தற்காலிக பொறுப்பு டிஜிபி நியமனம்.. யார் அந்த ஐபிஎஸ் அதிகாரி..உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்
சென்னை: தற்காலிக பொறுப்பு டிஜிபியை நியமித்ததற்கு எதிராக மனித உரிமைகள் செயற்பாட்டாளரான மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஹென்றி திபேன் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த அவமதிப்பு வழக்கில் தமிழக அரசு விளக்கம் அளித்தது. அந்த விளக்கத்தில் டி.ஜி.பி. பரிந்துரை பெயர் பட்டியலை சேர்க்க மூத்த ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவர் (பிரமோத் குமார்) தொடர்ந்த வழக்கு காரணம் என்று கூறியது. இதையடுத்து நிரந்தர டிஜிபியை விரைந்து நியமிக்க உரிய நடவடிக்கைகளை எடுக்க யுபிஎஸ்சி மற்றும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.
மனித உரிமைகள் செயற்பாட்டாளரான மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஹென்றி திபேன் சார்பில் வக்கீல் எஸ்.பிரசன்னா தாக்கல் செய்துள்ள மனுவில், தற்காலிக பொறுப்பு டிஜிபி நியமனம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தார். அந்த மனுவில் அவர், தமிழகத்தில் டிஜிபியாக பதவி வகித்த சங்கர் ஜிவாலின் பதவிக்காலம் முடிவடைந்து விட்டது. அவரது பதவிக்காலம் முடிவடைவதற்கு 3 மாதங்களுக்கு முன்பாகவே அடுத்த டிஜிபிக்கான பரிந்துரைப் பட்டியலை தமிழக அரசு மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையமான யுபிஎஸ்சி-க்கு அனுப்பியிருக்க வேண்டும். யாரையும் தற்காலிக டி.ஜி.பி.யாக நியமிக்கக்கூடாது என்று ஏற்கெனவே பிரகாஷ் சிங் வழக்கில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆனால் தற்போது தமிழக அரசு தற்காலிக பொறுப்பு டிஜிபியாக வெங்கட்ராமனை நியமித்துள்ளது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை தமிழக அரசு மதித்து நடக்கவில்லை என்பதால், தமிழகத்தில் தற்காலிக டிஜிபியை நியமித்துள்ள தமிழக அரசின் தலைமை செயலருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரியிருந்தார்.
இந்த வழக்கை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு விசாரித்தது. மனுதாரர் ஹென்றி திபேன் சார்பில் மூத்த வக்கீல் நித்யா ராமகிருஷ்ணன் ஆஜராகி, டி.ஜி.பி. நியமன விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை தமிழ்நாடு அரசு கடைபிடிக்கவில்லை என வாதிட்டார்.
அப்போது தலைமை நீதிபதி, 'தமிழ்நாட்டில் ஏன் தற்காலிக டி.ஜி.பி.யை நியமிக்க வேண்டும்' என்று கேள்வி எழுப்பினார். இதற்கு தமிழ்நாடு அரசின் வக்கீல் சபரீஷ் சுப்பிரமணியத்துடன் ஆஜரான மூத்த வக்கீல் முகுல்ரோத்தகி, 'டி.ஜி.பி. பரிந்துரை பெயர் பட்டியலை சேர்க்க மூத்த ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவர் (பிரமோத் குமார்) மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தை நாடியிருந்தார். அவரது மனுவை மத்திய நிர்வாக தீர்ப்பாயம் கடந்த ஏப்ரல் 30-ந் தேதி நிராகரித்தது. இதைத்தொடர்ந்து அவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் 22-ந் தேதி தள்ளுபடி செய்தது என்று பதில் அளித்தார்.
தமிழ்நாடு அரசின் வாதத்தை ஏற்ற உச்ச நீதிமன்றம் , 'அடுத்த டி.ஜி.பி. நியமனத்துக்கு தமிழ்நாடு அரசு அனுப்பிய பெயர்ப்பட்டியலை மத்தியஅரசின் பணியாளர் தேர்வாணையமான யு.பி.எஸ்.சி. விரைந்து பரிசீலிக்க வேண்டும். யு.பி.எஸ்.சி. அனுப்பும் பரிந்துரை பட்டியலின் அடிப்படையில் நிரந்தர டி.ஜி.பி.யை நியமிக்கும் நடவடிக்கையை தமிழ்நாடு அரசு உடனடியாக எடுக்க வேண்டும் என உத்தரவிட்டது. இதன்படி கோர்ட்டு அவமதிப்பு வழக்கையும் முடித்து வைத்தது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications