தமிழக அரசு ஊழியர்களுக்கு ஸ்வீட் நியூஸ்.. சம்பளம் எகிறுது.. அகவிலைப்படி உயர்வு வேற.. கசியும் தகவல்
சென்னை: தமிழக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு 4% ஆக இருக்கும் என்ற தகவல் வெளியாகிவரும் நிலையில், அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாக போவதாக தகவல் வெளியாகி உள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜனவரி மற்றும் ஜூலை மாதத்தில் அகவிலைப்படி சம்பள உயர்வு வழங்கப்படுவதை போலவே, தமிழக அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டும்...

நெருக்கடிகள்: ஆனால், கடும் நெருக்கடி, கடன் சுமை மற்றும் கொரோனாவினால் ஏற்பட்ட வருவாய் இழப்பு போன்ற காரணத்தினால் தமிழக அரசு ஊழியர்களுக்கு சரியான நேரத்தில் அகவிலைப்படி உயர்வினை வழங்கப்படாமலேயே இருக்கிறது.
எனவேதான், மத்திய மற்றும் தமிழக அரசு ஊழியர்கள் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து வருகிறார்கள்... மத்திய அரசு ஊழியர்களுக்கு இன்னும் ஓரிரு நாட்களில் அடுத்த அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும் என தகவல் வெளியாகியிருக்கிறது. குறிப்பாக, 3 சதவீதம் உயர்த்தி இப்போதுள்ள 42 சதவீதத்தில் இருந்து 45 சதவீதமாக அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது.
செலவுகள்: அகில இந்திய ரயில்வே பொதுச்செயலாளர் சிவ கோபால் மிஸ்ரா இதை பற்றி சொல்லும்போது, அகவிலைப்படி 4% உயர்த்தப்படும் என்று எதிர்பார்த்தோம். இப்போது ஒரு கோடிக்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் 42 சதவீத அகவிலைப்படியைப் பெறுகின்றனர். செலவுகள் அதிகரித்து வருவதால் அகவிலைப்படியை மத்திய அரசு உயர்த்தினால் பெரும் உதவியாக இருக்கும் என்று தெரிவித்திருக்கிறார்.
இந்நிலையில், தமிழக அரசு ஊழியர்களுக்கு ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வு விரைவில் வழங்கப்பட்டுவிடும் என்கிறார்கள். அதாவது, தமிழக அரசு ஊழியர்களுக்கு ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி ஏப்ரல் 1-ம் தேதி முதல் வழங்கப்பட்டிருக்கிறது...
டபுள் மகிழ்ச்சி: இதையடுத்து, 4 சதவீதம் வரைக்கும் ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வு கிடைக்கும் என்கிறார்கள்.. அப்படி 4% அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டால், தமிழக அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளம் ரூ. 25,500 என்றால், ஊழியர்களுக்கு 10,610 வரைக்கும் அகவிலைப்படி உயர்வு கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்பதால், தமிழக அரசு ஊழியர்களும் மகிழ்ச்சியில் காத்துள்ளனர்.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications