தமிழக அரசு ஊழியர்களுக்கு வந்தது ஜாக்பாட்.. அந்த 2 மேட்டர்..ஒரேயடியா எகிறிய முன்பணம்.. எவ்ளோ பாருங்க
சென்னை: தமிழக அரசு ஊழியர்களின் குழந்தைகள் உயர்கல்வி பயில்வதற்கான கல்வி முன்பணத்தை உயர்த்தி தமிழக அரசு தற்போது அறிவித்துள்ளது. இது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது.
அரசு ஊழியர்களின் நலன் கருதி பல்வேறு நலத்திட்ட உதவிகளையும், அறிவிப்புகளையும் அறிவித்து, அதை தீவிரமாக செயல்படுத்தியும் வருகிறது தமிழக அரசு.. ஊழியர்கள் மட்டுமின்றி, அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் நலனையும் கருத்தில் கொண்டு, சில அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.

அரசு அதிரடி: அப்படித்தான், இப்போதும், ஒரு அதிரடியை தந்து திக்குமுக்காட வைத்துள்ளது.. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு, அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கை இதுதான்:
அரசு ஊழியர்களின் குழந்தைகள் உயர்கல்வி பயில்வதற்கான கல்வி முன்பணம் ரூ.1000ம், பல்தொழில்நுட்ப கல்வி பயில்வதற்கு ரூ.500ம் வழங்கப்பட்டு வந்த நிலையில், அதனை உயர்த்தி முறையே ரூ.1000லிருந்து ரூ.1500ஆகவும், ரூ.500லிருந்து ரூ.750ஆகவும் அரசாணை ஆணையிடப்பட்டது.
அரசாணை: அரசு ஊழியர்களின் குழந்தைகள் கல்வி பயிலும் நிலையில் தொழில் முறை கல்வி ரூ.1,500லிருந்து ரூ.2,500, கலை மற்றும் அறிவியல் கல்லூரி ரூ.1,500 லிருந்து ரூ.2000, பல்தொழில் நுட்ப கல்லூரி ரூ.750லிருந்து ரூ.1,000 ஆகவும், அரசாணை வெளியிடப்பட்டு முப்பதாண்டுகள் கடந்த நிலையில் அரசு ஊழியர்களின் நலனை கருத்தில் கொண்டு, அவர்களது குழந்தைகள் உயர்கல்வி பெறுவதற்கு வழங்கப்பட்டு வந்த கல்வி முன்பணத் தொகை கீழ்க்கண்ட நிபந்தனைகளுடன் தற்போது அரசு உயர்த்தி ஆணையிடப்படுகிறது.
இந்த உயர்த்தப்பட்ட கல்வி முன்பண தொகை 2023-24 கல்வி ஆண்டிலிருந்து வழங்கப்படும். தொகுதி சி மற்றும் டி ஊழியர்களுக்கு, ஒரு மாத அடிப்படை ஊதியத்திற்கு சமமான தொகை அல்லது கீழே பரிந்துரைக்கப்பட்ட வரம்புகளில் எது அதிகமோ அத்தொகை அனுமதிக்கப்படும்.
உயர்த்தி அறிவிப்பு: தொகுதி ஏ மற்றும் பி அலுவலர்களுக்கு ஒரு மாத அடிப்படை ஊதியத்தில் 50% அல்லது கீழே பரிந்துரைக்கப்பட்ட வரம்புகளில் எது அதிகமோ அந்த தொகை அனுமதிக்கப்படும்.
அரசு ஊழியர்களின் குழந்தைகள் கல்வி பயிலும் நிலையில் முந்தைய வரம்பு தற்போது உயர்த்தப்பட்ட வரம்பு தொழில் முறை கல்வி ரூ.2,500 லிருந்து ரூ.50,000, கலை மற்றும் அறிவியல் கல்லூரி ரூ.2,000 லிருந்து ரூ.25,000, பல்தொழில்நுட்ப கல்லூரி ரூ.1,000 லிருந்து ரூ.25,000 தற்போது உயர்த்தப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளது.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications