தமிழக அரசு குட்நியூஸ்.. இலவச வீடுகள் கட்டித்தரும் திட்டம் குறித்து அமைச்சர் அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: வீடற்ற 1500 குடும்பங்களுக்கு வீடுகள் கட்டித்தரப்படும் என்றும் அதற்காக 79 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது:

Tamil Nadu government allocates 79 crore rupees to build houses for 1500 homeless families

விளிம்பு நிலை மக்களுக்கான பொருளாதார முன்னேற்றமே அவர்களுக்கான சமூக நீதியாக அமையும் என்பதில் உறுதியாக நம்பிக்கை உடைய தமிழக முதல்வர் ஸ்டாலினின் எண்ணத்திற்கு உரு கொடுக்கும் வகையில், 2023-24ம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையின் மீது ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலன் தொடர்பாக கீழ்க்கண்ட அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அதாவது " பொருளாதாரத்தில் பின்தங்கிய வீடற்ற 1000 பழங்குடியினர் குடும்பங்கள் மற்றும் தற்போது பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள 500 நறிக்குறவர் குடும்பங்கள் என மொத்தம் 1500 குடும்பங்களுக்கு வீடுகள் ரூ.45 கோடி மதிப்பீட்டில் தகுதியின் அடிப்படையில் கட்டித்தரப்படும்" என அமைச்சர் கயல்விழி செல்வராஜ் அறிவித்திருந்தார்.

Tamil Nadu government allocates 79 crore rupees to build houses for 1500 homeless families

மேற்கண்ட அறிவிப்பினை செயல்படுத்தும் வகையில், 2023-24ம் ஆண்டில் பொருளாதாரத்தில் பின்தங்கிய வீடற்ற 1000 பழங்குடியினர் குடும்பங்கள் மற்றும் தற்போது பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள 500 நரிக்குறவர் குடும்பங்கள் என 1500 பழங்குடியினர்களுக்கு தமிழ்நாட்டில், 19 மாவட்டங்களில் வீடுகள் கட்டுவதற்காக 79 கோடியே 28 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்குடு செய்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

மேற்கண்ட 1500 வீடுகளை விரைந்து கட்டி முடித்திட தேவையான நடவடிக்கை விரைவில் மேற்கொள்ளப்படும் என ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தெரிவித்துள்ளார்"இவ்வாறு தமிழக அரசின் செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+