வரிசையாக 10 தோல்வி.. அதிமுகவிற்கு மிக மோசமான காலம்.. எடப்பாடியின் கனவை நொறுக்கிய எக்சிட் போல்
சென்னை: 2024 லோக்சபா தேர்தலிலும் தமிழ்நாட்டில் அதிமுக படுதோல்வி அடையும் என்று நேற்று வெளியான எக்சிட் போல் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி வந்த காலத்தில் இருந்து வரிசையாக அக்கட்சி தோல்விகளை தழுவி வருகிறது. வரிசையாக 9 தேர்தல்களில் அதிமுக தோல்வி அடைந்துள்ளது.

தோல்வி மேல் தோல்வி: அதன்படி 2017 ஆம் ஆண்டு ஆர்.கே.நகர் இடைத்தேர்தல், 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல், அதே ஆண்டு 22 சட்டசபை தொகுதிகளின் இடைத்தேர்தல், 2020 ஊரக உள்ளாட்சி தேர்தல், 2021 சட்டசபை தேர்தல், 2021 ஆம் ஆண்டு நடந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல், 2022 ஆம் ஆண்டு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், 2023 ஆம் ஆண்டு ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல், 2020ல் நடந்த கன்னியாகுமரி லோக்சபா இடைத்தேர்தல் என மொத்தம் 9 தோல்விகளை எடப்பாடி தலைமையிலான அதிமுக சந்தித்துள்ளது.
இப்போது லோக்சபா தேர்தலில் தோல்வி அடைந்தால் அது அதிமுகவின் 10வது தொடர் தோல்வியாக அமையும். தென் மண்டலத்தில் வாக்குகளை இழந்தது, வடக்கு மண்டலத்தில் வலிமை இழந்தது, டெல்டாவில் பெரிய அளவில் சரிவை சந்தித்தது என்று அந்த கட்சி கடுமையான தோல்வியை தழுவி உள்ளது. இப்படிப்பட்ட நிலையில்தான் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கட்சிக்கு உள்ளேயே எதிர்ப்பு எழும் வாய்ப்புகள் உள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மோசமான நிலை: இதற்கு இடையில்தான் 2024 லோக்சபா தேர்தலிலும் தமிழ்நாட்டில் அதிமுக படுதோல்வி அடையும் என்று நேற்று வெளியான எக்சிட் போல் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாடு கணிப்பு: தமிழ்நாடு, புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. இதற்கான எக்சிட் போல் கணிப்புகள் வெளியாகி உள்ளன.
2024 லோக்சபா தேர்தல் நிறைவு பெற்றுள்ள நிலையில் தற்போது எக்சிட் போல் முடிவுகள் வெளியாகி உள்ளன. தமிழ்நாட்டில் அதிமுகவை விட பாஜக பெரிய கட்சியாக உருவெடுக்கும் என்று இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் திமுக கூட்டணி 33- 37 இடங்களில் வெல்லும். பாஜக கூட்டணி 2-4 இடங்களில் வெல்லும். அதிமுக கூட்டணி 0-2 இடங்களில் வெல்லும் என்று ஆக்சிஸ் மை இந்தியா தெரிவித்துள்ளது. பாஜக கூட்டணி 22 சதவிகிதம் வாக்குகளையும் அதிமுக கூட்டணி 21 சதவிகிதம் வாக்குகளையும் திமுக கூட்டணி 46 சதவிகிதம் வாக்குகளையும் வெல்லும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.
டைம்ஸ் நவ்: திமுக 34-35 இடங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது என்று டைம்ஸ் நவ் கணிப்பு வெளியிட்டு உள்ளது. 2-3 இடங்களில் பாஜக கூட்டணி வெல்ல வாய்ப்பு என்று டைம்ஸ் நவ் கணிப்பு வெளியிட்டு உள்ளது. 2 இடங்களில் அதிமுக கூட்டணி வெல்ல வாய்ப்பு என்று டைம்ஸ் நவ் கணிப்பு வெளியிட்டு உள்ளது.
நியூஸ் 24 - டுடேஸ் சாணக்யா கணிப்பு: அதிமுக கூட்டணி 0 ± 2 இடங்களை வெல்லும். திமுக கூட்டணி 29 ± 5 இடங்களை வெல்லும். பாஜக கூட்டணி 10 ± 4 இடங்களை வெல்லும் என்று நியூஸ் 24 - டுடேஸ் சாணக்யா கணிப்பு தெரிவித்துள்ளது.
தந்தி டிவி: தமிழகத்தில் 33 முதல் 40 தொகுதிகளை கைப்பற்றுவார்கள் என தந்தி டிவி கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பாஜக கூட்டணிக்கு 0 முதல் 5 தொகுதிகள் வரை கிடைக்கலாம் எனவும், அதிமுகவுக்கு 0 முதல் 2 தொகுதிகள் மட்டுமே கிடைக்கலாம் எனவும் தந்தி டிவி கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை திமுக கூட்டணிக்கு அடுத்தப்படியாக பாஜக கூட்டணி அதிக இடங்களில் வென்றால் அது நிச்சயம் அதிமுகவுக்கு பெரும் அதிர்ச்சியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா டுடே: தமிழ்நாட்டில் திமுக கூட்டணி 33- 37 இடங்களில் வெல்லும். பாஜக கூட்டணி 2-4 இடங்களில் வெல்லும். அதிமுக கூட்டணி 0-2 இடங்களில் வெல்லும் என்று ஆக்சிஸ் மை இந்தியா தெரிவித்துள்ளது. பாஜக கூட்டணி 22 சதவிகிதம் வாக்குகளையும் அதிமுக கூட்டணி 21 சதவிகிதம் வாக்குகளையும் திமுக கூட்டணி 46 சதவிகிதம் வாக்குகளையும் வெல்லும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.
டிபி லைவ்: தமிழ்நாட்டில் திமுக கூட்டணி 37-39 இடங்களில் வெல்லும் என்று டிபி லைவ் நியூஸ் கணிப்பில் கூறப்பட்டு உள்ளது. அதேபோல் அதிமுக 0-1 இடங்களில் வெல்லும் என்று டிபி லைவ் நியூஸ் கணிப்பில் கூறப்பட்டு உள்ளது. பாஜக கூட்டணி டிபி லைவ் நியூஸ் கணிப்பில் கூறப்பட்டு உள்ளது.
இப்படி 2024 லோக்சபா தேர்தலிலும் தமிழ்நாட்டில் அதிமுக படுதோல்வி அடையும் என்று நேற்று வெளியான எக்சிட் போல் கணிப்புகள் தெரிவிக்கின்றன. முக்கியமாக அதிமுகவிற்கு 2 இடங்களுக்கு மேல் கிடைக்காது என்று எல்லா கணிப்புகளும் கூறுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.
-
TN Election: 1-ல்தான் பாஜக ஜெயிக்குமா? திமுக 180-ஆ? டெல்லியை அதிர வைத்த ANS அதிர்ச்சி சர்வே! -
திமுகவையே ஓவர்டேக் செய்த எடப்பாடி.. அதிமுக – பாஜக தொகுதி பங்கீட்டில் இப்படி நடந்ததே இல்லை! பின்னணி -
பாமக வரலாற்றிலேயே முதல் முறையாக.. 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவான தொகுதிகளில் போட்டி! -
Annamalai: அதிமுக அலுவலகத்தில் அண்ணாமலையை காணோமே! ஆதரவாளர்கள் அப்செட்! எடப்பாடி கண்டிஷனா? -
பாமக போட்டியிடும் 18 தொகுதிகள் எவை? வெளியானது உத்தேச பட்டியல்.. எல்லாமே வட மாவட்டங்களில்? -
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்! -
என்டிஏவில் எல்லா நாளும் கார்த்திகை.. ஒரே குடும்பமா இருக்கோம்! சென்னை வந்ததும் கோயல் சொன்ன வார்த்தை! -
விடிய விடிய நடந்த பேச்சுவார்த்தை.. புதுவையில் திமுக - காங்கிரஸ் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடிப்பு -
பாஜக உள்ளே புகுந்துருச்சு ப்ரோ.. ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் சீட் எண்ணிக்கை! 20ஐ 27ஆக்கிய அமித் ஷா! -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி..40 கேட்ட பாஜகவுக்கு 27! ஒரே நாளில் முடிந்த டீலிங்..கெத்து அதிமுக! -
Election Commission: தேர்தல் ஆணைய கடிதத்தில் பாஜகவின் முத்திரை.. கேரள அரசியல் கட்சிகள் அதிர்ச்சி.. நடந்தது என்ன? -
உடையும் திமுக காங்கிரஸ் கூட்டணி? தொகுதிகளை முடிவு செய்வதில் நீடிக்கும் குழப்பம்! புதுச்சேரியில் பரபர












Click it and Unblock the Notifications