தமிழ்நாடு முழுக்க நியாய விலைக் கடைகளுக்கு.. பறக்க போகும் ஆர்டர்.. ரேஷன் கடைகளில் நடக்கும் மாற்றம்
சென்னை: கூட்டுறவுத் துறையின் கீழ் நியாய விலைக் கடைகளில் உள்ள 3,353 காலியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு கூட்டுறவு துறையின் கீழ் மேற்கொண்டுள்ள முக்கிய சாதனைகளை அரசு அதிகாரப்பூர்வ அறிக்கையாக வெளியிட்டுள்ளது 2021 முதல், 66.24 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.53,340 கோடி பயிர்க் கடன் வழங்கப்பட்டுள்ளது. 11.70 லட்சம் பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.4,904 கோடி மதிப்பிலான தங்க நகைக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 1.01 லட்சம் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.2,118 கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. சுய உதவிக் குழுக்களுக்கான கடன் உச்சவரம்பு ரூ.20 லட்சத்திலிருந்து ரூ.30 லட்சமாக உயர்த்தப்பட்டது. விவசாயம் சார்ந்த நடவடிக்கைகளை ஆதரிக்கும் வகையில் 11.88 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.6,372 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது என்று அரசு தெரிவித்துள்ளது.
47,221 மாற்றுத் திறனாளிகள், 16,578 பணிபுரியும் பெண்கள், 49,000 பெண் தொழில் முனைவோர் மற்றும் 4,494 நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு உதவி வழங்கப்பட்டுள்ளது. அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டத்தின் கீழ் 86 துப்புரவுப் பணியாளர்கள் இயந்திரமயமாக்கப்பட்ட கழிவுநீர் வாகனங்களைப் பெற்று தொழில் முனைவோர்களாக மாறியுள்ளனர்.
கூடுதலாக, மாநிலம் முழுவதும் மலிவு விலையில் மருந்துகளை வழங்குவதற்காக 70 புதிய கூட்டுறவு மருந்தகங்கள் மற்றும் 1,000 முதலமைச்சரின் மருத்துவக் கடைகள் தொடங்கப்பட்டுள்ளன என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், இந்த மைல் கற்கள் திராவிட மாடலின் உள்ளடக்கிய ஆட்சியை பிரதிபலிக்கின்றன. என்று கூறப்பட்டுள்ளது.
சேமிப்புக் கிடங்கு மேலாண்மை மற்றும் கூட்டுறவு வங்கிச் செயல்பாடுகளில் சிறந்து விளங்கியதற்காக மத்திய அரசிடம் இருந்து தமிழ்நாடு அரசு பல விருதுகளைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் கூட்டுறவுத் துறையின் கீழ் நியாய விலைக் கடைகளில் உள்ள 3,353 காலியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
தமிழக அரசு ஊழியர்களுக்கான அறிவிப்பு
தமிழ்நாட்டில் அரசு ஊழியர்களுக்கு என்று கடந்த 30 நாட்களில் மட்டும் ஏகப்பட்ட முக்கியமான அசத்தலான அறிவிப்புகளை தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டு உள்ளார். அரசு ஊழியர்களை கவரும் விதமாக.. அவர்ளின் பல நாள் கோரிக்கைகளை ஏற்று பல முக்கியமான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளன. இந்த அறிவிப்புகள் என்னனென்ன என்று இங்கே பார்க்கலாம்.
தமிழக அரசு போக்குவரத்து கழக 6% ஊதிய உயர்வு வழங்கப்படும் என முடிவெடுக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் அரசு போக்குவரத்து கழகங்களில் வேலை செய்யும் ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு ஒப்பந்தம் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை மேற்கொள்ளப்பட்டு வந்தது. கடைசியாக 14வது ஊதிய ஒப்பந்தம் கடந்த 2023ம் ஆண்டு முடிவடைந்தது.
அரசு ஊழியர்களுக்கு கட்டணமின்றி ஆயுள் காப்பீடு, விபத்து காப்பீடு குறித்து முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டார். ஆயுள் காப்பீடு மற்றும் விபத்துக் காப்பீட்டை கட்டணமின்றி வழங்க, புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே முன்னோடி மாநிலமாக, அரசு ஊழியர்களுக்குஇலவசமாக இந்த திட்டம் கொண்டு வரப்பட்டு உள்ளது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 2% உயர்த்தப்பட்டது. இந்த முறை அரசு சார்பாக 2% உயர்வு செய்யப்பட்டதால் நிலை 1 அரசாங்க ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தில் ரூ. 360 ஆக இருக்கும். அதாவது ரூ.360 சம்பளத்தில் உயரும் என்று அறிவிக்கப்பட்டது. 7வது ஊதியக் குழுவின் கீழ், அரசு ஊழியர்களுக்கான குறைந்தபட்ச அடிப்படை ஊதியம் (நிலை 1) ரூ.18,000 ஆக நிர்ணயிக்கப்பட்டது. இவர்களுக்கு 360 ரூபாய் அகவிலைப்படி உயர்வு இருக்கும்
அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் பண்டிகைக் கால முன்பணம் ரூ.10,000ல் இருந்து ரூ.20,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் கல்வி முன்பணம் தொழிற்கல்விக்கு ரூ.1 லட்சம், கலை, அறிவியல், மற்றும் பாலிடெக்னிக் படிப்புகளுக்கு ரூ.50,000 ஆக உயர்த்தி வழங்கப்படும்.
-
மழையும் இருக்கு.. வெயிலும் இருக்கு.. குழப்பி அடிக்கும் வானிலை! உஷார் மக்களே! -
10 இடங்களில் செஞ்சுரி போட்ட வெயில்.. வேலூரில் அதிகபட்ச வெப்பநிலை பதிவு! -
குஷ்பு ஜிம்னாஸ்டிக் சாம்பியன்.. சுந்தர் சிக்கு படித்துப் புரிந்து கொள்ளும் அறிவு இல்லை.. பிடிஆர் -
தர்மபுரியில் மருமகள் சௌமியாவுக்கு எதிராக களமிறங்க போகும் மாமனார் ராமதாஸ்.. அன்புமணி ரியாக்ஷ்ன் -
ஜுவல்லரி கடைகளுக்கு விழுந்த அடி! ஒரு ரூபாயில் தங்கம்.. இளைஞர்களின் ஸ்மார்ட் மூவ்! உரிமையாளர்கள் ஷாக் -
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
பெட்ரோல் டூவீலர்களுக்கு மொத்தமாக தடை.. அரசு திட்டவட்டம்! ஏற்கனவே பைக் வைத்திருப்போர் என்ன செய்யணும்? -
இரவிலேயே பாய் விரித்து இடம்.. நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள் -
மணி பிளான்ட் இனி தேவையில்லை.. காந்தம் போல பணத்தை ஈர்க்கும் 'அந்த' ஒரு செடி! வீட்டில் எங்கே வைக்கலாம் -
6 மாதங்களில் அண்ணாமலைக்கு தமிழக முதல்வர் பதவி! இபிஎஸ் தலையில் இடியை இறக்கிய திருமாவளவன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ்: மயில் கர்ப்பத்தை பற்றி பழனி சொன்ன விஷயம்! கோபத்தில் சரவணன்.. கதிர் செய்த நல்ல விஷயம்












Click it and Unblock the Notifications