போனஸ் தொடங்கி இன்சூரன்ஸ் வரை! தமிழக அரசு ஊழியர்களுக்கு! ஒரே மாதத்தில் 13 குட் நியூஸ் சொன்ன ஸ்டாலின்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் அரசு ஊழியர்களுக்கு என்று கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ஏகப்பட்ட அறிவிப்புகளை தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டு உள்ளார். அரசு ஊழியர்களை கவரும் விதமாக வெளியிட்ட இந்த அறிவிப்புகள் என்னனென்ன என்று இங்கே பார்க்கலாம்.

1. அரசு ஊழியர்களுக்கு கட்டணமின்றி ஆயுள் காப்பீடு, விபத்து காப்பீடு குறித்து முதல்வர் ஸ்டாலின் நேற்று அறிவிப்பு வெளியிட்டார். ஆயுள் காப்பீடு மற்றும் விபத்துக் காப்பீட்டை கட்டணமின்றி வழங்க, புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே முன்னோடி மாநிலமாக, அரசு ஊழியர்களுக்கு
இலவசமாக இந்த திட்டம் கொண்டு வரப்பட்டு உள்ளது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

2. அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக உரிய நேரத்தில் உரிய முடிவு எடுக்கப்படும் என்று அதிமுக உறுப்பினர் மரகதம் குமரவேல் கேள்விக்கு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பதில் அளித்தார். தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள் இடையே பழைய ஓய்வூதிய திட்டம் மிக முக்கிய கோரிக்கையாக இருந்து வருகிறது. தற்போது இந்த ஓய்வூதிய திட்டம் அமலுக்கு வரும் சூழல் ஏற்பட்டு உள்ளது. இதை பற்றி ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழு இது தொடர்பாக ஆய்வு பணிகளை செய்து வருகிறது.

கடந்த 01.04.2003 முதல் மாநில அரசுப் பணியாளர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதே வேளையில் ஒன்றிய அரசுப் பணியாளர்களுக்கு தேசிய ஓய்வூதியத் திட்டம் (National Pension System) 01.01.2004 முதல் அறிமுகப்படுத்தப்பட்டது. இருப்பினும் மாநில அரசுப் பணியாளர்களுக்கு தொடர்ந்து பங்களிப்பு ஓய்வூதியத் திட்டமே தொடர அனுமதிக்கப்பட்டது.

எனினும் மாநில அரசுப்பணியாளர்கள் 01:04.2003-க்கு முன்பிருந்த திட்டத்தை செயல்படுத்திட வேண்டி தொடர்ந்து கோரிக்கைகள் விடுத்து வருகின்றனர். இந்நிலையில், 24.01.2025 அன்று ஒன்றிய அரசுப் பணியாளர்களுக்கான ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் குறித்த அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. எனவே, பழைய ஓய்வூதியத் திட்டம். பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் ஆகிய மூன்று ஓய்வூதியத் திட்டங்கள் குறித்து விரிவாக ஆராய்ந்திட ஒரு குழு அமைத்திட அரசு முடிவு செய்துள்ளது.

மாநில அரசின் நிதி நிலையினையும். பணியாளர்களின் ஓய்வூதியக் கோரிக்கைகளையும் கருத்தில் கொண்டு நடைமுறைப்படுத்தத் தக்க உரிய ஓய்வூதிய முறை குறித்து பரிந்துரையினை அரசிற்கு அளித்திட அதிகாரிகள் அடங்கிய குழு ஒன்றை அமைத்து அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

3 டாஸ்மாக் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு அறிவிப்பினை அமைச்சர் செந்தில் பாலாஜி தமிழ்நாடு சட்டசபையில் அறிவித்தார். டாஸ்மாக் பணியாளர்களுக்கு ரூ. 2000 ஊதிய உயர்வான இந்த மாதம் (ஏப்ரல்) 1 ஆம் தேதியில் இருந்து கணக்கிட்டு வழங்கப்படும் என்றும் செந்தில் பாலாஜி கூறினார். மேலும் 50,000 விவசாய மின் இணைப்புகள் இந்த ஆண்டு வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.

Tamil Nadu Government gave 13 good news to employees with bonuses leaves pension

4. தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி அறிவிப்பு இந்நேரம் அறிவிக்கப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் இதுவரை அறிவிக்கப்படவில்லை . இந்த நிலையில் இந்த வாரம் இறுதிக்குள் இதற்கான அறிவிப்பு வெளியாகலாம் என்று கூறப்படுகிறது. கடந்த அக்டோபர் மாதம் தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான அகவிலைப்படி உயர்த்தப்பட்டது. அப்போது அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்த்தி முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். பொதுவாக மத்திய அரசு எவ்வளவு அகவிலைப்படி உயர்த்துகிறதோ அதே அளவிற்குத்தான் தமிழ்நாடு அரசும் ஊழியர்களுக்கும் அகவிலைப்படி உயர்த்தப்படுவது வழக்கம். கடந்த அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு 2024 ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதியிலிருந்து அமல்படுத்தப்பட்டது.

இந்த முறை மத்திய அரசு சார்பாக 2% உயர்வு என்பது நிலை 1 அரசாங்க ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தில் ரூ. 360 ஆக இருக்கும். அதாவது ரூ.360 சம்பளத்தில் உயரும் என்று அறிவிக்கப்பட்டது. இதே அளவு அல்லது 3 சதவிகிதம் அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு வெளியாகும் வாய்ப்புகள் உள்ளன. 7வது ஊதியக் குழுவின் கீழ், மத்திய அரசு ஊழியர்களுக்கான குறைந்தபட்ச அடிப்படை ஊதியம் (நிலை 1) ரூ.18,000 ஆக நிர்ணயிக்கப்பட்டது. இவர்களுக்கு 360 ரூபாய் அகவிலைப்படி உயர்வு இருக்கும். ஜூலை-டிசம்பர் 2024 அகவிலைப்படி 3% அதிகரித்து 53% ஆக உயர்த்தப்பட்டது. தற்போது இதில் மேலும் 2% உயர்த்தப்பட்டு 55% ஆக அதிகரிக்கப்பட உள்ளது. இதன் மூலம் நாடு முழுக்க பல கோடி ஊழியர்களின் சம்பளம் உயரப்போகிறது. இதோடு அரியர் தொகை தொடர்பான விளக்கமும் தற்போது வெளியாகி உள்ளது. ஜனவரி டூ மார்ச் வரையிலான 3 மாதங்களுக்கு மட்டும் அரியர் தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அதாவது 1080 ரூபாய் வரி இவர்களுக்கு அரியர் தொகை கிடைக்கும்.

6. அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் பண்டிகைக் கால முன்பணம் ரூ.10,000ல் இருந்து ரூ.20,000 ஆக உயர்த்தி வழங்கப்படும்

7. கல்வி முன்பணம் தொழிற்கல்விக்கு ரூ.1 லட்சம், கலை, அறிவியல், மற்றும் பாலிடெக்னிக் படிப்புகளுக்கு ரூ.50,000 ஆக உயர்த்தி வழங்கப்படும்.

8. திருமண முன்பணம் ரூ.5 லட்சமாக வழங்கப்படும்

9. ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் பொங்கல் பரிசுத் தொகை ரூ.500ல் இருந்து ரூ.1,000 ஆக உயர்வு

10. ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் பண்டிகைக்கால முன்பணம் ரூ.4,000ல் இருந்து ரூ.6,000 ஆக உயர்வு

11.அரசு ஊழியர்களுக்கான 1 ஆண்டுகால மகப்பேறு விடுப்பு அவர்களின் தகுதி காண் பருவத்திலும் (Probation Period) கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்

12. முன்பு இருந்த விதிகளின்படி மகப்பேறு விடுப்பு காலமானது தகுதிகாண் பருவத்தில் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாததால் பெண் ஊழியர்களின் பதவி உயர்வு பாதிக்கப்பட்டது என்று சட்டப் சபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.

13. நிலுவையில் உள்ள அகவிலைப்படி (டிஏ) உயர்வு அரியர் தொகையை வழங்க தமிழ்நாடு அரசு ஒப்புதல் அளித்து உள்ளது. ஜூன் மாதம் வழங்கப்பட உள்ள மே மாத சம்பளத்தோடு சேர்த்து அரியர் தொகை வங்கி கணக்குகளில் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 55% ஆக உயர்த்தி மத்திய அரசு கடந்த மாதம் அறிவித்தது. இந்த 2% டிஏ உயர்வு கடந்த 78 மாதங்களில் மிக மிக குறைவானது. ஆனால் இப்போது, ​​2025 ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் பணவீக்கத்தில் மேலும் சரிவு ஏற்பட்டு உள்ளது. பணவீக்கத்தை வைத்தே அகவிலைப்படி நிர்ணயம் செய்யப்படும். 8.5 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பயனடைவார்கள் ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கும் இது பொருந்தும்

என்ன காரணம்?

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் 95 சதவீத ஆதரவு எப்போதுமே திமுகவுக்குத்தான் கிடைக்கும். அதாவது அரசு ஊழியர்கள்தான் பொதுவாக தபால் வாக்குகளை அளிப்பார்கள். எப்போதும் தபால் வாக்குகள் திமுகவிற்கே அதிகம் வரும். முக்கியமாக எடப்பாடி ஆட்சி காலத்தில் அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் பெரிதாக ஏற்றுக்கொள்ளவில்லை. முக்கியமாக எடப்பாடி பழனிசாமி நேரடியாகவே அரசு ஊழியர்கள் கோரிக்கையை நிராகரித்து உள்ளது.

இதனால் பெரும்பாலான அரசு ஊழியர்கள் திமுகவிற்கே வாக்குகளை அளித்தனர். ஆனால், ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் அரசு ஊழியர்களின் முக்கிய கோரிக்கைகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை.

அதனால் கடும் அதிருப்தியடைந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஒருங்கிணைந்து கடந்த லோக்சபா தேர்தல், இடைத்தேர்தல்களில் திமுகவுக்கு எதிராக முடிவெடுக்க வேண்டும் என தீர்மானித்திருந்தனர். அந்த வகையில் அவர்களின் ஆதரவு அதிமுக, பாஜகவுக்கு கிடைத்தது. அதற்கு உதாரணமாக, தபால் வாக்குகளை அளிக்கும் அரசு ஊழியர்கள் வாக்குகள் பெரும்பாலும் அதிமுக, பாஜகவிற்கு சென்றது. பல இடைத்தேர்தல்களில் தபால் வாக்குகளில் அதிமுக முன்னிலையில் இருந்தது.

இதை மனதில் வைத்தே அரசு ஊழியர்களின் மனதை குளிர்விக்கும் விதமாக அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டம் அடுத்த சட்டசபை தேர்தலுக்கு முன் கொண்டு வரப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் திட்டமிட்டு வருகிறாராம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+