சட்டென ஆன்லைனில் உயர்ந்த ஆவணங்கள் பதிவிறக்க கட்டணம்.. ஐஏஎஸ் அமுதாவின் அதிரடி.. தமிழக அரசு அறிவிப்பு
சென்னை: விபத்து தொடர்பான ஆவணங்களை டவுன்லோடு செய்வதில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு அறிவிப்பினையும் வெளியிட்டுள்ளது.
சாலை விபத்தில் சிக்கியவர்களுக்கு, காப்பீடு தொகை வழங்குவதற்காக, காப்பீடு நிறுவனங்கள், விபத்து தொடர்பான ஆவணங்களை, காவல் துறை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்கின்றன.

தமிழக அரசு: இதற்கு காவல்துறை சார்பில், 100 ரூபாய் கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. இந்த கட்டணத்தை, உயர்த்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்ட நிலையில், அதுகுறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதாவது, ஒரு ஆவணத்துக்கான பதிவிறக்கக் கட்டணம் ரூ.100-ல் இருந்து ரூ.125 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசின் உள்துறை முதன்மை செயலாளர் பெ.அமுதா வெளியிட்ட உத்தரவு இதுதான்:
"சாலை விபத்து தொடர்பான வழக்குகளில் பாதிக்கப்பட்டோருக்கு விரைந்து காப்பீட்டுக்கான பயன்கள் கிடைக்க தமிழக அரசு ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளது.
விபத்துகள்: அதன்படி விபத்து வழக்கு குறித்த ஆவணங்களை சம்பந்தப்பட்ட காப்பீட்டு நிறுவனங்கள் பெற்றுக்கொள்ள வகை செய்யப்பட்டுள்ளது. இதற்காக சாலை விபத்து தொடர்பான ஒரு ஆவணத்துக்கு ரூ.100 கட்டணத்தை தமிழக அரசுக்கு காப்பீட்டு நிறுவனங்கள் செலுத்த வேண்டும்.
இந்த தொகையில் குறிப்பிட்ட பங்கு, குற்றம் மற்றும் குற்ற கண்காணிப்பு வலையமைப்பு சேவை நிதியத்தில் வரவு கைக்கப்பட்டு வருகிறது. சாலை விபத்துக்கள் குறித்த முதல் தகவல் அறிக்கை வாகன பதிவு விவரங்கள் போன்றவை காப்பீடு நிறுவனங்களுக்கு தேவையானதாக உள்ளன.
கட்டண உயர்வு: இந்த ஆவணங்களை பதிவிறக்கம் செய்வதற்கான கட்டணத்தை உயர்த்த மாநில குற்ற ஆவண காப்பக கூடுதல் டிஜிபியின் கோரிக்கையை ஏற்று ஒரு ஆவணத்தை பதிவிறக்கம் செய்வதற்கான கட்டணத்தை ரூ.100-லிருந்து ரூ.125 ஆக உயர்த்த அரசுக்கு தமிழக காவல் டிஜிபி பரிந்துரை செய்திருந்தார்.
டிஜிபியின் கோரிக்கையை கவனமுடன் பரிசீலித்த தமிழக அரசு, சாலை விபத்து தொட்ரபான அரசு ஆவணத்தை காப்பீட்டு நிறுவனங்கள் பதிவிறக்கம் செய்து கொள்வதற்கான கட்டணத்தை ரூ.125 ஆக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதில், அரசு கணக்கில் ரூ.12.50ம், குற்றம் மற்றும் குற்ற கண்காணிப்பு வலையமைப்பு சேவைகள் நிதியத்துக்கு ரூ.112-ம் வரவு வைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார் அவர்.












Click it and Unblock the Notifications