"இதுதான் கூட்டாட்சி".. கடுமையாக பாடம் எடுத்த உச்ச நீதிமன்றம்.. அப்பவே சொன்னேனே.. விளாசிய பிடிஆர்!
சென்னை: ஜிஎஸ்டி கவுன்சில் தொடர்பான விவகாரங்களில் சட்டம் இயற்ற மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளது போலவே மாநில அரசுக்கும் அதிகாரம் உள்ளது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவை தமிழ்நாடு நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வரவேற்று உள்ளார்.
இந்தியா முழுவதும் பல்வேறு துறைகள் மற்றும் சேவைகளில் ஜிஎஸ்டி வரி அமலில் இருக்கிறது. இந்த ஜிஎஸ்டி வரி விதிப்பில் செய்ய வேண்டிய மாற்றங்கள், வரி விதிப்புகளை ஜிஎஸ்டி கவுன்சில்தான் பரிந்துரை செய்யும்.
இந்த நிலையில் ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு முக்கியமான சில உத்தரவுகளை பிறப்பித்தது.

ஜிஎஸ்டி கவுன்சில்
அதில், ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு பரிந்துரைக்கும் அதிகாரங்கள் மட்டுமே உள்ளன. ஆனால் அவர்கள் கட்டாயப்படுத்த முடியாது. ஜிஎஸ்டி கவுன்சிலின் பரிந்துரைகள் மத்திய & மாநில அரசுகளை கட்டுப்படுத்தாது. ஜிஎஸ்டி கவுன்சில் முடிவுகளுக்கு எதிராக சட்டம் இயற்ற மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது. இந்தியா ஒரு கூட்டாச்சி ஒன்றியம் என்பதால் ஜிஎஸ்டி கவுன்சிலின் முடிவிற்கு கட்டுப்பட வேண்டியதில்லை என்று கூறியுள்ளது.

உச்ச நீதிமன்றம்
இந்த ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு எதிரான தீர்ப்பு மாநில அரசுகளுக்கு ஆதரவான தீர்ப்பாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் ஜிஎஸ்டி கவுன்சில் கொடுக்கும் பரிந்துரைகளை இனி கட்டாயமாக பின்பற்ற வேண்டிய நிலை மாநில அரசுகளுக்கு கிடையாது. அதோடு ஜிஎஸ்டி கவுன்சில் போடும் உத்தரவுகளுக்கு எதிராக சட்டம் இயற்ற மாநில அரசுகளுக்கு உரிமை உள்ளது என்று உச்ச நீதிமன்றம் கூறி இருப்பது மாநில உரிமைகளை காக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா கூட்டாச்சி
அதிலும் இந்தியா கூட்டாட்சி தத்துவம் கொண்ட நாடு என்பதால், ஒரு அமைப்பு மட்டும் கூடுதல் அதிகாரம் கொண்டு இருக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி பாடம் எடுத்துள்ளது. இந்த ஜிஎஸ்டி விவகாரத்தில் தமிழ்நாடு நிதிக்கு அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தொடர்ந்து பல பரிந்துரைகளை செய்து வந்தார். இந்த கவுன்சிலில் பெரிய மாற்றங்களை செய்ய வேண்டும் என்று ஆலோசனைகளை வழங்கி வந்தார்.

பிடிஆர் பரிந்துரை
அதிலும் இவர் கலந்து கொண்ட முதல் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திலேயே அதிரடியான பரிந்துரைகளை மேற்கொண்டார். கவுன்சிலில் செய்ய வேண்டிய முக்கியமான மாற்றங்களை அவர் பரிந்துரை செய்தார் . கோவா மாநில நிதி அமைச்சர்கள் உள்ளிட்ட சிலர் இவரின் பரிந்துரைகளை எதிர்த்ததும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில்தான் உச்ச நீதிமன்றம் ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு கடிவாளம் போடும் வகையில் பிறப்பித்துள்ள உத்தரவை நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வரவேற்று இருக்கிறார்.
Recommended Video

வரவேற்பு
இது தொடர்பாக பிடிஆர் தெரிவிக்கையில், முதல்வர் ஸ்டாலின் கடந்த மே 2021 என்னை GST கவுன்சிலுக்கு நியமித்ததிலிருந்தே இதை நான் கூறிவருகிறேன் (முழு உரை குறிப்பு:https://ptrmadurai.com/43rd-goods-and-services-tax-council-meeting-tamil) இத்தீர்ப்பு அதனை தெளிவுபடுத்தியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. GST-இல் முழு மாற்றங்கள் தேவை, என்று குறிப்பிட்டு இருக்கிறார். இந்த புதிய உத்தரவை தொடர்ந்து ஜிஎஸ்டி கவுன்சிலின் சில பரிந்துரைகளுக்கு எதிராக தமிழ்நாடு அரசு விதிகளை கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications