அரசு ஊழியர்களுக்கு ஓய்வு பெறும் வயது 62 ஆக அதிகரிப்பா? தமிழக அரசின் அதிகாரப்பூர்வ தகவல் என்ன?
சென்னை: அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 62 என உயர்வதாக வெளியான தகவல் வதந்தி என தமிழக அரசு விளக்கமளித்துள்ளது. மேலும் அரசு ஊழியர்களின் ஓய்வு குறித்து எந்த வதந்தியும் பரப்ப வேண்டாம் என தமிழக அரசு எச்சரிக்கையும் விடுத்துள்ளது. தற்போது அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 58 ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக அரசு ஊழியர்களின் பதவிக்காலம் 58 வயது வரை ஆகும். 58 வயது ஆனதும் அவர்கள் ஓய்வு பெறுவார்கள். உயர் பதவிகளுக்கு சில நேரங்களில் பதவி நீட்டிப்புகள் வழங்கப்படும். இது அவர் பணிசெய்யும் பதவியை பொருத்தது, ஆளும் அரசு சார்ந்தது ஆகும்.

இந்த நிலையில் அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 62 ஆக உயர்த்த தமிழக அரசு முடிவு எடுத்துள்ளதாக தகவல்கள் சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் தமிழக அரசு இது குறித்து விளக்கம் அளித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு கூறுகையில் அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 62 ஆக மாற்ற எந்த தீர்மானமும் நிறைவேற்றப்படவில்லை, வயதை அதிகரிக்க எந்த ஆலோசனையும் மேற்கொள்ளவில்லை.
அரசு ஊழியர்களின் ஓய்வு வயது உயர்வதாக வெளியாகும் தகவல் வதந்தி. தமிழ்நாடு அரசு ஊழியர்களின் ஓய்வு குறித்து எந்த வதந்தியும் பரப்ப வேண்டாம் என தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

நடந்தது என்ன?: தமிழக அரசில் பணியாற்றி வரும் 40 சதவீதம் பேர் அடுத்தடுத்த ஆண்டுகளிலஸ் ஓய்வு பெறவுள்ளார்கள். இந்த நிலையில் அவர்களுக்கான பணப்பலன்களை வழங்க வேண்டிய சூழல் நிலவுகிறது. இதனால் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 62ஆக உயர்த்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக ஆசிரியர் சங்கங்கள் குற்றம்சாட்டின.
அதாவது அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 62 ஆக மாற்றியமைத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டு தலைமைச் செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாவும் இதுகுறித்து 15 நாட்களுக்குள் அரசாணை வெளியிட வாய்ப்புள்ளதாகவும் சமூகவலைதளங்களில் தகவல்கள் பரவின. இந்த நிலையில்தான் தமிழக அரசின் உண்மைக் கண்டறியும் குழுவான தமிழ்நாடு ஃபேக்ட் செக், இது முற்றிலும் வதந்தி என தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications