தமிழக அரசு பேருந்துகளில் மகளிர் சுய உதவிக் குழு பெண்களுக்கு சர்ப்ரைஸ்! விதிமுறைகள் என்ன?
சென்னை: தமிழக அரசு பேருந்துகளில் மகளிர் சுய உதவிக் குழு பெண்களுக்கு சலுகை வழங்கப்பட்டுள்ளது. அதாவது ஏசி பேருந்து நீங்கலாக நகர மற்றும் புறநகர் பேருந்துகளில் பயணிக்கும் போது இந்த சலுகையை பயன்படுத்திக் கொள்ளலாம்.
தமிழக அரசு, பெண்களுக்கு ஏராளமான நலத்திட்டங்களை வழங்கி வருகிறது. அதில் முக்கியமானது அரசு பேருந்துகளில் இலவச பயணம் என்பதாகும். அந்த வகையில் தற்போது சுய உதவிக் குழு பெண்கள் பேருந்துகளில் சென்றால் இலவச பயணம்தான்.

ஆனால் அவர் தயாரிக்கும் பொருட்களை பேருந்துகளில் எடுத்துச் செல்லும் போது அதற்கு லக்கேஜ் கட்டணம் வசூலிக்கப்படும். இந்த நிலையில் தமிழக அரசு புதிய சலுகையை வழங்கியுள்ளது.
அதாவது 100 கி.மீ. வரை 25 கிலோ எடை கொண்ட பொருட்களை பேருந்துகளில் ஏற்றிச் சென்றால் அதற்கு சுமை கட்டணம் கேட்கக் கூடாது என பேருந்து நடத்துநர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அது போல் மகளிர் சுய உதவிக் குழு பெண்களை மரியாதை குறைவாக நடத்தாமல் கண்ணியமாக நடத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அது போல் ஏசி பேருந்து நீங்கலாக நகர மற்றும் புறநகர் பேருந்துகளில் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் கொண்டு செல்லும் லக்கேஜுக்கு கட்டணம் கிடையாது. எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்கள், ஆட்சேபனைக்குரிய பொருட்கள், பேருந்தில் மற்ற பயணிகளுக்கு இடையூறாக உள்ள பொருட்களை கொண்டு செல்லக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications