அல்வா மாதிரி ரூ.20,000.. அள்ளித் தருது தமிழக அரசு! ‘இதை’ மட்டு செய்தாலே போதும்! எப்படி பெறுவது?
சென்னை: இணைய தள சேவை மற்றும் டெலிவரி தொழிலாளர்களுக்காக தமிழக அரசு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்துள்ள டெலிவரி பணியாளர்கள் புதிய மின்சார இருசக்கர வாகனம் வாங்கும் போது தலா ரூ.20,000 மானியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்காக தமிழக அரசு நான்கு கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. தற்போது இதற்கான பதிவு தொடங்கியுள்ளதுடன், தகுதியுள்ளவர்களைத் தேர்வு செய்வது நடைபெற்று வருகிறது.
தொழில்நுட்பம் வளர்ந்து விட்ட நிலையில் ஒட்டுமொத்த உலகமும் செல்போனுக்குள் சுருங்கிவிட்டது. அனைத்து விதமான துறைகளும் ஆன்லைன் மயமாகிவிட்டது. தற்போதைய சூழலில் உணவு, வர்த்தகம் ஆகிய துறைகளும் ஆன்லைன் வர்த்தகமாக மாறிவிட்டது.

இதை அடுத்து பிளிப்கார்ட், அமேசான் உள்ளிட்ட நிறுவனங்கள் பெருவளர்ச்சி பெற்றுள்ளன. மேலும் ஸ்விக்கி, சொமாட்டோ போன்ற உணவு டெலிவரி நிறுவனங்களும் உலக அளவில் மிகப்பெரிய நிறுவனங்களாக இருக்கின்றன. இந்த நிறுவனங்களின் மூலம் இலட்சக்கணக்கான நபர்கள் வேலை வாய்ப்பு பெறுகிறார்கள்.
டெலிவரி தொழிலாளர் திட்டம்
டெலிவரி பாய் என அழைக்கப்படும் இவர்கள் நாளொன்றுக்கு நூற்றுக்கணக்கான கிலோ மீட்டர்கள் பயணம் செய்து பொதுமக்களுக்கு சேவை செய்து வருகின்றனர். இரு சக்கர வாகனங்கள் தான் அவர்கள் வேலையின் ஆணிவேராக இருக்கிறது. ஆனால் சமீபகாலமாக பெட்ரோல் விலை உள்ளிட்டவை காரணமாக அவர்களுக்கு பெரிய செலவு ஏற்படுகிறது. இதை எடுத்து அவர்களது சிரமத்தை போக்கும் வகையில் தமிழக அரசு அற்புத திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
ரூ.20,000 மானியம்
மின்சார ஸ்கூட்டர்கள் பெருகிவிட்ட நிலையில் டெலிவரி பணிகளில் ஈடுபடும் அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்த நபர்களுக்கு மின்சார ஸ்கூட்டர் வாங்க 20000 ரூபாய் மானியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2025-26ஆம் நிதியாண்டுக்கான தமிழக அரசின் பொது பட்ஜெட்டில், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, இணையம் சார்ந்த சேவை மற்றும் டெலிவரி தொழிலாளர்களுக்கு இந்த புதிய மானியத் திட்டத்தை அறிவித்திருந்தார்.
மின்சார ஸ்கூட்டர் மானியம்
அதன்படி, அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்த 2,000 டெலிவரி தொழிலாளர்களுக்கு மின்சார இருசக்கர வாகனம் வாங்க தலா ரூ.20,000 மானியம் வழங்கப்படும். இதற்காக தனியாக "தமிழ்நாடு இணையம் சார்ந்த தற்சார்பு தொழிலாளர்கள் நலவாரியம்" உருவாக்கப்பட்டுள்ளது. இந்நலவாரியத்தில் ஏராளமான டெலிவரி தொழிலாளர்கள் இதுவரை பதிவு செய்துள்ளனர்.
அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியம்
இந்த நிலையில் தற்போது அவர்களின் தகுதியின் அடிப்படையில் 2000 பயனாளிகள் தேர்வு செய்யப்பட இருக்கின்றனர். அவர்களுக்கு 20 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்க நான்கு கோடி ரூபாய் நிதியானது ஒதுக்கப்பட்டு இருக்கிறது. இத்திட்டத்தில் டெலிவரி வேலைகளை பார்க்கும் அனைத்து தொழிலாளர்களும் பயன்பெற முடியும். ரூ.20,000 வரை மானியம் பெறலாம். தகுதியானவர்கள் இத்திட்டத்துக்கு இப்போது விண்ணப்பிக்கலாம். இந்த திட்டத்தின் கீழ் இ-ஸ்கூட்டர் வாங்க மானியம் பெறுவதற்கு தமிழ்நாடு உடல் உழைப்பு தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்ய வேண்டும்.
ஸ்விக்கி டெலிவரி பாய்
இவர்கள், சொமாட்டோ, ஸ்விக்கி, அமேசான் போன்ற ஆன்லைன் சார்ந்த அல்லது டெலிவரி நிறுவனங்களில் பணியாற்றுபவர்களாக இருக்க வேண்டும். தகுதியானவர்களாக இருப்பின் www.tnuwwb.tn.gov.in இணையதளத்தில் இ-ஸ்கூட்டர் மானியம் பெற விண்ணப்பிக்கலாம். மேலும், பதிவு பெறாத தொழிலாளர்களும் நலவாரியத்தில் பதிவு செய்யவும் மேற்கண்ட இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கவும். எப்படி விண்ணப்பிப்பது என்பது தெரியவில்லை என்றால் அருகில் உள்ள இ-சேவை மையத்துக்கு சென்று விண்ணப்பிக்கலாம். கூடுதல் தகவல்களுக்கு, உங்கள் மாவட்டத்தில் உள்ள தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தை நாடலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
-
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்! -
மொத்தமாக மாறிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் தொனியை மாற்றிய அமெரிக்க அதிபர்.. அடேங்கப்பா! -
2 வெர்ஷன்.. ஜனநாயகன் படம் இணையத்தில் லீக்கானது எப்படி? அதிகம் பலன் அடைவது யார்? அந்த மர்ம கை -
23000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பின்பும்.. டிசிஎஸ் நிறுவனத்தில் கட்டுப்படுத்த முடியாத செலவு! -
லீக் ஆன ஜனநாயகன்.. நானே ரீலிஸ் பண்ணித்தரேன்னு சொன்னேனே விஜய்.. விட்டு விளாசிய சாட்டை! -
செந்தில் பாலாஜி பெயரை சொல்லும்போது ‘டங் ஸ்லிப்’.. கோவை தெற்கில் உளறிய பியூஷ் கோயல் -
மும்பை ரெஸ்டாரண்டில் நடந்த சந்திப்பு.. சமாதானமான ஸ்மிருதி மந்தனா குடும்பம்.. மீண்டும் திருமணம்? -
ஜனநாயகன் ரூ.500 கோடி பட்ஜெட் படம்! HD பிரிண்ட்டில் வெளியானது எப்படி? தமிழக டிஜிபியிடம் புகார் -
நம்பர் 5.. அடித்து சொல்லும் சர்வேக்கள்! திமுக+ 180 இடங்களை தாண்டுகிறது! அதிமுக ஓவர்? முக்கிய கணிப்பு












Click it and Unblock the Notifications