டி.டி.வி. தினகரனின் வலது கரம்.. முன்னாள் அமைச்சர் பழனியப்பன் தி.மு.க.வில் இணைந்தார்!
சென்னை: முன்னாள் அமைச்சரும், அ.ம.மு.க துணை பொதுச் செயலாளருமான பழனியப்பன் இன்று தி.மு.க.வில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழ்நாடு முதல்வரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார்.
அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரனுக்கு வலது கரமாக செயல்பட்ட பழனியப்பன். மேலும் சசிகலாவுக்கு தீவிர விசுவாசியாகவும் விளங்கி வந்தார்.

தினகரனின் வலது கரம்
டி.டி.வி தினகரன் மீது அதிருப்தி கொண்ட பழனியப்பன் தி.மு.க.வில் விரைவில் இணைய உள்ளார் என்று தகவல்கள் பரவி வந்த நிலையில் இன்று அந்த செய்தி உறுதியாகியுள்ளது. அ.தி.மு.க.வில் ஜெயலலிதா ஆட்சியின்போது உயர்கல்வித் துறை அமைச்சராக இருந்தவர் பழனியப்பன். ஆனால் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு டி.டி.வி. தினகரன் பக்கம் சாய்ந்து சசிகலாவுக்கு ஆதரவு கொடுத்தார்.

தினகரனுக்கு அதிர்ச்சி
இதனால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அ.ம.மு.க.வில் இருந்து பலரும் வெளியேறி சென்று கொண்டிருந்த நிலையில் அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரனுக்கு வலது கரமாக செயல்பட்டு அவருக்கு ஆலோசனை கொடுத்து வந்தார் பழனியப்பன். தற்போது இவரும் தி.மு.க.வில் இணைந்துள்ளது டி.டி.வி தினகரனுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

தள்ளாடும் அ.தி.மு.க
அ.தி.மு.க தலைமை ஏற்கனவே தள்ளாடி வரும் நிலையில் சசிகலாவும், அ.தி.மு.க தொண்டர்களுடன் தொடர்ந்து பேசி கூடுதல் நெருக்கடியை கொடுத்து வருகிறார். தேர்தலில் படுதோல்வியால் அ.ம.மு.க.வும் ஒரு பக்கம் தவியாய் தவித்து வருகிறது. இதனை சாதமாக பயன்படுத்திக் கொள்ளும் மு.க.ஸ்டாலின் அ.தி.மு.க, அ.ம.மு.க. முக்கிய நிர்வாகிகளை தி.மு.க. பக்கம் தொடர்ந்து இழுத்து வருகிறார்.

ஸ்டாலினுக்கு இருக்கும் வரவேற்பு
சசிகலா உடன் தொலைப்பேசியில் பேசியதாக அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட நிர்வாகிகள் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மாரியப்பன் கென்னடி, ஜெயந்தி பத்மநாபன்,டேவிட் செல்வன் உள்பட 20 பேர் கடந்த வாரம் தி.மு.க.வில் இணைந்தனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தும் திட்டங்களை மக்களிடம் மட்டுமின்றி பா.ம.க உள்ளிட்ட எதிர்கட்சிகளிடமும் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. அடுத்த சட்டசபை தேர்தலையும் குறிவைத்து மு.க.ஸ்டாலின் காய் நகர்த்தி வருவதால் அ.தி.மு.க, அ.ம.மு.க.வினர் தி.மு.க.வில் இணைந்து வருவது குறிப்பிடத்தக்கது.
-
"நாளைக்கு வரோம்.. களத்தை அதிர வைக்கிறோம்!" டெல்லியை மிரள வைக்க கிளம்பிய கரப்பான் பூச்சி கட்சி! -
தவெக தலைமையில் தமிழ்நாடு சமூக நீதி முற்போக்கு கூட்டணி.. திமுகவுக்கு பிரவீன் சக்ரவர்த்தி செக்மேட் -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
தமிழகத்தில் ஒரே நேரத்தில் 60 சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறை ரெய்டு! -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
தவெகவில் இணைந்த 5 மாஜி அமைச்சர்கள், 7 Ex MLAs! இதுவரை அதிமுகவில் இருந்து விலகியவர்கள் யார் யார்? -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
புலிப் பாய்ச்சல்.. உலக அரங்கில் தலைநிமிரும் இந்தியா! எதிர்பார்ப்புகளை கடந்த பிரம்மாண்ட GDP வளர்ச்சி! -
2047ல் இந்தியா வல்லரசு.. வாய்ப்பில்லை ராஜா! இன்னும் 34 வருஷமாகும்.. உண்மையை உடைத்த ஆய்வறிக்கை! -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம












Click it and Unblock the Notifications