தமிழ்நாட்டில் ராகுல் காந்திதான் கிங்.. ஆனால் மெல்லமாக உயரும் மோடியின் செல்வாக்கு.. பரபரப்பு சர்வே
சென்னை: தந்தி டிவி சார்பாக 2024ல் பிப்ரவரி மாதம் எடுக்கப்பட்ட சர்வேயில் 33 சதவிகிதம் பேர் மோடி பிரதமர் ஆக வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். ராகுல் காந்திக்கு 65 சதவிகிதம் பேர் ஆதரவாக வாக்களித்துள்ளனர்.
லோக்சபா தேர்தல் தொடர்பாக பல்வேறு கருத்து கணிப்புகள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் தந்தி டிவி சார்பாக தமிழ்நாட்டிலும் புதுச்சேரியிலும் கருத்து கணிப்புகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. அதன் முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளன.

தமிழ்நாட்டில் இன்னும் கூட்டணி உறுதியாகாத காரணத்தால் தந்தி டிவி நடத்திய இந்த கருத்து கணிப்பில், யார் எந்த தொகுதியில் வெற்றிபெறுவார்கள் என்று உறுதியாக சொல்ல முடியாது. ஆனால் ஒரு தொகுதியில் மக்கள் எந்த கட்சிக்கு அல்லது எந்த கொள்கைக்கு ஆதரவாக இருப்பார்கள், எந்த கட்சி பக்கம் சாய தயாராக இருக்கிறார்கள் என்பதை கணிப்பில் தெரிவித்துள்ளனர்.
அந்த வகையில் தந்தி டிவி சார்பாக 2024ல் பிப்ரவரி மாதம் எடுக்கப்பட்ட சர்வேயில் 33 சதவிகிதம் பேர் மோடி பிரதமர் ஆக வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். ராகுல் காந்திக்கு 65 சதவிகிதம் பேர் ஆதரவாக வாக்களித்துள்ளனர்.
2024ல் பிப்ரவரி மாதம் எடுக்கப்பட்ட சர்வேயில் 33 சதவிகிதம் பேர் மோடி பிரதமர் ஆக வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். இதுவே ராகுல் காந்திக்கு 65 சதவிகிதம் பேர் ஆதரவாக வாக்களித்துள்ளனர். பிரதமர் மோடிக்கு வாக்களிக்க விரும்பும் நபர்களின் சதவிகிதம் 27 சதவிகித்தில் இருந்து கடந்த 10 மாதங்களாக உயர்ந்து உயர்ந்து 33 ஆக மாறி உள்ளது.
அதுவே ராகுல் காந்திக்கு 71 சதவிகிதம் பேர் 10 மாதங்களுக்கு முன் ஆதரவு அளிக்க முன்வந்தனர். அது தற்போது 65 சதவிகிதம் ஆக உள்ளது.
அதேபோல் மீண்டும் பாஜக மத்தியில் ஆட்சியில் அமைக்கும் என்று 42 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். 56 சதவிகிதம் பேர் பாஜக ஆட்சி அமைக்காது என்று கூறியுள்ளனர். இவர்கள் பாஜகவை ஆதரிக்கவில்லை. அல்லது எதிர்க்கவும் இல்லை. ஆனால் இதுதான் தேர்தல் முடிவாக இருக்கும் என்று அவர்கள் கணித்துள்ளனர்.
புதுச்சேரி முடிவுகள்; புதுச்சேரியில் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் யார் பிரதமராக வர வேண்டும் என நீங்கள் விரும்புகிறீர்கள் என்ற கேள்விக்கு 49 சதவீதம் பேர் ராகுல் காந்தி என்றும் 51 சதவீதம் பேர் நரேந்திர மோடி என்றும் பதில் அளித்துள்ளனர். அது போல் மத்தியில் மீண்டும் ஆட்சி அமைப்பது பாஜகவா என்ற கேள்விக்கு 53 சதவீதம் பேர் ஆம் என்றும் 44 சதவீதம் பேர் இல்ல என்றும் 3 சதவீதம் பேர் கருத்து இல்லை என்றும் தெரிவித்துள்ளன
அயோத்தி ராமர் கோவில் திறப்பு, பாஜகவுக்கு புதுச்சேரியில் கை கொடுக்குமா?
இல்லை- 51%
ஆம்- 46%
கருத்து இல்லை- 3%
ராமர் கோவிலுக்காக பாஜகவுக்கு வாக்களிப்பீர்களா (புதுச்சேரி)
இல்லை- 49%
ஆம்- 44%
கருத்து இல்லை- 7%
யார் பிரதமராக விரும்புகிறீர்கள்
மோடி -51%
ராகுல்-49%
மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சி அமைக்குமா?
ஆம் 53%
இல்லை 44%
கருத்து இல்லை- 3%












Click it and Unblock the Notifications