தமிழக அரசின் கடன் மட்டும் ரூ.9 லட்சம் கோடி.. இன்னும் 1.5 லட்சம் கோடி வாங்க திட்டம்.. ஷாக் தகவல்
சென்னை: தமிழக சட்டசபையில் 2025-26ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்தார். அதன்பிறகு தமிழக நிதித்துறை முதன்மை செயலாளர் உதயச்சந்திரன் ஐஏஎஸ் அளித்த பேட்டியில், ‛‛தமிழக அரசின் கடன் என்பது ரூ.9 லட்சம் கோடியாக உள்ளது. தமிழக அரசின் கடன் என்பது கடன் வாங்கும் வரம்புக்குள் தான் உள்ளது. இந்த ஆண்டு ரூ.1 லட்சத்து 5 ஆயிரம் கோடி கடன் வாங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது'' என்று கூறினார்.
2025-26ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. தமிழக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தமிழக சட்டசபையில் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாகின.

இந்த பட்ஜெட்டை தமிழக எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்துள்ளன. ஆளும் திமுக அரசு கடன் வாங்கி செலவிட்டு வருகிறது. புதிய திட்டங்களை அறிவிப்பது இல்லை. கடனை மட்டும் ஆண்டுக்கு ஆண்டு உயர்த்தி கொண்டே செல்கிறது என்று அதிமுக, பாஜக தலைவர்கள் கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர்.
இந்நிலையில் தான் பட்ஜெட் தாக்கலுக்கு பிறகு தமிழக அரசின் நிதி நிலைமை பற்றி நிதித்துறையின் முதன்மை செயலாளர் உதயச்சந்திரன் ஐஏஎஸ் பத்திரிகையாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறுகையில், ‛‛தமிழ்நாட்டின் மொத்தக் கடன் ரூ.9 லட்சம் கோடியாக உள்ளது. மாநில அரசின் கடன் வாங்கும் வரம்புக்குள்தான் தமிழக அரசின் கடன் உள்ளது.
கடந்த ஆண்டை விட நடப்பு ஆண்டில் ரூ.7 ஆயிரம் கோடி குறைவாக கடன் வாங்க திட்டமிட்டுள்ளோம். அதன்படி ரூ.1 லட்சத்து 5 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசிடம் இருந்து பல திட்டங்களுக்கான நிதி வந்திருந்தால் இந்த அளவு என்பது மேலும் குறைந்திருக்கும். தமிழ்நாடு அரசின் வருவாய் பற்றாக்குறை என்பது வரும் காலத்தில் ரூ.41,000 கோடியாக குறையும்'' என்றார்.












Click it and Unblock the Notifications