மீண்டும் திமுக ஆட்சி அமையும்.. ஆட்டத்தை மாற்றிய விஜய்.. தவெக 12 இடங்களில் வெல்லும்! மேட்ரிஸ் கணிப்பு
சென்னை: தமிழ்நாட்டில் மீண்டும் திமுக கூட்டணி ஆட்சியை பிடிக்கும் என்று மேட்ரிஸ் நிறுவனம் கருத்துக்கணிப்பை வெளியிட்டுள்ளது. மேட்ரிஸ் நிறுவன கணிப்பின்படி அதிமுக கூட்டணி 87 முதல் 110 இடங்கள் வரையிலும், விஜய்யின் தவெக 10 முதல் 12 தொகுதிகள் வரை வெல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா, அசாம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டசபைத் தேர்தல் நிறைவடைந்தது. இதையடுத்து தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகி இருக்கிறது. தமிழ்நாட்டில் 234 தொகுதிகளுக்கான சட்டசபைத் தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதியே நிறைவடைந்தது. மொத்தமாக 85.15% வாக்குகள் பதிவாகியது.

இந்த நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி மேட்ரிஸ் கருத்துக்கணிப்பில் தமிழ்நாட்டில் மீண்டும் திமுக கூட்டணி ஆட்சியை பிடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி திமுக கூட்டணி 122 முதல் 132 இடங்கள் வரை கைப்பற்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக கூட்டணி 87 முதல் 110 இடங்கள் வரை கைப்பற்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஜய்யின் தவெக 10 முதல் 12 தொகுதிகள் வரை வெல்லும் என்று கணித்திருக்கிறது. பிற கட்சிகள் 0 முதல் 6 தொகுதிகள் வரை கைப்பற்றலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலமாக பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை திமுக கூட்டணி வெல்லும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே என்டிடிவி பீப்பிள்ஸ் பல்ஸ் கருத்துக்கணிப்பும் திமுகவுக்கு சாதகமாக இருந்தது.
-
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
“கூட்டணியில் யாருமே இல்லாவிட்டாலும் திமுகவுக்கு கவலையில்லை.. சொந்த பலம் இருக்கு” - ஆர்.எஸ்.பாரதி -
செல்வப்பெருந்தகைக்கு மீண்டும் நோ.. மாணிக்கம் தாகூரை களம் இறக்க காங்கிரஸ் மேலிடம் மாஸ்டர் பிளான்! -
பிரதான எதிர்க்கட்சி முதல் 2 எம்.எல்.ஏக்கள் வரை.. இதுவரை தமிழ்நாட்டில் சிபிஐ அமைத்த கூட்டணிகள் லிஸ்ட் -
திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - வீரபாண்டியன் அறிவிப்பு! -
ஸ்லீப்லெஸ் நைட் யாருக்குனு தெரியுமா.. மின்வெட்டு பரிதாபங்கள்.. தவெகவை வெளுக்கும் மீம்ஸ்! -
திமுகவில் செய்ய வேண்டிய மாற்றங்கள்.. வீரமணி வெளியிட்ட அழுத்தமான பதிவு -
“உங்க கட்சியிலேயே நீதி கிடைக்கல.. தமிழக பெண்களுக்கு எப்படி?” - விஜய்க்கு கீதா ஜீவன் சரமாரி கேள்வி! -
அதிமுகவில் பலரும் தவெகவிற்கு தாவும் நிலையில்.. திமுகவில் இருந்து ஏன் போகவில்லை? -
திமுகவின் ஆபரேஷன் சென்னை.. கையிலெடுத்த சேகர்பாபு.. அதிமுக மாஜி பெஞ்சமினுடன் திடீர் சந்திப்பு! -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ம.பி.யில் காங்கிரசுக்கு பறிபோன ராஜ்யசபா எம்பி சீட்... திமுக எம்பி வில்சன் கிண்டலாக பதிவு












Click it and Unblock the Notifications