ஆவினில் 500 மிலி பால் பாக்கெட்டுகளின் விலை உயர்வு? வேகமாக பரவும் தகவல்..அரசு சொன்ன முக்கிய விளக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆவின் டிலைட் 500 மிலி பால் பாக்கெட்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக தகவல்கள் பரவி வரும் நிலையில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் மேலாண்மை இயக்குநர் விளக்கமளித்துள்ளார்.

தமிழ்நாட்டில் பால்வளத்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் ஆவின் செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் ஆவின் டிலைட் 500 மில்லி லிட்டர் பால் பாக்கெட் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனை ஏராளமான மக்கள் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.

Tamil Nadu government has increased the price of a Delite milk packet?, government explains

இந்நிலையில் தான் ஆவின் டிலைட் 500 மிலி பால் பாக்கெட்டுகளின் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக இன்று தகவல்கள் பரவி வருகின்றன. இதுதொடர்பாக தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் மேலாண்மை இயக்குநர் விளக்கம் அளித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: ஆவின் பால் விலை உயர்வு என்னும் தலைப்பில் தொலைக்காட்சிகளில் 200 மிலி பாக்கெட் விலை உயர்த்தப்பட்டுள்ளதாகவும், ஆரஞ்சு நிற பாக்கெட்டுகளில் விற்பனை செய்யப்படும் பால் இன்று முதல் Violet நிற பாக்கெட்டுகளில் விற்பனை செய்யப்படவுள்ளதாகவும் செய்தி வெளியாகி உள்ளது. இதுகுறித்து கீழ்கண்ட தெளிவுரை வழங்கப்படுகிறது.

திருநெல்வேலி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் (ஆவின்) தினசரி 4,100 லிட்டர் பால் உற்பத்தி செய்யப்பட்டு, தினசரி 33,700 லிட்டர் பால் பாக்கெட்டுகளாக பொதுமக்கள் பயன்பெறும் வகையில் திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்ட மக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

பொதுமக்கள் விருப்பத்திற்கேற்க அவ்வப்போது புதிய பால் மற்றும் பால் உபபொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. திருநெல்வேலி ஆவின் மூலம் Cow Milk அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிது. மேலும் இந்த வகை Cow Milk 200 ml Delite எனும் பெயரில் ரூ.10க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே சமயத்தில் ஆவின் டிலைட் 500 மிலி பாக்கெட்டுகள் தொடர்ந்து பழைய விலைக்கே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. தொடர்ந்து ஆவின் டிலைட் பால் விற்பனை அதிகரித்துள்ளதே தவிர குறையவில்லை என்பதனையும் தெரிவித்து கொள்கிறோம்.

மேலும் பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் சமன்படுத்திய பால் (T.M), நிறை கொழுப்பு பால் (FCM) மற்றும் ஆவின் டிலைட் 500 மிலி பாக்கெட்டுகளை அதே விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை என்பதினை கனிவுடன் தெரிவித்து கொள்கிறோம்'' என கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+