தங்கம் மாதிரி கொட்டிய அறிவிப்பு.. அரசு ஊழியர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்திய.. தமிழக அரசு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் அரசு ஊழியர்களுக்கு அடுத்தடுத்து முக்கியமான அதிரடி அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. கடந்த சில நாட்களாக முக்கியமான இன்ப அதிர்ச்சி அளிக்கும் அறிவிப்புகளை தமிழக அரசு வெளியிட்டு உள்ளது. அடுத்த வருடம் சட்டசபை தேர்தல் நடக்கும் நிலையில் இந்த அறிவிப்புகள் பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளன.

அரசு ஊழியர்களை கவரும் விதமாக.. அவர்ளின் பல நாள் கோரிக்கைகளை ஏற்று பல முக்கியமான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளன. இந்த அறிவிப்புகள் என்னனென்ன என்று இங்கே பார்க்கலாம்.

தமிழக அரசு போக்குவரத்து கழக 6% ஊதிய உயர்வு வழங்கப்படும் என முடிவெடுக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் அரசு போக்குவரத்து கழகங்களில் வேலை செய்யும் ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு ஒப்பந்தம் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை மேற்கொள்ளப்பட்டு வந்தது. கடைசியாக 14வது ஊதிய ஒப்பந்தம் கடந்த 2023ம் ஆண்டு முடிவடைந்தது.

Tamil Nadu Government golden announcements for Tamil Nadu Governement

டாஸ்மாக் விற்பனைப் பணியாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.2,000 ஊதிய உயர்வு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பினை டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இது குறித்து அனைத்து முதுநிலை மண்டல மேலாளர்கள் மற்றும் மாவட்ட மேலாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இதில் 1000 ரூபாய் எல்லா வகையான ஊழியர்களுக்கும், கூடுதல் 1000 ரூபாய் ஊழியர்களின் வேலை திறன் அடிப்படையிலும் வழங்கப்படும். இதில் பாட்டில்களுக்கு ரூ.10 கூடுதல் விற்ற விவகாரத்தில் சிக்கிய ஊழியர்களுக்கு அடிப்படை சம்பள உயர்வான ரூ.1000 மட்டுமே வழங்கப்படும். திறன் அடிப்படியிலான ரூ.1000 வாங்கப்பட்டது.

ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் பொங்கல் பரிசுத் தொகை ரூ.500ல் இருந்து ரூ.1,000 ஆக உயர்வு ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் பண்டிகைக்கால முன்பணம் ரூ.4,000ல் இருந்து ரூ.6,000 ஆக உயர்வு அரசு ஊழியர்களுக்கான 1 ஆண்டுகால மகப்பேறு விடுப்பு அவர்களின் தகுதி காண் பருவத்திலும் (Probation Period) கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். முன்பு இருந்த விதிகளின் படி மகப்பேறு விடுப்பு காலமானது தகுதிகாண் பருவத்தில் கணக்கில் எடுத்துக்கொள்ளப் படாததால் பெண் ஊழியர்களின் பதவி உயர்வு பாதிக்கப்பட்டது என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

அரசு ஊழியர்களுக்கு கட்டணமின்றி ஆயுள் காப்பீடு, விபத்து காப்பீடு குறித்து முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டார். ஆயுள் காப்பீடு மற்றும் விபத்துக் காப்பீட்டை கட்டணமின்றி வழங்க, புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே முன்னோடி மாநிலமாக, அரசு ஊழியர்களுக்குஇலவசமாக இந்த திட்டம் கொண்டு வரப்பட்டு உள்ளது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 2% உயர்த்தப்பட்டது. இந்த முறை அரசு சார்பாக 2% உயர்வு செய்யப்பட்டதால் நிலை 1 அரசாங்க ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தில் ரூ. 360 ஆக இருக்கும். அதாவது ரூ.360 சம்பளத்தில் உயரும் என்று அறிவிக்கப்பட்டது. 7வது ஊதியக் குழுவின் கீழ், அரசு ஊழியர்களுக்கான குறைந்தபட்ச அடிப்படை ஊதியம் (நிலை 1) ரூ.18,000 ஆக நிர்ணயிக்கப்பட்டது. இவர்களுக்கு 360 ரூபாய் அகவிலைப்படி உயர்வு இருக்கும்

அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் பண்டிகைக் கால முன்பணம் ரூ.10,000ல் இருந்து ரூ.20,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் கல்வி முன்பணம் தொழிற்கல்விக்கு ரூ.1 லட்சம், கலை, அறிவியல், மற்றும் பாலிடெக்னிக் படிப்புகளுக்கு ரூ.50,000 ஆக உயர்த்தி வழங்கப்படும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+