அப்போ தமிழ்நாட்டில் தாமரை மலர்வது கன்பார்ம்? இதுவரை வந்த எக்சிட் போல் கணிப்புகள் சொல்வது என்ன?
சென்னை; தமிழ்நாட்டில் 2024 லோக்சபா தேர்தலில் கண்டிப்பாக பாஜக குறிப்பிட்ட சில இடங்களை எடுக்கும் என்று இதுவரை வெளியான பல்வேறு கருத்து கணிப்புகள் தெரிவித்துள்ளன.
நாடு முழுக்க 543 மக்களவை உறுப்பினர்களையும் தேர்ந்தெடுப்பதற்காக 2024 ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 வரை ஏழு கட்டங்களாக பொதுத் தேர்தல்கள் நடந்தன. வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் 4 ஜூன் 2024 அன்று அறிவிக்கப்படும். இதில் தமிழ்நாட்டில் முதல் கட்டமாக ஏப்ரல் 19ம் தேதியே தேர்தல் நடந்தது.

தமிழ்நாடு , புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. இதற்கான எக்சிட் போல் கணிப்புகள் வெளியாகி உள்ளன.
2024 லோக்சபா தேர்தல் இன்றோடு நிறைவு பெற்றுள்ள நிலையில் தற்போது எக்சிட் போல் முடிவுகள் வெளியாகி உள்ளன. தமிழ்நாட்டில் அதிமுகவை விட பாஜக பெரிய கட்சியாக உருவெடுக்கும் என்று இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் திமுக கூட்டணி 33- 37 இடங்களில் வெல்லும். பாஜக கூட்டணி 2-4 இடங்களில் வெல்லும். அதிமுக கூட்டணி 0-2 இடங்களில் வெல்லும் என்று ஆக்சிஸ் மை இந்தியா தெரிவித்துள்ளது. பாஜக கூட்டணி 22 சதவிகிதம் வாக்குகளையும் அதிமுக கூட்டணி 21 சதவிகிதம் வாக்குகளையும் திமுக கூட்டணி 46 சதவிகிதம் வாக்குகளையும் வெல்லும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.
டைம்ஸ் நவ்: திமுக 34-35 இடங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது என்று டைம்ஸ் நவ் கணிப்பு வெளியிட்டு உள்ளது. 2-3 இடங்களில் பாஜக கூட்டணி வெல்ல வாய்ப்பு என்று டைம்ஸ் நவ் கணிப்பு வெளியிட்டு உள்ளது. 2 இடங்களில் அதிமுக கூட்டணி வெல்ல வாய்ப்பு என்று டைம்ஸ் நவ் கணிப்பு வெளியிட்டு உள்ளது.
நியூஸ் 24 - டுடேஸ் சாணக்யா கணிப்பு: அதிமுக கூட்டணி 0 ± 2 இடங்களை வெல்லும். திமுக கூட்டணி 29 ± 5 இடங்களை வெல்லும். பாஜக கூட்டணி 10 ± 4 இடங்களை வெல்லும் என்று நியூஸ் 24 - டுடேஸ் சாணக்யா கணிப்பு தெரிவித்துள்ளது.
ரிசல்ட் விவாதம்:
இந்த நிலையில் 2019 லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டில் எக்சிட் போல் முடிவுகள் எப்படி இருந்தன என்று பார்க்கலாம்.
2019 எக்சிட் போல முடிவுகள்: இதன் மூலம் தமிழ்நாட்டில் 2024 லோக்சபா தேர்தலில் கண்டிப்பாக பாஜக குறிப்பிட்ட சில இடங்களை எடுக்கும் என்று இதுவரை வெளியான கருத்து கணிப்புகள் தெரிவித்துள்ளன.
தந்தி டிவி எக்சிட் போல்: திமுக கூட்டணி - 23, அதிமுக - பாஜக கூட்டணி 14 , மற்றவர்கள் 0
இந்தியா டுடே எக்சிட் போல்: திமுக கூட்டணி - 34–38, அதிமுக - பாஜக கூட்டணி 0–4 , மற்றவர்கள் 0
டைம்ஸ் நவ் எக்சிட் போல்: திமுக கூட்டணி - 29, அதிமுக - பாஜக கூட்டணி 9 , மற்றவர்கள் 0
People Political என்ற அமைப்பின் கணிப்புகள் எக்சிட் போல்: திமுக கூட்டணி - 25, அதிமுக - பாஜக கூட்டணி 4, அமமுக 9 , மற்றவர்கள் 0
உண்மையான ரிசல்ட்; ஆனால் இந்த கணிப்புகள் பெரும்பாலும் கடந்த 2019 தேர்தலில் பொய்யானது. அந்த தேர்தலில் திமுக கூட்டணி 38 தொகுதிகளில் வென்றது. தேனியில் மட்டும் அதிமுக வென்றது. இந்தியா டுடே எக்சிட் போல் மட்டுமே நெருக்கமாக தேர்தல் முடிவுகளை கணித்தது. திமுக கூட்டணி 34- 38 இடங்களை வெல்லும் என்று கணித்தது உண்மையானது.
-
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்!












Click it and Unblock the Notifications