இதுதான் உங்க "கணக்கு" என்றால்.. எக்சிட் போல் என்ன லட்சணத்தில் இருக்கும்? திமுக பிடித்த "பாயிண்ட்"
சென்னை: தமிழ் நாட்டில் பாஜக 3-4 இடங்களை வெல்லும் என இந்த கணிப்புகள் சொல்லுமானால், ஒட்டுமொத்த இந்தியாவிலும் என்ன லட்சணத்தில் இந்த கணிப்புகள் எடுக்கப்பட்டிருக்கும்? என்று திமுக கேள்வி எழுப்பி உள்ளது.
கடந்த லோக்சபா தேர்தலில் பாஜக தேசிய அளவில் 303 இடங்களில் வென்றது. பாஜக என்டிஏ கூட்டணி 353 இடங்களில் வென்றது. காங்கிரஸ் 52 இடங்களில் வென்றது.

இந்த நிலையில் தற்போது 2024 லோக்சபா தேர்தலுக்கான எக்சிட் போல் கணிப்புகள் உள்ளன. இந்த முறை மொத்தமாக பாஜகவின் என்டிஏ கூட்டணி 339-340 இடங்களை வெல்லலாம், அதாவது லேசான சறுக்கல் இருக்கலாம் என்று கணிப்புகள் கூறுகின்றன. அதே சமயம் எதிர்க்கட்சி கூட்டணி 151-164 இடங்களில் வெல்லும் வாய்ப்புகள் இருப்பதாக கணிப்புகள் தெரிவிக்கின்றன. மற்ற கட்சிகள் 15- 25 இடங்களில் வெல்ல வாய்ப்பு உள்ளதாக இருப்பதாக கணிப்புகள் தெரிவித்துள்ளன.
தமிழ்நாடு கணிப்பு: தமிழ்நாடு , புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. இதற்கான எக்சிட் போல் கணிப்புகள் வெளியாகி உள்ளன.
2024 லோக்சபா தேர்தல் இன்றோடு நிறைவு பெற்றுள்ள நிலையில் தற்போது எக்சிட் போல் முடிவுகள் வெளியாகி உள்ளன. தமிழ்நாட்டில் அதிமுகவை விட பாஜக பெரிய கட்சியாக உருவெடுக்கும் என்று இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் திமுக கூட்டணி 33- 37 இடங்களில் வெல்லும். பாஜக கூட்டணி 2-4 இடங்களில் வெல்லும். அதிமுக கூட்டணி 0-2 இடங்களில் வெல்லும் என்று ஆக்சிஸ் மை இந்தியா தெரிவித்துள்ளது. பாஜக கூட்டணி 22 சதவிகிதம் வாக்குகளையும் அதிமுக கூட்டணி 21 சதவிகிதம் வாக்குகளையும் திமுக கூட்டணி 46 சதவிகிதம் வாக்குகளையும் வெல்லும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.
டைம்ஸ் நவ்: திமுக 34-35 இடங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது என்று டைம்ஸ் நவ் கணிப்பு வெளியிட்டு உள்ளது. 2-3 இடங்களில் பாஜக கூட்டணி வெல்ல வாய்ப்பு என்று டைம்ஸ் நவ் கணிப்பு வெளியிட்டு உள்ளது. 2 இடங்களில் அதிமுக கூட்டணி வெல்ல வாய்ப்பு என்று டைம்ஸ் நவ் கணிப்பு வெளியிட்டு உள்ளது.
நியூஸ் 24 - டுடேஸ் சாணக்யா கணிப்பு: அதிமுக கூட்டணி 0 ± 2 இடங்களை வெல்லும். திமுக கூட்டணி 29 ± 5 இடங்களை வெல்லும். பாஜக கூட்டணி 10 ± 4 இடங்களை வெல்லும் என்று நியூஸ் 24 - டுடேஸ் சாணக்யா கணிப்பு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் இந்த தேர்தல் கருத்து கணிப்பை திமுக கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. திமுக செய்தி தொடர்பு இணை செயலாளர் சரவணன் அண்ணாதுரை செய்துள்ள போஸ்டில், கோடி மீடியாக்கள் கடந்த 10 வருடங்களாக பாஜகவை ஆதரித்து வந்தது, இப்பொழுதும் கடைசி முறையாக இந்த #ExitPollls2024 மூலமாக உதவ முயற்சிக்கிறது.
தமிழ் நாட்டில் பாஜக 3-4 இடங்களை வெல்லும் என இந்த கணிப்புகள் சொல்லுமானால், ஒட்டுமொத்த இந்தியாவிலும் என்ன லட்சணத்தில் இந்த கணிப்புகள் எடுக்கப்பட்டிருக்கும்? இந்த முறை வெல்லப்போவது #INDIA #ByeByeModi, என்று தெரிவித்துள்ளார்.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications