தமிழக அரசு ஊழியர்களுக்கு நாளையே சம்பளம்.. அறிவித்த நிதித்துறை செயலாளர்.. 5 நாட்களுக்கு முன்பே ஏன்? பின்னணி
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அரசு ஊழியர்களுக்கு நாளை (செப்டம்பர் 25) சம்பளம் வழங்கப்படும் என்று தமிழக நிதித்துறை செயலாளர் அறிவித்துள்ளார். இதன் பின்னணி பற்றி இங்கு பார்க்கலாம்.

தமிழக அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு மாதமும் மாதத்தின் கடைசி நாளில் சம்பளம் வழங்கப்படும். அதன்படி ஒவ்வொரு மாதமும் 30 அல்லது 31 என்ற தேதிகளில் தான் சம்பளம் ஊழியர்களின் வங்கி கணக்குகளுக்கு செல்லும்.
அதேபோல் தான் அரசு ஊழியர்களின் ஓய்வூதிய பலன்களும் மாதத்தின் இறுதி நாட்களில் அவரவர் வங்கி கணக்குகளில் செலுத்தப்படும். இந்நிலையில் தான் செப்டம்பர் மாதத்தில் 5 நாட்களுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தமிழக நிதித்துறை செயலாளர் சித்திக் உறுதி செய்துள்ளார். அதாவது வங்கி ஊழியர்கள் வரும் 28 ம் தேதி முதல் 30ம் தேதி வரை வேலைநிறுத்தம் அறிவித்துள்ளனர். இதனால் இந்த மாதத்தில் சம்பளம் வழங்குவதில் தாமதம் ஏற்படலாம். இதனை தவிர்க்கும் வகையில் நாளைய தினமே தமிழக அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் அரசு ஓய்வூதியதாரர்களுக்கான ஓய்வூதிய பலன் உள்ளிட்டவை வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தமிழக அரசு ஊழியர்களுக்கு மட்டும் பொருந்தாது. மத்திய அரசு ஊழியர்களுக்கும் நாளையே சம்பளம் வழங்கப்பட உள்ளது. அதேபோல் மத்திய அரசு பணி ஓய்வூதியதாரர்களுக்கும் நாளை ஓய்வூதியம் வழங்கப்பட உள்ளது. இதுதொடர்பாக அனைத்து துறை அமைச்சகங்களுக்கும், மத்திய நிதி அமைச்சகம் ஏற்கனவே வழிக்காட்டுதல்களை வழங்கி உள்ளது. மத்திய நிதித்துறையின் பொது கணக்கு கட்டுப்பாட்டாளர் இதற்கான உத்தரவை ஏற்கனவே பிறப்பித்துள்ளார்.
வங்கிகள் வரும் 28 ம் தேதி முதல் 30ம் தேதி வரை தொடர்ந்து 3 நாட்கள் வேலை நிறுத்தம் அறிவித்துள்ளதால் பொதுமக்களின் சேவைகள் பெரிய அளவில் பாதிக்கப்பட உள்ளது. இதனை கருத்தில் கொண்டு மத்திய நிதி அமைச்சகம் வரும் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 27) வங்கிகள் செயல்பட உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக அனைத்து வங்கிகளுக்கும் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் வரும் ஞாயிற்றுக்கிழமை வங்கிகள் செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
