தமிழகத்தில் 21 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்.. முக்கிய பொறுப்புகளில் யார், யார் தெரியுமா?
சென்னை: தமிழகத்தில் 21 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
பள்ளிகல்வித்துறை முதன்மை செயலாளர் தீரஜ்குமார், உயர்கல்வித்துறை முதன்மை செயலாளராக மாற்றப்பட்டுள்ளார். பள்ளிகல்வித்துறை முதன்மை செயலாளராக காகர்லா உஷா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் மாற்றப்பட்டுள்ளார். வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளராக ஜோதி நிர்மலா சாமி நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஊரக மற்றும் உள்ளாட்சித் துறை முதன்மை செயலாளராக கே.கே.கோபால் நியமிக்கப்பட்டுள்ளார்.
சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை முதன்மை செயலாளராக சுப்ரியா சாகு நியமனம் செய்யப்பட்டுள்ளார். பொதுப்பணித்துறை கூடுதல் தலைமை செயலாளராக சந்தீப் சக்சேனா நியமிக்கப்பட்டுள்ளார். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை முதன்மை செயலாளராக குமார் ஜெயந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.
வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை முதன்மை செயலாளராக ஹிதேஷ் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சுற்றுலா, பண்பாட்டு மற்றும் சமய அறநிலைத்துறை செயலாளராக சந்திர மோகன் நியமிக்கப்பட்டுள்ளார்.
வேளாண் உற்பத்தி ஆணையர், வேளாண் மற்றும் உழவர் நலத்துறை செயலாளராக சமயமூர்த்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார். சிறு, குறு மற்றும் நடுத்தர தொழித்துறை செயலாளராக அருண் ராய் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
போக்குவரத்துத் துறை கூடுதல் தலைமைச் செயலாளராக தயானந்த் கட்டாரியா நியமிக்கப்பட்டுள்ளார்.
கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்துறை முதன்மை செயலாளராக அபூர்வா நியமிக்கப்பட்டுள்ளார். எரிசக்தி துறை முதன்மை செயலராக தர்மேந்திர பிரதாப் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை முதன்மை செயலாளராக மணிவாசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தொழிலாளர் நலத்துறை செயலாளராக கிர்லோஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளராக லாவ்வேனா நியமனம் செய்யப்பட்டுள்ளார். சமூக நலன் மற்றும் சத்துணவு திட்ட துறை செயலாளராக ஷம்பு கல்லோலிகர் நியமிக்கப்பட்டுள்ளார். பிறப்படுத்தபட்டோர் மற்றும் மிகவும் பிறப்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை செயலாளராக கார்த்திக் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications