Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழக அரசு ஊழியர்களுக்கு குட்நியூஸ் வருது.. அகவிலைப்படி 4% உயர்கிறது.. இன்று வெளியாகுதா அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு 4% ஆக இருக்கும் என்ற தகவல் வெளியாகிவரும் நிலையில், அதற்கான அறிவிப்பு இன்று வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜனவரி மற்றும் ஜூலை மாதத்தில் அகவிலைப்படி சம்பள உயர்வு வழங்கப்படுவதை போலவே, தமிழக அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டும்...

 Tamil nadu government employees DA hike will be announcement today

ஆனால், கடும் நெருக்கடி, கடன் சுமை மற்றும் கொரோனாவினால் ஏற்பட்ட வருவாய் இழப்பு போன்ற காரணத்தினால் தமிழக அரசு ஊழியர்களுக்கு சரியான நேரத்தில் அகவிலைப்படி உயர்வினை வழங்கப்படாமலேயே இருக்கிறது.

எனவேதான், தமிழக அரசு ஊழியர்கள் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.. அதன்படியே, 38 சதவீதமாக இருந்த அகவிலைப்படி 4% அதிகரிக்கப்பட்டு கடந்த ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் 42 சதவீதமாக உயர்த்தப்பட்டது.

அறிவிப்பு வந்தது: இது தொடர்பாக தமிழக அரசும் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது.. இதையடுத்து, 4% அகவிலைப்படியானது, 2023 ஏப்ரல் 1ம் தேதி கணக்கிட்டு வழங்கப்படும் என்றும், அரசு ஊழியர்களுக்கான சம்பளத்தில் அகவிலைப்படி ரூ.10,710 உயர வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டது.

அதன்படி, இப்போதைய அறிவிப்பின்படி 4% அகவிலைப்படி உயர்வால், அரசு ஊழியர்களின் அடிப்படைச் சம்பளம் மாதம் ரூ.25,500 என்றால், ஊழியரின் அகவிலைப்படி 10,710 ஆக உயரக்கூடும்.. அதாவது, ஊழியருக்கு ரூ.1,020 கூடுதல் சம்பளம் கிடைக்கும் என்றும் கணிக்கப்பட்டது.

ஆனால், ஆனால் அவை ஏப்ரல் முதல் நாளை முன்தேதியிட்டு வழங்கப்படும் என்று அறிவித்திருந்ததால், இதை எதிர்த்து அரசு ஊழியர்கள், ஜனவரி முதல் உயர்த்தப்பட்ட அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

ஜூலை மாதம்: இதைடுத்து, தமிழக அரசு ஊழியர்களின் இந்த கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டு ஜனவரி முதல் நிலுவை தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. மேலும், இன்று துவங்கிஉள்ள ஜூலை முதலான மாதத்தின் அகவிலைப்படி 4% அதிகரிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளம் உயரும் என்பதால் மகிழ்ச்சியில் உள்ளனர்.

அப்படியானால், தமிழக அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளம் மாதம் ரூ.25,500 என்றால், ஊழியரின் அகவிலைப்படி ரூ.10,710 ஆக உயரும் என தெரிகிறது.. இதுபோலவே, மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜனவரி மாதம் 4% அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்ட நிலையில் தற்போது ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வினை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+