அதிமுக கூட்டணி 147 தொகுதிகளில் வெல்லும்.. திமுக கூட்டணி தோல்வி அடையும்.. ஜேவிசி - டைம்ஸ் நவ் கணிப்பு
சென்னை: தமிழ்நாட்டில் அதிமுக 128 முதல் 147 தொகுதிகளில் வென்று ஆட்சி அமைக்கும் என்று ஜேவிசி - டைம்ஸ் நவ் கணிப்பை வெளியிட்டுள்ளது. திமுக கூட்டணி 75 முதல் 95 இடங்களில் வெற்றி பெறும் என்றும், தவெக 8 முதல் 15 தொகுதிகளில் வெல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுகவுக்கு சாதகமாக வந்த முதல் எக்ஸிட் போல் இதுதான். இது அதிமுக தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக நடந்து முடிந்தது. மொத்தமாக 85.15% வாக்குகள் பதிவாகியது. வாக்கு சதவிகிதம் அடிப்படையில் அதிகரித்திருப்பது போல் இருந்தாலும், கடந்த தேர்தலை ஒப்பிடும் போது சுமார் 23 லட்சம் வாக்குகளே அதிகமாக பதிவாகி இருக்கிறது. இன்று மேற்கு வங்கத்தில் 2ஆம் கட்ட தேர்தல் நிறைவடைந்த சூழலில், எக்ஸிட் போல் முடிவுகள் வெளியாகி இருக்கிறது.

அதன்படி தமிழ்நாட்டில் எந்தக் கட்சி ஆட்சியை பிடிக்கும் என்று ஏராளமான எக்ஸிட் போல் முடிவுகள் வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சியை பிடிக்கும் என்று ஜேவிசி - டைம்ஸ் நவ் போல் கணிப்புகள் வெளியாகி இருக்கிறது. அதிமுக 128 முதல் 147 தொகுதிகளில் வெல்லும் என்றும் கூறப்பட்டுள்ளது.
திமுக கூட்டணி 75 முதல் 95 இடங்களில் வெற்றி பெறும் என்றும், விஜய்யின் தவெக 8 முதல் 15 தொகுதிகளில் வெல்லும் என்றும் கூறப்பட்டுள்ளது. பெரும்பாலான எக்ஸிட் போல்களில் அதிமுகவுக்கு பின்னடைவு என்றே சொல்லப்பட்டது. இன்னும் சொல்லப் போனால் எக்ஸிட் போல் வெளியிடும் சில முன்னணி நிறுவனங்கள் அதிமுகவுக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்படும் என்று கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் அதிமுகவுக்கு சாதகமாக வந்த முதல் எக்ஸிட் போல் இதுதான். எடப்பாடி பழனிசாமி தொடர்ச்சியாக 10 தேர்தல்களில் தோல்வி அடைந்த நிலையில், இந்த எக்ஸிட் போல் முடிவு அதிமுகவுக்கு உற்சாகத்தை கொடுத்திருக்கிறது. இந்த எக்ஸிட் போல் முடிவுகள் சரியானதா என்பதை பார்க்க மே 4 வரை காத்திருக்க வேண்டும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications