Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான ஜாக்பாட்.. சம்பளம் உயருகிறதா.. மீண்டும் அகவிலைப்படி? செம எதிர்பார்ப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 4% உயர்த்தப்பட்ட நிலையில், அதுகுறித்து மேலும் ஒரு மகிழ்ச்சிகரமான தகவல் ஒன்று வட்டமடித்து வருகிறது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜனவரி மற்றும் ஜூலை மாதத்தில் அகவிலைப்படி சம்பள உயர்வு வழங்கப்படுவதை போலவே, தமிழக அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டும்...

 Tamil nadu government employees salary increment and DA hike for tn government staffs

ஆனால், கடும் நெருக்கடி, கடன் சுமை மற்றும் கொரோனாவினால் ஏற்பட்ட வருவாய் இழப்பு போன்ற காரணத்தினால் தமிழக அரசு ஊழியர்களுக்கு சரியான நேரத்தில் அகவிலைப்படி உயர்வினை வழங்கப்படாமலேயே இருக்கிறது. எனவேதான், தமிழக அரசு ஊழியர்கள் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.. அதன்படியே, 38 சதவீதமாக இருந்த அகவிலைப்படி 4% அதிகரிக்கப்பட்டு கடந்த ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் 42 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

அறிவிப்பு வந்தது: இது குறித்து தமிழக அரசு ஒரு அறிக்கையையும் வெளியிட்டிருந்தது. அதில், "அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் கோரிக்கையான அகவிலைப்படி உயர்வு குறித்து கனிவுடன் பரிசீலித்து இந்த உத்தரவினை 1.4.2023 முதல் செயல்படுத்திட முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்.

இதன்படி தற்போது 38 சதவீதமாக உள்ள அகவிலைப்படி 1.4.2023 முதல் 42 சதவீதமாக உயர்த்தப்பட்டு வழங்கப்படும். இதனால் 16 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன் பெறுவார்கள். இந்த உயர்வால் ஆண்டு வந்திருக்கு தமிழ்நாடு அரசுக்கு 2,366.82 கோடிகள் செலவினம் ஏற்படும். எனினும் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலம் கருதி இந்தக் கூடுதல் நிதியடி அரசு ஒதுக்கீடு செய்யும்" என்று அரசு தெரிவித்திருந்தது.

இவ்வாறாக, தமிழக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 4% உயர்த்தப்பட்டுள்ளது, அரசு ஊழியர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்து வருகிறது.. இதனால், அரசு ஊழியர்களுக்கான சம்பளத்தில் அகவிலைப்படி ரூ.10,710 உயர வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டது.

கூடுதல் உயர்வு: மேலும், இப்போதைய அறிவிப்பின்படி 4% அகவிலைப்படி உயர்வால், அரசு ஊழியர்களின் அடிப்படைச் சம்பளம் மாதம் ரூ.25,500 என்றால், ஊழியரின் அகவிலைப்படி 10,710 ஆக உயரக்கூடும்.. அதாவது, ஊழியருக்கு ரூ.1,020 கூடுதல் சம்பளம் கிடைக்கும் என்றும் கணிக்கப்பட்டது. இந்நிலையில், தமிழக அரசு ஊழியர்களுக்கு மறுபடியும் அகவிலைப்படி உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..

அதாவது, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 4% அகவிலைப்படியானது, 2023 ஏப்ரல் 1ம் தேதி கணக்கிட்டு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.. ஜனவரி மாதம் உயர்த்த வேண்டிய அகவிலைப்படியை, காலதாமதமாக, அதாவது மே மாதம் உயர்த்தி அறிவித்திருந்தது.. இதனால் ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி எப்போது கிடைக்கும்? என்ற கேள்வி அன்றே எழுந்தது..

எகிறும் எதிர்பார்ப்பு: இப்போது, ஜுன் மாதம் நடைபெற்று வரும் நிலையில், ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்புகள் விரைவில் வரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறதாம்.. இது அரசு ஊழியர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+