ஆஹா ட்விஸ்ட்.. தமிழ்நாட்டில் அதிமுக 24+ தொகுதிகளில் வெல்லுமாம்.. எந்த டிவி கணிப்பு தெரியுமா?
சென்னை: தமிழ்நாட்டில் 2024 லோக்சபா தேர்தலில் எந்தெந்த கட்சிகள் எவ்வளவு இடங்களை வெல்லும் என்று பல்வேறு கணிப்புகள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் அதிமுக தொடர்பாக வெளியாகி இருக்கும் கணிப்பு ஒன்று பெரிய அளவில் கவனம் ஈர்த்து உள்ளது.
நாடு முழுக்க 543 மக்களவை உறுப்பினர்களையும் தேர்ந்தெடுப்பதற்காக 2024 ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 வரை ஏழு கட்டங்களாக பொதுத் தேர்தல்கள் நடைபெறுகின்றன. வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் 4 ஜூன் 2024 அன்று அறிவிக்கப்படும். இதில் தமிழ்நாட்டில் முதல் கட்டமாக ஏப்ரல் 19ம் தேதியே தேர்தல் நடந்தது.

தமிழ்நாடு , புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. இதற்கான எக்சிட் போல் கணிப்புகள் வெளியாகி உள்ளன.
2024 லோக்சபா தேர்தல் இன்றோடு நிறைவு பெற்றுள்ள நிலையில் தற்போது எக்சிட் போல் முடிவுகள் வெளியாகி உள்ளன. தமிழ்நாட்டில் அதிமுகவை விட பாஜக பெரிய கட்சியாக உருவெடுக்கும் என்று இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் திமுக கூட்டணி 33- 37 இடங்களில் வெல்லும். பாஜக கூட்டணி 2-4 இடங்களில் வெல்லும். அதிமுக கூட்டணி 0-2 இடங்களில் வெல்லும் என்று ஆக்சிஸ் மை இந்தியா தெரிவித்துள்ளது. பாஜக கூட்டணி 22 சதவிகிதம் வாக்குகளையும் அதிமுக கூட்டணி 21 சதவிகிதம் வாக்குகளையும் திமுக கூட்டணி 46 சதவிகிதம் வாக்குகளையும் வெல்லும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.
அதிமுக சாதகமாக கணிப்பு: இந்த நிலையில் அதிமுக தொடர்பாக வெளியாகி இருக்கும் கணிப்பு ஒன்று பெரிய அளவில் கவனம் ஈர்த்து உள்ளது. நியூஸ் ஜெ வெளியிட்டுள்ள கருத்து கணிப்பில் அதிமுக கூட்டணி தமிழ்நாட்டில் 24க்கு மேற்பட்ட இடங்களில் வெல்லும் என்று கணிப்பில் கூறப்பட்டு உள்ளது.
மதுரை, விருதுநகர், தென்காசி, தென்சென்னை, காஞ்சிபுரம், அரக்கோணம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஆரணி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், திருப்பத்தூர், கோயம்புத்தூர், திருச்சி, ஈரோடு, நாகப்பட்டினம், சிவகங்கை, கரூர் , சிதம்பரம், மயிலாடுதுறை, பொள்ளாச்சி ஆகிய 24 தொகுதிகளில் அதிமுக கண்டிப்பாக வெல்லும் என்று நியூஸ் ஜே கணிப்பில் கூறப்பட்டு உள்ளது.
மீதம் உள்ள இடங்களில் எங்கே திமுக கூட்டணி, பாஜக கூட்டணி வெல்லும். அவர்கள் எத்தனை இடங்களில் வெல்வார்கள் என்று நியூஸ் ஜெ இதுவரை கணிப்பை வெளியிடவில்லை.












Click it and Unblock the Notifications