11 ஆண்டுகளில் முதல்முறையாக.. கொட்டிய போனஸ்! தீபாவளி நேரத்தில்.. தமிழக அரசு தந்த மிகப்பெரிய சர்ப்ரைஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை; தமிழ்நாட்டில் அரசு ஊழியர்களுக்கு என்று அடுத்தடுத்து முக்கியமான சில அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் அரசு கட்டுப்பாட்டில் இயங்கும் சென்னை மெட்ரோவில் பணியாற்றும் ஊழியர்களுக்கு போனஸ் அறிவிக்கப்பட்டு உள்ளது. 11 ஆண்டுகளில் முதல்முறையாக சென்னை மெட்ரோ ரயில் ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

அதன்படி Non-Executive பணியாளர்களுக்கு மிகப்பெரிய அளவில் போனஸ் அறிவிக்கப்பட்டு உள்ளது. மொத்தமாக ரூ.15,000 போனஸாக அறிவித்தது சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம்.

bonus dearness allowance

இது போக தீபாவளிக்கு இடையே இன்னொரு முக்கியமான அறிவிப்பும் வெளியாகி உள்ளது. அரசு ஊழியர்களின் சங்கங்கள், குழுக்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் இடையே இனி 3 மாதங்களுக்கு ஒரு முறை மீட்டிங் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அதோடு இல்லாமல் அரசு துறை செயலாளர்கள் இடையே இனி 6 மாதங்களுக்கு ஒருமுறை மீட்டிங் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

கடந்த சில நாட்களாகவே தமிழ்நாட்டில் அரசு ஊழியர்களுக்கு என்று அடுத்தடுத்து முக்கியமான சில அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. சமீபத்தில்தான் தமிழ்நாடு முழுக்க அனைத்து அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் 'C' மற்றும் D' பிரிவு தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 20 விழுக்காடு வரை மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் அகவிலைப்படி எப்போது உயர்த்தப்படும் என்பது தொடர்பான விவகாரங்கள் வெளியாகி உள்ளன.

அதன்படி தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், உற்பத்தித் துறை, வாகனங்கள் மற்றும் உதிரிபாகங்கள் தயழிப்பு. பொறியியல், மருந்துகள் ஆடைகள், தோல் பொருட்கள். தொழில்நுட்பம். சேவை போன்ற அனைத்து முக்கிய துறைகளிலும் தமிழ்நாடு முன்னணி மாநிலங்களுள் குறிப்பாக தொழிற்சாலைகளின் எண்ணிக்கை மற்றும் தொழிற்சாலை ஊழியர்களின் எண்ணிக்கையிலும் முன்னிலை மாநிலமாக திகழ்கிறது.

தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஏற்ப உலகத்தரம் வாய்ந்த பொருட்களை உற்பத்தி செய்யும் திறன்மிக்க தொழிலாளர்களின் அயராத உழைப்பு மற்றும் அரசின் தொலைநோக்கு கொண்ட திட்டங்கள் இணைந்து, தமிழகம் இந்தியாவின் முன்னணி உற்பத்தி மையமாக மாறி வருவதுடன் 2030 ஆம் ஆண்டுக்குள் டிரில்லியன் அமெரிக்க டாவர்" பொருளாதாரத்தை (one trillion economy) நோக்கி பயணிக்கிறது. தொழிலாளர்களின் சக்தி தான் ஒரு உயர்த்தும் என்பதை கருத்தில் கொண்டும்.

உற்பத்தியைப் பெருக்குவதிலும் பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் அதிக பங்கு வகிக்கும் என்பதை கருத்தில் கொண்டும் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ஊக்கமும் உற்சாகமும் அளிக்கும் வகையில் 2023-24 ஆம் ஆண்டுக்கான மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகையை வழங்கிட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டுள்ளார். திருத்தப்பட்ட போனஸ் சட்டம் 2015 இன் படி, மிகை ஊதியம் பெறத் தகுதியான உச்சவரம்பு ரூ.21,000 எனவும் உயர்த்தப்பட்டுள்ளது.

அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 50 சதவீதமாக உள்ள அகவிலைப்படியை 01.07.2024 முதல் 53 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். தமிழ்நாடு அரசு வெளியிட்டல் அறிவிப்பில், நாட்டிற்கே வழிகாட்டும் வகையில் பல முன்னோடி நலத்திட்டங்களை மக்கள் நலன் கருதி சிறப்புற நடைமுறைப்படுத்துவதில் பெரும் பங்காற்றும் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலனை இந்த அரசு கருத்தில் கொண்டு, அவர்களது நலன் காக்கும் வகையில் பல்வேறு முன்முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த வகையில் ஒன்றிய அரசுப் பணியாளர்களுக்கு 01.07.2024 முதல் 50 சதவீதமாக உள்ள அகவிலைப்படி 53 சதவீதமாக அண்மையில் உயர்த்தப்பட்டுள்ள நிலையில் மாநில அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயன் பெறும் வகையில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், இதனை கனிவுடன் பரிசீலித்து 01.07.2024 முதல் மாநில அரசுப் பணியாளர்களுக்கும் அகவிலைப்படியை உயர்த்தி வழங்கிட ஆணையிட்டுள்ளார்கள்.

இதனால் 50 சதவீதமாக உள்ள அகவிலைப்படி 3 சதவீதம் உயர்ந்து 01.07.2024 முதல் 53 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும். இத்த அகவிலைப்படி உயர்வால், சுமார் 16 இலட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள். இதனால் ஆண்டு ஒன்றுக்கு அரசுக்கு ரூபாய் 1931 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும். எனினும், அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள். ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் நலன் கருதி இதற்கான கூடுதல் நிதியை அரசு ஒதுக்கீடு செய்யும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+