மீண்டும் ஆட்சியை பிடிக்கிறது திமுக.. பீப்பிள்ஸ் பல்ஸ் கணிப்பில் தகவல்
சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் கடந்த 23 ஆம் தேதி நடைபெற்றது. மே 4 ஆம் தேதி முடிவுகள் வெளியாகவுள்ளன. ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுகவும், ஆட்சியை பிடிப்பதற்கு அதிமுகவும் போராடி வருகிறார்கள். நாம் தமிழர், தவெக கட்சிகளும் களத்தில் பலத்துடன் நிற்கிறார்கள். தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பான எக்ஸிட் போல் முடிவுகள் வெளியாகியுள்ளது. திமுக 125 முதல் 145 தொகுதிகளை கைப்பற்றும் என்று பீப்பிள் பல்ஸ் கருத்துக் கணிப்பு வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்துள்ளது. தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இறுதி வாக்காளர் பட்டியலின்படி சுமார் 5.73 கோடி வாக்காளர்கள் இடம்பெற்றிருந்தனர். இவர்களில் 85 சதவீதம் பேர் தேர்தலில் வாக்களித்திருந்தனர்.

தமிழகத்தில் இந்தமுறை 4 முனை போட்டி நிலவி வருகிறது. திமுக, அதிமுக, தவெக, நாம் தமிழர் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. ராமதாஸ் - சசிகலா தனி கூட்டணி அமைத்தனர். மொத்தம் 4,023 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். ஆட்சி அமைப்பதற்கு 117 தொகுதிகளில் வெற்றி பெறும் கட்சிக்கு தான் பெரும்பான்மை கிடைக்கும்.
நடிகர் விஜய் தவெக மூலம் அரசியலில் இறங்கிருப்பது தேர்தலில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. திமுக, அதிமுக ஆகிய 2 கட்சிகளின் வாக்குகளையும் விஜய் பிரித்துள்ளதால் இந்த தேர்தலில் வெற்றி வாய்ப்பு என்பது யாராலும் எளிதில் கணிக்க முடியாத வகையில் உள்ளது. வருகிற மே 4 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.
இந்நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பான எக்ஸிட் போல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. பீப்பிள் பல்ஸ் நிறுவனம் நிறுவனம் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பின்படி தமிழகத்தில் திமுக ஆட்சியமைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. திமுக 125 - 145 தொகுதிகளை கைப்பற்றும் என்று கூறியுள்ளனர். அதிமுக 65 - 80 தொகுதிகளில் வெற்றி பெறுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
நடிகர் விஜய்யின் தவெக 18 - 24 தொகுதிகளை கைப்பற்றுவார்கள் என்று அந்த கருத்துக்கணிப்பில் கூறியுள்ளனர். மற்றவர்கள் 2-6 தொகுதிகளில் வெற்றி பெறுவார்கள் என்றும் சொல்லியுள்ளனர். வாக்கு சதவீதம் அடிப்படையில் திமுக 38.4 சதவீதம், அதிமக 31.5 சதவீதம், தவெக 23.6 சதவீதம், மற்றவர்கள் 6.5 சதவீதம் வாக்கு பெறுவார்கள் என்றும் பீப்பிள் பல்ஸ் கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications