பழைய இரும்புக் கடையில் இலவச சைக்கிள்? பற்ற வைத்த ப.சிதம்பரம்.. அதெல்லாம் இல்லை.. தமிழக அரசு மறுப்பு
சென்னை: தமிழக அரசு சார்பில் மாணவ மாணவிகளுக்கு வழங்கப்பட்ட இலவச சைக்கிள் தரமற்றிருப்பதாகவும் அவை கடைகளில் விற்கப்படுவதாக சமூக வலைதளங்களிலும் தொலைக்காட்சிகளிலும் செய்திகள் வெளியானது. மத்திய முன்னாள் நிதி அமைச்சரான ப.சிதம்பரமும் இது குறித்து ட்வீட் போட்டிருந்த நிலையில் தமிழக அரசு இதனை மறுத்ததோடு விளக்க அறிக்கை அளித்துள்ளது.
தமிழக அரசின் சார்பில் கடந்த 2001ஆம் ஆண்டு முதல் பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. முதலில் SC/ST மாணவிகளுக்கு மட்டும் வழங்கப்பட்ட நிலையில், தொடர்ந்து விதிமுறைகள் தளர்த்தப்பட்டது.

தொடர் பதினோராம் வகுப்பு 12ஆம் வகுப்பு ஐடிஐ உள்ளிட்டவற்றில் படிக்கும் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. கொரோனா காரணமாக இலவச சைக்கிள் வழங்கப்படுவது நிறுத்தப்பட்டிருந்த நிலையில் 2022 ஆம் ஆண்டு முதல் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இந்த ஆண்டு தரம் இல்லாத சைக்கிள்கள் வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. இதன் காரணமாக மாணவர்கள் மற்றும் பெற்றோர் அதனை பழைய இரும்பு கடைகளுக்கு விற்று வருவதாக புகார் எழுந்திருக்கிறது. இது தொடர்பாக சமூக வலைதளங்களிலும் புகார்கள் கூறப்பட்டன. இது தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் தமிழ்நாட்டில் மாணவர்களுக்கு அரசு வழங்கிய இலவச சைக்கிள் தரமற்றவையாக இருப்பதாக தகவல் வருகிறது. எனவே தரம் இல்லாத சைக்கிள்களை திரும்ப பெற்று அவற்றிற்கு மாற்றாக தரமான சைக்கிள்களை அந்த நிறுவனங்கள் தர வேண்டும் என தமிழக அரசுக்கு வலியுறுத்தி இருந்தார்.
இந்த நிலையில் இந்த செய்தியை தமிழக அரசு மறுத்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்," 29.6.2024ஆம் தேதி தரம் குறைந்துள்ளதால், இலவசமாக வழங்கப்பட்ட மிதிவண்டிகளை விற்பனை செய்கிறார்கள் என்று தவறான செய்தி வெளிவந்துள்ளது. மாணவ, மாணவியர்களின் நலன் கருதி ஆண்டுதோறும் இலவச மிதிவண்டிகள் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் பகுதியாக அரசு நிதி உதவிபெறும் பள்ளிகளில் 11 ஆம் வகுப்பு பயிலும் அனைத்து மாணவ, மாணவியருக்கும் ஆண்டுதோறும் தோராயமாக 5 இலட்சம் மிதிவண்டிகள் வழங்கப்படுகின்றது.
இந்த அரசு பொறுப்பேற்று, கடந்த 3 ஆண்டுகளாக 16,73,374 தரமான மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளன. மிதிவண்டிகள் ஒப்பந்தப்புள்ளி சட்ட விதிமுறைகளின்படி கொள்முதல் செய்யப்படுகின்றன. மிதிவண்டிகள் தரம் இரண்டு நிலைகளில் உறுதி செய்யப்படுகின்றது.2 CTAL(Chemical Testing Analytical Lab) நிறுவனத்தில் முழுமையாக Destructive Test செய்யப்பட்டு தர அறிக்கை (Quality Test Report) பெறப்படுகிறது. அதன் பின்னரே நிறுவனங்களுக்கு கொள்முதல் ஆணை வழங்கப்படுகிறது.
மாணவர்களுக்கு மிதிவண்டிகள் வழங்கப்படுவதற்கு முன்பாக, மிதிவண்டிகள் Specificationபடி தரமாக உள்ளது என்று உறுதி செய்யப்படுகிறது. இச்செய்தி குறித்து கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தலைமையில் குழு அமைத்து கள ஆய்வு செய்து அறிக்கை அளித்துள்ளார்.
அவ்வறிக்கையின்படி செல்வபுரம், மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட மிதிவண்டிகள் பயனுள்ளதாக இருப்பதாகவும், நல்ல நிலையில் அதனை பயன்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளனர். மிதிவண்டி தரம் சார்ந்து எவ்வித புகாரும் பெறப்படவில்லை எனவும் மிதிவண்டிகளை தனியார்களுக்கு விற்பனை செய்ததாக மாணவர்களால் தெரிவிக்கப்படவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
நாளிதழில் வெளிவந்த செய்தியில் குறிப்பிட்டுள்ள கடை ஆய்வு செய்யப்பட்டதில், அங்கிருந்த சில மிதிவண்டிகள் சிறு பழுதுகளை சரி செய்வதற்காக மாணவர்களால் கடையில் கொடுக்கப்பட்டுள்ளதாகவும்,பழுதுநீக்கம் செய்யப்பட்டவுடன் மாணவர்கள் பெற்றுச் செல்வர் என்றும், அவை விற்பனை செய்வதற்காக வைக்கப்பட்டவை அல்ல என்று தெரியவருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இலவச மிதிவண்டிகள் வழங்கும் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது. மாணவ மாணவியருக்கு தரமான மிதிவண்டிகள் வழங்கப்படுகின்றது. எனவே பத்திரிகையில் வெளிவந்துள்ள செய்தி முற்றிலும் உண்மைக்குப் புறம்பான செய்தியாகும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது." என கூறப்பட்டுள்ளது.
-
அட.. இதை கவனிச்சீங்களா? தமிழகத்திலேயே 2 குடும்பம் மட்டும்தான்! திமுகவில் களமிறங்கும் தந்தை - மகன்கள் -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
DMK: 3 அமைச்சர்களுக்கு சீட் இல்லை.. ஸ்டாலின் அறிவித்த திமுக வேட்பாளர் பட்டியலில் ஷாக்! -
பெண்கள், படித்தவர்களுக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்..டாக்டர் பட்டம் பெற்றவர்கள் மட்டும் இத்தனை பேரா? -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
Election Exclusive: வரம் கொடுத்த சாமி தலையில் கை வைத்த பிரேமலதா.. திமுக தொகுதிகளை கேட்டு அடம்! குட்டையைக் குழப்பு காங்.! -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications