விவசாயிகளுக்கு ஜாக்பாட்! தோட்டக்கலை பயிர்களுக்கு மானிய மழை! தமிழக அரசின் அசத்தல் ஆஃபர்!
சென்னை: தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் கீழ் வழங்கப்படும் மானியத் திட்டத்தில் இணைந்து விவசாயிகள் பயன்பெறுமாறு, வேளாண்மை நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் கீழ் வழங்கப்படும் மானியத் திட்டம் பற்றி முழுமையாக இங்கே தொகுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான விவரம் வருமாறு;

தோட்டக்கலை இயக்கத்தின் நோக்கம்
தமிழகத்தில் 26 மாவட்டங்களில் தோட்டக்கலை பயிர்களின் சாகுபடிப் பரப்பினை அதிகரித்து, புதிய தோட்டக்கலை தொழில்நுட்பங்களை பின்பற்றி, தோட்டக்கலை பயிர்களின் உற்பத்தியை அதிகரித்து, அதன்மூலம் விவசாயிகளின் வருமானத்தை பெருக்குவதோடு, தமிழக மக்களின் ஊட்டச்சத்து பாதுகாப்பையும் உறுதி செய்வதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

எவ்வளவு மானியம்?
இத்திட்டத்தில் காய்கறிகள், பழங்கள், மலர்கள், சுவைதாளித பயிர்கள், போன்ற தோட்டக்கலை பயிர்களில் தரமான நடவுப் பொருட்கள் மற்றும் இடுபொருட்களை பெற்று, சாகுபடிப் பரப்பினை அதிகரிப்பதற்கு ஆகும் மொத்த செலவில், அரசு 40 சதவிகித மானியம் வழங்குகிறது.

பயிர் வாரியான விபரம்
காய்கறிகள் சாகுபடிக்கு மானியம்: கத்தரி, தக்காளி, மிளகாய் போன்ற காய்கறி பயிர்களின் சாகுபடிப் பரப்பினை அதிகரிப்பதற்கு எக்டருக்கு ரூ.50,000 செலவாகும். இதில், ரூ.20,000/- மதிப்புள்ள குழித்தட்டு நாற்றுக்களும், சாகுபடிக்கு தேவையான இடுபொருட்களும் மானியமாக வழங்கப்படுகின்றன. அதிக பட்சமாக ஒரு விவசாயிக்கு 2 எக்டர் வரை மானியம் வழங்கப்படும்.

பழப்பயிர்கள் மானியம்
அடர் நடவு முறையில் மா சாகுபடியினை அதிகரிப்பதற்கு எக்டருக்கு ரூ.9,800/- மானியத்தில் ஒட்டு மாஞ்செடிகளும், கொய்யா சாகுபடிக்கு எக்டருக்கு ரூ.17,600/- மானியத்தில் கொய்யா பதியன்களும், இடுபொருட்களும், திசு வளர்ப்பு முறையில் வாழை சாகுபடி மேற்கொள்ள, எக்டருக்கு ரூ.37,500/- மானியத்தில் திசு வாழைக்கன்றுகளும், இடுபொருட்களும், பப்பாளி சாகுபடியை அதிகரிக்க, எக்டருக்கு ரூ.23,100/- மானியத்தில் பப்பாளிக் கன்றுகளும், இடுபொருட்களும், எலுமிச்சை சாகுபடிக்கு எக்டருக்கு ரூ.13,200/- மானியத்தில் எலுமிச்சைக் கன்றுகளும், இடுபொருட்களும், அத்தி சாகுபடியை அதிகரிப்பதற்கு எக்டருக்கு ரூ.20,300/- மானியத்தில் அத்தி நாற்றுக்களும், இடுபொருட்களும், வெண்ணைய் பழம், நெல்லி, பலா சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு எக்டருக்கு ரூ.14,400/- மானியத்தில் நடவுச் செடிகளும், இடுபொருட்களும் வழங்கப்படும்.

தரமான கன்றுகள்
தரமான கன்றுகள் அரசு தோட்டக்கலை பண்ணைகளில் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு மானியத்தில் விநியோகம் செய்யப்படுகின்றன.
மேலும், டிராகன் பழ சாகுபடிக்கு பந்தல் அமைக்கவும், நடவுப்பொருட்கள் மற்றும் இடுபொருட்களுக்காகவும் எக்டருக்கு ரூ.96,000/-ம், அன்னாசி சாகுபடிக்கு எக்டருக்கு ரூ.26,300/-ம், ஸ்ட்ராபெரி சாகுபடிக்கு எக்டருக்கு ரூ.1,12,000/-ம் நடவுக்குப் பின், கள ஆய்வு மேற்கொண்டு, பின்னேற்பு மானியமாக வழங்கப்படும். பழப் பயிர்களை பொறுத்தவரை, அதிகபட்சமாக ஒரு விவசாயிக்கு நான்கு எக்டர் வரை மானியம் வழங்கப்படும்.

மலர் சாகுபடி மானியம்
உதிரி மலர்கள் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ரூ.16,000/- மதிப்பிலான மலர் செடிகளும், கிழங்கு வகை மலர்களில், நடவுக்குப்பின் வயல்களை கள ஆய்வு செய்து பின்னேற்பு மானியமாக எக்டருக்கு ரூ.60,000/-ம், கொய்மலர்கள் சாகுபடிக்கு எக்டருக்கு ரூ40,000/-ம் மானியமாக வழங்கப்படுகிறது. மலர்கள் சாகுபடியில் அதிகபட்சமாக ஒரு விவசாயி இரண்டு எக்டர் வரை மானியம் பெறலாம்.

கோக்கோ,முந்திரி மானியம்
கோக்கோ, முந்திரி சாகுபடி செய்ய முன்வரும் விவசாயிகளுக்கு எக்டருக்கு ரூ.12,000/- மானியத்தில் நடவுப்பொருட்களும், இடுபொருட்களும் விநியோகம் செய்யப்படும்.

மானியம் பெற தகுதிகள்
சொந்தமாக நிலம் வைத்திருக்கும் விவசாயிகளும், குத்தகை விவசாயிகளாக இருந்தால் 10 ஆண்டு காலத்திற்கு குத்தகை எடுத்து குத்தகையை பதிவு செய்த விவசாயிகளும் இத்திட்டத்தின் மூலம் பயன் பெறலாம். கிராமங்களின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காக அரசு அறிமுகப்படுத்தியுள்ள கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டம் செயல்படுத்தப்படும் கிராமப் பஞ்சாயத்துகளில் உள்ள விவசாயிகளுக்கும், சிறு, குறு, மகளிர் விவசாயிகளுக்கும் முன்னுரிமை வழங்கப்படும்.

என்னென்ன ஆவணங்கள் ?
பட்டா, சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை, புகைப்படம், வங்கி பாஸ் புத்தகத்தின் முதல் பக்கத்தின் நகல் போன்ற ஆவணங்கள். முன்பதிவுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி; தேசிய தோட்டக்கலைத் திட்டத்தில் மானியம் பெற விரும்பும் விவசாயிகள் தங்கள் பெயரை https://www.tnhorticulture.tn.gov.in/tnhortnet/login.php என்ற இணையதளத்தில் பதிவு செய்து பயன்பெறலாம். கூடுதல் விபரங்களுக்கு அருகில் உள்ள வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகலாம்.

அமைச்சர் வேண்டுகோள்
தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள இத்திட்டத்தின் மூலம் தோட்டக்கலை பயிர்களின் சாகுபடி 25,680 எக்டர் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, ஆண்டு முழுவதும் வேலைவாய்ப்புடன், கூடுதல் வருமானமும் ஈட்டுவதற்காக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள இத்திட்டத்தில் தகுதியுள்ள அனைத்து விவசாயிகளும் இணைந்து பயன்பெறுமாறு வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கேட்டுக் கொண்டுள்ளார்.
-
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
Tamil New Year Wishes in Tamil: சித்திரை திருநாளில் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் பகிர அழகிய படங்கள் -
ஜனநாயகன் லீக்.. இயக்குநர் அமீர் கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு.. ஆர்கே செல்வமணி விளக்கம்












Click it and Unblock the Notifications