Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சொந்தமாக யூடியூப் சேனல் நடத்த விருப்பமா? எல்லா தகவல்களையும் அறிய.. தமிழக அரசு அளிக்கும் பயிற்சி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசு சார்பில் யூடியூப் சேனல் தொடர்பான பயிற்சி வழங்கப்படுகிறது. வரும் ஏப்ரல் 22 முதல் 3 நாட்களுக்கு இந்த பயிற்சி வழங்கப்பட உள்ளது. கலந்து கொள்பவர்கள் முன்பதிவு செய்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு சார்பில் சொந்தமாக தொழில் செய்ய திட்டமிடுபவர்களுக்காக சுய தொழில் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. சமீப காலங்களில் யூடியூப் சேனல் தொடங்கி அதன்மூலம் வருமானம் ஈட்டுவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ள நிலையில், இதனை கருத்தில் கொண்டு புதிய யூடியூப் சேனல் தொடங்க விரும்புபவர்களுக்கு தேவையான வழிகாட்டல்களையும் பயிற்சிகளையும் தமிழ்நாடு அரசு வழங்குகிறது.

Tamil Nadu Government Announces 3-Day Training on Running YouTube Channels

தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சென்னையில் சொந்தமாக YouTube சேனலை உருவாக்குதல் தொடர்பான பயிற்சியானது ஏப்ரல் 22 முதல் 24 ஆம் தேதி வரை மூன்று நாட்கள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இந்நிறுவன வளாகத்தில் நடைபெற உள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "சொந்தமாக YouTube சேனலை உருவாக்குதல், வீடியோ மற்றும் ஸ்லைடு ஷோ உருவாக்கம், சமூக ஊடக சந்தைப்படுத்தல் சமூக ஊடகங்களை இணைத்தல், வாடிக்கையாளர் வலையமைப்பை எவ்வாறு அதிகரிப்பது, பயனுள்ள சந்தைப்படுத்தல் மற்றும் ஊக்குவிப்பு - ஆன்லைன் மார்க்கெட்டிங் - டொமைன் பெயர் ஹோஸ்டிங் - இணையதள வடிவமைப்பு நுட்பங்கள் ஆகியவை தலைப்புகளின் கீழ் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இப்பயிற்சியில் கலந்து கொள்ள ஆர்வமுள்ளவர்கள் (ஆண், பெண், திருநங்கைகள்) 18 வயதிற்கு மேற்பட்ட, குறைந்தபட்ச கல்வித் தகுதியாக 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பயிற்சியில் பங்கு பெறும் ஆண், பெண், திருநங்கைகள் தங்கிப் பயில்வதற்கு ஏதுவாக குறைந்த கட்டண வாடகையில் குளிரூட்டப்பட்ட தங்கும் விடுதி உள்ளது. தேவைப்படுவோர் இதற்கு விண்ணப்பித்து முன் பதிவு செய்து கொள்ளலாம்.

மேலும், இப்பயிற்சி பற்றிய விவரங்களை அறிய / பெற விரும்புவோர் www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்துக் கொள்ளலாம். அலுவலக வேலை நாட்களில் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்பு கொள்ளலாம். முகவரி தொலைபேசி / கைபேசி எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சிட்கோ தொழிற்பேட்டை, இ.டி.ஐ.ஐ அலுவலக சாலை, ஈக்காட்டுத்தாங்கல், சென்னை - 600 032. தொலைபேசி எண்: 95437 73337 / 9360221280 முன்பதிவு அவசியம். பயிற்சியின் முடிவில் அரசு சான்றிதழ் வழங்கப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+