முக கவசம் அணியாவிட்டால் அபராதம்... ஏப்.30 வரை தமிழகத்தில் தளர்வுகளுடன் லாக்டவுன்

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் ஏப்ரல் 30ஆம் தேதி வரை தளர்வுடன் கூடிய ஊரடங்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது. ஏப்ரல் 30ஆம் தேதி வரை தளர்வுடன் கூடிய ஊரடங்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

உலகம் முழுவதும் 13 கோடி பேரை கொரோனா பாதித்துள்ளது. இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தினசரியும் அதிகரித்து வருகிறது.

Tamil Nadu government extends lock down till April 30

இந்தியாவில் கடந்தாண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியது. இதன் காரணமாகக் கடந்தாண்டு மார்ச் 25ஆம் தேதி முதல் கட்டுப்பாடுகளுடன் கூடிய லாக்டவுன் அமல்படுத்தப்பட்டது. அடுத்தடுத்த மாதங்களில் ஒவ்வொரு கட்டத்திலும் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு மக்களுக்கு செலுத்தப்பட்டாலும் மாதம்தோறும் ஊரடங்கு என்பது தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது.

தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் நேற்று 2,342 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்து 84 ஆயிரத்து 094 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் 874 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக அறிவிக்கப்பட்டிருந்த ஊரடங்கு இன்றுடன் நிறைவடைகிறது. இந்தநிலையில் தளர்வுகளுடன் கூடிய லாக்டவுன் மேலும் ஒரு மாதம் நீடிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், மாநிலம் முழுவதும் தளர்வுகளுடன் கூடிய லாக்டவுன் மேலும் ஒரு மாதம், அதாவது ஏப்ரல் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என அறிவித்துள்ளது.

சர்வதேச விமானங்களுக்கான தடை தொடரும் எனவும், கொரோனா பரவலை கட்டுப்படுத்த சூழலுக்கு ஏற்ப மாவட்ட நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அமலில் உள்ள லாக்டவுன் இன்றுடன் நிறைவடைய உள்ள நிலையில் நீட்டிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+