ரீல்ஸ் கிரியேட்டர்களுக்கு தமிழக அரசின் சூப்பர் அறிவிப்பு! ஆஹா.. உங்களுக்காகவே ஒரு அசத்தலான போட்டி!
சென்னை: இன்றைக்கு உலகமே ரீல்ஸ் மயமாகிக் கிடக்கிறது. ரீல்ஸ் வீடியோ கிரியேட்டர்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பை வழங்குகிறது தமிழக அரசு. தமிழக அரசின் திட்டங்கள் குறித்த ரீல்ஸ் போட்டி ஒன்றை அறிவித்துள்ளது தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறை. சிறந்த ரீல்ஸ்களுக்கு அமைச்சர் பாராட்டு சான்றிதழ் வழங்குவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சமூக வலைதளங்கள் மக்களின் வாழ்க்கையில் பெருமளவில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. சமீப காலமாக சமூக வலைதளங்களில் வர்க்க பேதமின்றி ஏராளமானோர் அன்றாடம் ரீல்ஸ் பதிவிட்டு வருகின்றனர். இன்றைய காலகட்டத்தில் தங்களை பிரபலப்படுத்திக் கொள்வதற்கு யூடியூப், ஃபேஸ்புக் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் ரீல்ஸ் பதிவிடுவது வழக்கமாக இருந்து வருகிறது.

ரீல்ஸ் மூலமாக ஏராளமானோர் உலகப் புகழ் பெற்றுள்ளனர். ரீல்ஸ் மூலமாக பல்வேறு திறமையாளர்களுக்கு வெளிச்சம் கிடைக்கிறது, அதன் மூலம், வாய்ப்புகளும் வருமானமும் கிடைக்கிறது. இதனால் பலரும் சமூக வலைதளங்களின் புதிய வசதிகளை பொருளாதார ரீதியான மேம்பாட்டுக்கு பயன்படுத்திக் கொள்கின்றனர்.
சமயங்களில் ரீல்ஸே, பல்வேறு சிக்கலுக்கும் காரணமாகி விடுகிறது. பல்வேறு குற்றச் சம்பவங்களும் ரீல்ஸ் தொடர்பாக நடக்கின்றன. பட்டாக்கத்தி, துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் ரீல்ஸ் வீடியோ எடுத்துப் பகிர்வதும் நடக்கிறது. ரீல்ஸ் மூலமாக தவறான தகவல்களைப் பரப்பி சமூக ஒற்றுமையைக் குலைப்பதும் அரங்கேறுகிறது.
இந்நிலையில், தமிழ்நாடு அரசின் மக்கள் செய்தி தொடர்புத்துறை ஒரு ரீல்ஸ் போட்டி ஒன்றை அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசின் 5 முக்கியமான திட்டங்களில் ஒன்றைப் பற்றி 1 நிமிட அளவிற்கு ரீல்ஸ் வீடியோ எடுத்து அனுப்ப வேண்டும், சிறந்த 3 ரீல்ஸ்களுக்கு அமைச்சர் நேரில் அழைத்து பாராட்டி சான்றிதழ் வழங்குவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் மக்கள் செய்தி தொடர்புத்துறை இயக்குநர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தமிழ்நாடு அரசின் அசத்தலான 5 திட்டங்களான நான் முதல்வன் திட்டம், விடியல் பயணத் திட்டம், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், புதுமைப் பெண் திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் இந்த திட்டங்களில் ஏதேனும் ஒன்று குறித்து வீடியோ ரீல்ஸ்-ஐ [email protected] என்ற முகவரிக்கு அனுப்பவும்.
வீடியோ ரீல்ஸ்கள் ஒரு நிமிடம் மட்டுமே இருக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த 3 ரீல்ஸ்களுக்கு செய்தி மக்கள் தொடர்புத்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பாராட்டி சான்றிதழ்களை வழங்குவார். மேலும், தேர்வாகும் சிறந்த ரீல்ஸ்கள் தமிழ்நாடு அரசின் சமூக வலைத்தளப் பக்கங்களில் வெளியிட்டப்படும். அனுப்ப வேண்டிய கடைசி நாள் வரும் ஆகஸ்ட் 15." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications