இருப்பது தான் முக்கிய காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எந்தெந்த கட்சிக்கு எந்தெந்த வயதினர் அதிகளவில் ஆதரவாக உள்ளனர்? என்பது பற்றி 'ஆக்சிஸ் மை இந்தியா' வெளியிட்டுள்ள டேட்டாவை இங்கு பார்க்கலாம்.
தமிழக சட்டசபை தேர்தலில் வென்று யார் ஆட்சியை பிடிப்பார்கள்? என்பது தொடர்பான எக்ஸிட் போல் கருத்து கணிப்பு முடிவுகள் இன்று வெளியாகின. இதில் 'ஆக்சிஸ் மை இந்தியா' (Axis My India) கருத்து கணிப்பில் திமுக, அதிமுகவை முந்தி விஜய்யின் தவெக அதிக இடங்களை கைப்பற்றும் எனவும், தனித்து கூட ஆட்சியமைக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கருத்து கணிப்பு தமிழகத்தில் அனைவரின் புருவத்தையும் உயர்த்த செய்துள்ளது. இந்த கருத்து கணிப்பின்படி திமுக 35 சதவீதம், விஜயின் தமிழக வெற்றிக் கழகம் 35 சதவீதம் வாக்குகளை பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர அதிமுக 23 சதவீத வாக்குகளையும், நாம் தமிழர் கட்சி 3 சதவீத வாக்குகளையும், மற்றவர்கள் 4 சதவீத வாக்குகளையும் பெறுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
தவெகவிற்கு 90–120 சீட்
அதுமட்டுமின்றி திமுக கூட்டணி மொத்தம் 92 முதல் 110 தொகுதிகள் வரை வெற்றி பெறலாம். விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 98 முதல் 120 தொகுதிகள் வரை வாகை சூடலாம் என்று கூறப்பட்டுள்ளது. அதேவேளையில் பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுக 22-32 தொகுதிகளில் மட்டுமே வெல்லும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த எக்ஸிட் போல் முடிவில் மேலும் சில முக்கிய அம்சங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி எந்தெந்த வயதினர் எந்தெந்த கட்சிக்கு ஆதரவாக உள்ளனர்? என்பது பற்றி முக்கிய விவரம் இடம்பெற்றுள்ளது.
திமுக கூட்டணி
அதன்படி திமுக கூட்டணிக்கு 18 முதல் 19 வயதுக்கு உட்பட்டவர்களிடம் ஆதரவு 16 சதவீதமாகவும், 20 முதல் 29 யதுக்கு உட்பட்டவர்களிடம் 21 சதவீதமாகவும், 30 - 39 வயதுக்கு உட்பட்டவர்களிடம் ஆதரவு 29 சதவீதமாகவும், 40 முதல் 49 சதவீதத்துக்கு உட்பட்டவர்களிடம் 37 சதவீதமாகவும், 50 -59 வயதுக்கு உட்பட்டவர்களிடம் ஆதரவு 45 சதவீதமாகவும், 60 மற்றும் அதற்கு மேல் வயது கொண்டர்களிடம் 49 சதவீதமும் ஆதரவு உள்ளது.
விஜய்யின் தவெகவிற்கு...
புதிய வருகையான விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துக்கு இளம் வாக்காளர்களிடம் அமோக ஆதரவு உள்ளது. அதன்படி 18 முதல் 19 வயதுக்கு உட்பட்டவர்களிடம் தவெகவிற்கு 68 சதவீதம், 20 முதல் 29 யதுக்கு உட்பட்டவர்களிடம் 59 சதவீதம்,, 30 - 39 வயதுக்கு உட்பட்டவர்களிடம் ஆதரவு 45 சதவீதமாகவும், 40 முதல் 49 சதவீதத்துக்கு உட்பட்டவர்களிடம் 32 சதவீதமாகவும், 50 -59 வயதுக்கு உட்பட்டவர்களிடம் ஆதரவு 20 சதவீதமாகவும், 60 மற்றும் அதற்கு மேல் வயது கொண்டர்களிடம் 14 சதவீதமும் ஆதரவு உள்ளது.
Post 4 of 10 - Tamil Nadu - Exit Poll - Age-wise - Vote Share (%)#TamilNaduelections2026#ExitPoll#AxisMyIndia
— Axis My India (@AxisMyIndia) April 29, 2026
@pradeepgupta_ami pic.twitter.com/9GazkpIIwQ
அதிமுக கூட்டணிக்கு...
அதேவேளையில் அதிமுக கூட்டணியை எடுத்து கொண்டால் 18 முதல் 19 வயதுக்கு உட்பட்டவர்களிடம் 10 சதவீத ஆதரவு, 20 முதல் 29 யதுக்கு உட்பட்டவர்களிடம் 13 சதவீதம், 30 - 39 வயதுக்கு உட்பட்டவர்களிடம் ஆதரவு 19 சதவீதமாகவும், 40 முதல் 49 சதவீதத்துக்கு உட்பட்டவர்களிடம் 25 சதவீதமாகவும், 50 -59 வயதுக்கு உட்பட்டவர்களிடம் ஆதரவு 27 சதவீதமாகவும், 60 மற்றும் அதற்கு மேல் வயது கொண்டர்களிடம் 33 சதவீதமும் ஆதரவு உள்ளது.
நாம் தமிழர்
சீமானின் நாம் தமிழர் கட்சியை எடுத்து கொண்டால் 18 முதல் 19 வயதுக்கு உட்பட்டவர்களிடம் 4 சதவீதம், 20 முதல் 29 யதுக்கு உட்பட்டவர்களிடம் 4 சதவீதம்,, 30 - 39 வயதுக்கு உட்பட்டவர்களிடம் ஆதரவு 4 சதவீதமாகவும், 40 முதல் 49 சதவீதத்துக்கு உட்பட்டவர்களிடம் 2 சதவீதமாகவும், 50 -59 வயதுக்கு உட்பட்டவர்களிடம் ஆதரவு 2 சதவீதமாகவும், 60 மற்றும் அதற்கு மேல் வயது கொண்டர்களிடம் 1 சதவீதமும் ஆதரவு உள்ளது.
மற்றவர்கள்
மற்றவர்களை எடுத்து கொண்டால் 18 முதல் 19 வயதுக்கு உட்பட்டவர்களிடம் 2 சதவீதம், 20 முதல் 29 யதுக்கு உட்பட்டவர்களிடம் 3 சதவீதம், 30 - 39 வயதுக்கு உட்பட்டவர்களிடம் ஆதரவு 3 சதவீதமாகவும், 40 முதல் 49 சதவீதத்துக்கு உட்பட்டவர்களிடம் 4 சதவீதமாகவும், 50 -59 வயதுக்கு உட்பட்டவர்களிடம் ஆதரவு 6 சதவீதமாகவும், 60 மற்றும் அதற்கு மேல் வயது கொண்டர்களிடம் 3 சதவீதமும் ஆதரவு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications